> என் ராஜபாட்டை : January 2012

.....

.

Tuesday, January 31, 2012

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்..


பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

Thanks :http://www.desinapster.com 

இதையும் படிக்கலாமே :


அன்பு + அறிவு + திறமை +பாசம் = எங்கள் R.S சார்

 

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்

 

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

 

 

 

Monday, January 30, 2012

அன்பு + அறிவு + திறமை +பாசம் = எங்கள் R.S சார்




நான் மேலையூரில் உள்ள சீனிவாசா மேல்நிலை பள்ளியில்   + 2 படிக்கும் போது எனக்கு கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடம் எடுத்தவர் எனது அன்பு ஆசிரியர் R.சுப்பிரமணியன் அவர்கள். இன்று நான் ஒரு ஆசிரியராக பல மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக இருக்க இவர்தான் காரணம்.

இரண்டு வருடத்தில் இவர் மாணவர்களை அடித்தது இரண்டு அல்லது முன்று முறை மட்டுமே. அதுவும் லேசாகதான். அன்பால் திருத்துவதில் வல்லவர். மாணவர்கள் வெறும் புத்தகபுழுவாக மட்டும் இருக்ககூடாது என நினைப்பவர். நான் படிக்கும் போது ஆனந்தவிகடனில் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் கவிதை நாவல் தொடராக வந்தது. அதை எனக்கு அறிமுகம் செய்து வாரம் வாரம் விகடன் வாங்கிவந்து படிக்க சொல்வார்.

விகடனில் வந்த 3D படங்களை வெறும் கண்ணால் எப்படி பார்ப்பது என கற்றுத்தந்தார். புத்தகத்தில் உள்ளதை அப்படியே வாசிக்கும் சிலருக்கு மத்தியில் முதலில் பாட சம்பந்தபட்ட ஆனால் அன்றாட வாழ்வில் நடக்கும் சில விஷங்களை நகைசுவையாக விலக்கிவிட்டு பின்பு பாடத்திற்குள் செல்வார். இதனால் பாடத்தில் கவனம் அதிகமாகும். இப்போது நானும் இந்த விதத்தில் தான் நடத்துகின்றேன். இவர் தந்த ஆர்வத்தினால் தான் பள்ளி முதல் கல்லுரி வரை கணக்குபதிவியலில் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்தது. இன்றும் நான் புதிதாக வகுப்பு எடுக்க ஆரம்பித்தால் இவரை பற்றி சொல்லிவிட்டுதான் துவங்குவேன்.

NSS ல நான் இல்லை என்றாலும் நான் அசைப்பட்டதிர்க்காக NSS  முகாமில் கலந்துகொள்ள அனுமதித்தார். இப்போது மிகவும் பிரபலமாக உள்ள நாகநாதன் கோவில் (கேது ஸ்தலம்) அப்போது பாழடைந்து கிடந்தது , அவர் தலைமையில் சென்ற நாங்கள் அதை சுத்தம் செய்தோம்.

பல வருடங்களுக்கு முன்பு படித்த எங்களை கூட என்னும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நாபக சக்தி உள்ளவர். 

நாளை அவர் ஒய்வு பெரும் தினம். இவரது ஒய்வு அந்த பள்ளிக்கு கண்டிப்பாக இழப்புதான். இனி வரும் வருடங்கள் இவருக்கு இன்பமாகவும் , நல்ல உடல் நிலையுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் வாருங்கள்.

Saturday, January 28, 2012

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்




ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான்.  # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..


கருண் : ஏண்டா 2011 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?

சௌந்தர் : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.

கருண் : ??????????????????

தலையில் காயத்துடன் சிபி ..மனைவியிடம்..
சிபி : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?

சிபி : அய்யோ .. அது நேத்தி குதிரை பந்தயத்தில் நான் பணம் கட்டிய குதிரை பெயர் ..

மனைவி : சாரிங்க ....

மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..

சிபி : இப்ப என்ன கோபம் ?

மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...


ஒரு பெண் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவள் தோழியிடம் சொன்னால் ... அவர்கள் கேட்ப்பது ....
அவன் எப்படியிருப்பான் ?
அவன் என்ன பண்றான் ?
எவ்வளவு சம்பளம்
வசதியா ?


இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....

மச்சான் எப்ப டிரீட் .....
# ஆண் மனசு வெள்ளை .


"வீடு "சுரேஷ்  : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .

மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?

"வீடு "சுரேஷ் : தெரியாது .

மாணவி : அவருடைய பொண்ணு ..

"வீடு "சுரேஷ் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா ?

மாணவி : தெரியாது ..
"வீடு "சுரேஷ் : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..


மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...

Tuesday, January 24, 2012

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?





