உள்ளாட்சி தேர்தல் களைகட்ட துவங்கிவிட்டது. வீதிதோறும் பிட் நோட்டீஸ் வினியோகம், வீடு, வீடாக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு என தூள் பறக்கின்றது.
யார் எந்த கட்சி, எந்த சின்னம் என்ன பதவி என்று தெரிந்துகொள்ளுவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் போலஉள்ளது.
கடந்த தேர்தலில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் கவுன்சிலர்க்கு நின்றார். அவர் நின்ற கட்சியே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் நம்ம தெருவை சார்ந்தவர், ஐய்யப்ப பக்தர் , அமைதியானவர் என்ற (தவறான)எண்ணத்தில் அவருக்கு ஒட்டு போட்டேன், மற்றவர்களையும் போட சொன்னேன். நல்ல ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.
சில நாட்களில் அவர் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. ஒரு முறை என் தம்பிக்கும், ஊரில் உள்ள சில இளைஞ்சர்களுக்கும் சண்டை. இருவர்மீதுமே தவறுஉள்ளது. சண்டை பெரிதாக மாறுவது போல் இருந்ததால் அவரிடம் சென்று “நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள், நீங்கள் வந்து சமாதானம் செய்யுங்கள் “ என்றேன்.
அதற்க்கு அவர் “முடியாது” என்றோ , “ என் பேச்சை கேட்க்கமாட்டார்கள் “ என்றோ சொல்லியிருந்தால் பரவாயில்லை. அவறோ “ நீ வேற சாதிகாரன், அவர்கள் என் சாதிகாரன். அவர்கள் சொல்லுவதை நீ கேளு, உன் பேச்சை நான் கேட்க்கமுடியாது” என்று. ஓட்டு கேட்க்கும் போது வராத சாதி, சண்டை என்றதும் வருகிறது.
இப்போது மீண்டும் அவர் தேர்தலில் நிற்க்கின்றார். நேற்று வீட்டுக்கு வந்து ஒரு துண்டு போட்டு “தம்பி மறக்காம ஓட்டுபோடுங்க, நாமலாம் ஒரே தெரு, ஒன்னுகுள்ள ஒன்னு” என சொல்கிறார். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் காலில் விழுகின்றார்.
அன்று வந்த சாதி , தேர்தல் வந்ததும் எங்கே போனது ? என் சாதிகாரன் ஓட்டு மட்டும் போதும் என சொல்ல வக்கில்லை, இவர்கள் ஜெய்யித்து இன்ன கிழிக்க போகின்றார்கள். அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?
Tweet |
ஹூம்!நீங்க வேற!
ReplyDeleteத.ம.1
நிதர்சனம் கண்கூடா பாத்துட்டீங்க அதான்!
ReplyDelete///அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா///
ReplyDeleteஅரசியல்வாதிக்கு இவை இருந்தால் எப்படி பாஸ்?
அரசியல்ல இதெல்லாம் சகஜம் பாஸ் ஹீ ஹீ
ReplyDeleteகண்டிப்பா போய்டும்!!என்ன புதுசா கேக்கிறீங்க :)
ReplyDeleteஇன்னும் நீங்க வளரணும் தம்பி உங்களுக்கு அனுபவம் பத்தாது ஹா ஹா ஹா
ReplyDeleteஅரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?
ReplyDeleteநல்லாத்தான் மானங்கெட கேட்டீங்க..
ஆனா அவங்களுக்கு வலிக்காதே!! வலிக்காதே!!
காலில் விழுந்த பொழுது நீங்கள் கேக்கவில்லையே... நமக்கே கேக்க சூடு சுரணை இல்ல, அவனை குறை சொல்லி என்ன பயன்?
ReplyDeleteஇந்த அரசியல்வாதிகளே இப்படிதான்
ReplyDeleteசாதி சாதி என்று அலைவது தேர்தல் வந்தால் அடுத்தவர் காலில் விழுந்து கேட்பது.
இவர்களையெல்லாம் என்ன செய்வது
கேள்விகள் எல்லாம் முள்ளாய் குத்தனும்....
ReplyDeleteஆனா குத்துச்சா குத்தலையான்னு தெரியல ..
வலிக்காத மாதிரியே இருக்காங்க...
//அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?/////
ReplyDeleteஉண்மைய பப்ளிக்கா சொல்லப்படாது!
அதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்கலாமா
ReplyDeleteபோறாங்க விடுங்க பாஸ், வாக்குச்சாவடி பக்கம் கண்டிப்பா போயி, வேறே ஆளுக்கு வோட்ட குத்துங்க.
ReplyDelete//ஓட்டு கேட்க்கும் போது வராத சாதி, சண்டை என்றதும் வருகிறது.//
ReplyDeleteஜாதி என்பதே கவலை தரும் விஷயம்.
மானம் சூடு வெக்கம் எல்லாம் கிலோ என்னா விலைன்னு கேட்டுரப்போறாங்க...!!!
ReplyDeleteரைட்டு..
ReplyDeleteஎல்லாம் அரசியல் மாப்ள..
சரியா சொன்னீங்க .
ReplyDeleteநல்லா சொன்னேள் போங்கோ...!
ReplyDeleteசாதி பேசியவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
ReplyDeleteஎன்னாத்த... ஓட்டூ... போட்டூ... என்னாத்த...
ReplyDeleteஇன்று என் வலையில்:
"விகடனும் நானும்!"
ராஜபாட்டை ராஜா.ரொம்ப சூடாக இருக்கீங்க போலிருக்கு?அவசியமான பகிர்வு/
ReplyDeleteஅரசியல்.... அரசியல்.... அரசியல்.... ச்சே...ச்சே...
ReplyDelete