> என் ராஜபாட்டை : பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?

.....

.

Wednesday, July 20, 2011

பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?

இணைய உலகில் நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக இருப்பது கூகிளின் பிளாக்கர் தளமாகும் (Blogger). இங்கே தான் எல்லோரும் அவர்களின் கருத்துகளை எழுதி வலைப்பூவில் வெளியிடுகின்றனர். இது ஒரு இலவச சேவையாகும். கணிணியின் தகவல்களைப் பாதுகாப்புக்கு பேக்கப் செய்வது போல பிளாக்கர் வலைப்பூவையும் பேக்கப் செய்து கொண்டால் எதாவது பிரச்சினையின் போதும் தவறுதலாக அழிந்து விடும் போதும் மீட்டுக் கொள்ள முடியும்.
நமது வலைப்பூவை அவ்வப்போது காப்புநகல் எடுத்து வைத்துக் கொள்வது ஆபத்தின் போது நன்மை பயக்கும். இதற்கு பிளாக்கர் தளத்தில் நுழைந்து Blogger Settings -> Basic என்ற மெனுவிற்குச் செல்லவும். அதில் Export Blog என்பதைக் கொடுத்தால் உங்கள் வலைப்பூவின் நிரல்வரிகள் கணிணியில் சேமிக்கப்படும்.

பேக்கப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து வலைப்பூவை எப்படி மீட்பது?
Blogger Settings-> Basic என்ற மெனுவில் சென்று Import Blog என்பதைக் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே சேமித்துள்ள கோப்பைத் தேர்வு செய்து Import என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்த நேரத்தில் “Automatically publish all imported posts” என்பது டிக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பதிவுகளும் மீட்கப்படும்.

இந்த எளிய வசதியினைப் பயன்படுத்தி பிளாக்கர் வலைப்பூவை சேமிக்க முடியும். மீட்டுக் கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு பதிவின் வகைகளும் கருத்துரைகளும் சேர்ந்தே மீட்கப்படும் என்பதால் இது பிளாக்கர் பயன்படுத்துவோருக்கு சிறப்பான வசதியாகும்.

Thanks: Vanakkamnet

17 comments:

  1. அன்புடன் வணக்கம் ராஜா,

    வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தேவையான
    பயனுள்ள குறிப்பு இது..

    ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

    நன்றி..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ராஜா.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் ,நன்றி நண்பரே

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
  5. நன்றி மாப்ள தகவலுக்கு!

    ReplyDelete
  6. பலருக்கு பயன்படும் தகவல் அண்ணா !

    ReplyDelete
  7. நல்ல தகவல் நண்பரே ..

    ReplyDelete
  8. மிக்க நன்றி ராஜா
    பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள தகவல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிறந்த பயனுள்ள தகவல்..நன்றி பாஸ்!

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் ராஜா பாராட்டுக்கள்.. நன்றி

    ReplyDelete
  12. நல்ல பயனுள்ள தகவல் ;

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...