காந்தி பெல்லோஷிப் :
     பட்டதாரி மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை இது . இரண்டு ஆண்டுகள் உதவித்தொகை கிடைக்கும் . முக்கியமாக பள்ளிகல்வியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களுக்கு :

                WWW.GANDHIFELLOWSHIP.ORG


எங் இந்திய பெல்லோஷிப் :

     பட்டபடிப்பு முடித்த மாணவர்கள் முதுகலை படிக்க இந்த உதவித்தொகை வழங்கபடுகின்றது. படிப்பு மற்றும் இன்றி மற்ற துறைகளிலும் மாணவர்களின் ஆர்வத்தை வைத்து இது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு 8 லட்ச ருபாய் வழங்கப்படும் . மேலும் விவரங்களுக்கு :

           WWW.YOUNGINDIAFELLOWSHIP.COM

உதவித்தொகை இல்லாத படிப்புகள் :

INDIAN INSTITUTE OF SPACE SCIENCE:

திருவந்தபுரத்தில் உள்ள IISS( INDIAN INSTITUTE OF SPACE SCIENCE) கல்வி நிலையத்தில் B.Tech படிக்க விண்ணப்பிக்கலாம். ISAT என்னும் நுழைவு தேர்வு எழுதவேண்டும்.  விவரங்களுக்கு :

           WWW.IIST.AC.IN/ISAT2012

ஆஜீம் பிரேம்ஜி பல்கலைகழகம் :

           இங்கு EDUCATION , DEVELOPMENT துறைகளில் முதுநிலை பட்ட படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். வங்கிக்கடன் வசதி உண்டு. விவரங்களுக்கு :

                WWW.AZIMPREMJIUNIVERSITY.EDU.IN

Monday, January 23, 2012

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்




நண்பன் படம் மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல ஆகும். எனது சில நண்பர்கள் தீவிர அஜித் ரசிகர்கள். அவர்களை அழைத்துகொண்டு (இழுத்துக்கொண்டு ) நண்பன் படம் பாக்க போனேன். அங்கே அவர்களின் கமெண்ட் பற்றிதான் இந்த தொகுப்பு.

மயிலாடுதுறையில் உள்ள விஜயா தியட்டரில் படம் பார்த்தோம். இலவச அனுமதி கூப்பன் என உள்ளதை 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.(ஜெ. அம்மா இதுக்கு ஏதாவது பன்னகூடாதா ?)

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம்  ஆனாதால் கூட்டம் இருக்காது என சொன்ன நண்பன் தியட்டர் கூட்டத்தை பார்த்து பிரமித்து போனான். படத்தில் பல இடங்களில் அவன் மனம்விட்டு சிரித்ததை பார்க்கமுடிந்தது. அதுவும் சத்யன் ஆசிரியர் தினத்தில் பேசும் காட்சியில் அவன் என் மேல் விழுந்து விழுந்து சிரித்தான்.

இடைவேளையில் அவனிடம் கேட்டதுக்கு பரவலா படம் ஜாலியா போகுது என்றான். படம் முடிந்து வெளியில் வந்ததும். ஒரு நண்பன் என்ன உங்க தலைவர் எல்லாரிடமும் அடி வாங்குறார் என்றான். நான் பதில் சொல்லும் முன் இன்னொரு நண்பன் ஏண்டா பத்து பேர அடிச்சா ஏண்டா அடிச்சகுற , அடிக்கலனா ஏண்டா அடிக்கலன்குற .. உன்னையெல்லாம் ....

தீவிர அஜித் ரசிகனான நண்பன் சொன்னான் இந்த படத்துக்கு எங்க அப்பாவை கூப்பிட்டு வரணும்டா என்றான். எல்லாரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தோம். டீச்சர் ட்ரைனிங் படிச்சு வாத்தியாரா போகுணைம்னு ஆசைப்பட்ட என்னை B.E படின்னு சொல்லி இப்ப முடிக்கமுடியாம கஷ்டபடுறேன். அவர் பாக்கனும்டா. இனி தல எனக்கு எப்படி பிடிக்குமோ அதுபோல தளபதியையும் பிடிக்கும் என்றான்.

உண்மைதான் இந்த படத்திற்கு பின் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது உண்மை.

டிஸ்கி : எனது சில பதிவுகளை பார்த்து எனக்கு விஜய் பிடிக்காது என சிலர் நினைக்கலாம். எனக்கு தலயும் பிடிக்கும் தளபதியும் பிடிக்கும்.


Friday, January 20, 2012

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )




2,00,000    க்கு மேல் ஹிட்ஸ் வாரிவழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி

இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் ) எனவே என் நண்பர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்(ராஜா என்றால் பெரிய மன்னன்னு நினைப்பா? # மயிலறகு  மயிலன்).


  1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். முதலில் வரும் Handler Menu இல் Host என்ற இடத்தில் m.twitter.com  (or) live.airtelworld.com (or) 0.facebook.com என அடிக்கவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் ஒரு வருடமாக  வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


(அல்லது ) 
கிழே உள்ள லின்க்கில் டவுன்லோட் செய்யவும் .


(அல்லது ) 

( இது பற்றிய உங்கள் சந்தேகங்களை rrajja.mlr@gmail.com க்கு மெயில் முலம் கேட்கலாம் )

  1. இலவச MCA ( Missed Call Alerts) (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

  1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் (அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னால் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்களுக்கு Power star சினிவாசன் DVD அளிக்கபடும் என எச்சரிக்கிறேன்.


மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..





Thursday, January 19, 2012

நண்பன் VS வேட்டை




பொங்கலுக்கு வந்த படங்களில் பெருத்த எதிர்பார்ப்பையும் , ஆவலையும் கிளப்பிய படங்கள் என்றால் அது நண்பன் மற்றும் வேட்டை. (கொள்ளைக்காரன் என ஒரு படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ) இந்த இரண்டு படங்களில் மக்கள் ஆதரவு எந்த படத்திரிக்கு என பார்ப்போம் .

நண்பன் :

விஜய் என்ற ஒரு ஆளுக்காகவே படம் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. அதுபோல ஷங்கர் இயக்கம் என்றால் நம்பி போகலாம், இவர்களுடன் வளர்ந்து வரும் நடிகர் ஜீவா , கலக்கல் வில்லன் சத்தியராஜ் , இசை ஹரிஷ் ஜெயராஜ் என பக்கா கூட்டணியில் வந்தபடம். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம்தான் என்றாலும் தமிழ் நாட்டுக்கு ஏற்றார்போல சில மாறுதலுடன் ஷங்கர் கொடுத்துள்ளார் .

விஜயின் எந்த அலட்டலும் இல்லாத , பஞ்ச டயலாக் இல்லை , அதிரடி சண்டை இல்லை ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.


வேட்டை :

சாக்லேட் ஹீரோ மாதவனும் , ஆர்யாவும் இணைந்து நடித்தபடம். கனவு கண்ணி (!) சமீரா , அமலாபால் என இரண்டு கவர்சி கண்ணிகளுடன் , அதிரடிக்கு புகழ்பெற்ற லிங்குசாமி இயக்கத்தில் வந்த படம். பாடல்கள் ஹிட். கதை என்று பார்த்தால் ஏற்கனவே வந்த பலபடன்களின் தொகுப்புதான். ஆனாலும் அதை லிங்குசாமி கையாண்டவிதம் அருமை.

அதிரடி சண்டைகளும் , நல்ல பாட்டும் , கொஞ்சம் சென்டிமென்ட்டும , கொஞ்சம் நகைசுவையும் இருந்தால் எந்த கதையையும் ஒப்பேத்திடலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் .

நண்பன் VS  வேட்டை

இரண்டில் இது வெற்றி என சொல்ல நான் ஒன்னும் நாட்டாமை இல்லை . ஒரு படத்தின் வெற்றி என்பது உங்கள் கையில் உள்ளது . எனவே மறக்காம சைட் பாரில் உள்ள ஓட்டு படையில் உங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டு போடவும் .




Wednesday, January 18, 2012

கைய வச்சுகிட்டு .......!!!

கைய வச்சுகிட்டு இப்படிலாம் கூட பண்ணலாம் ...


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

Saturday, January 14, 2012

விகடன் விருதுகள்


HAPPY PONGAL
 
தமிழ் வார இதழ்களில் முதலிடம் வகிக்கும் ஆனந்த விகடன் அளித்த விருதுகளின் தொகுப்பு







நன்றி : விகடன்

Thursday, January 12, 2012

நண்பன் : திரை விமர்சனம்

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நண்பனின் வெற்றி முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் . பலரின் விமர்சனங்களை இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்குகிறேன் .



1 . நண்பன் - விஜய் - விமர்சனம் 

                             நன்றி : "நல்ல நேரம் " சதீஷ்


2 . நண்பன் - FIR 

                             நன்றி : இட்லி வடை

3 . நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

                             நன்றி : அட்ராசக்கை : சிபி

4 . நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட


                    நன்றி :  தோத்தவண்டா : 


5 . நண்பன்: விஜய்யின் புதிய மாஸ்! ரசித்த சினிமா!!


             நன்றி : மருதமூரான்


டிஸ்கி : படம் பாக்கலாம்னு பாத்தா டிக்கெட் எடுக்கனும்னு சொல்றங்க .. அதான் இப்படி ...


Tuesday, January 10, 2012

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )



எனது நண்பன் ஒருவன் ( விஜய்) அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகின்றான் . அவர்கள் ஒரு அதிசய சாப்ட்வேர் தயாரிக்கின்றனர். அதாவது கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் ஒரு சாப்ட்வேர் . இவனும் அந்த குழுவில் ஒருவன் . அந்த சாப்ட்வேர் இன் மிக சிறிய மாதிரி ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தான் .

அதை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் , அதிசயப்பட்டேன் . இதை நம் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் . 

இந்த சாப்ட்வேர்ய் பயன்படுத்துங்கள் தயவு செய்து யாருக்கும் மெயில் செய்யவேண்டாம். விருப்பம் உள்ளவர்களை என் வலையில் இருந்து டவுன்லோட் செய்ய சொல்லுங்கள் .

சாப்ட்வேர் டவுன்லோட் CLICK செய்ய பண்ணவும்

இதையும் பாருங்கள் :

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

 
 

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

 



டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

Saturday, January 7, 2012

மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?




நன்றாக படிக்கும் பல மாணவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை விடுகின்றனர். சிலர் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இவர்களுக்காக சில உதவி தொகை வழங்க சில அமைப்புகள் உள்ளன அவற்றை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் :

பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்க உதவி தொகை வழங்குகின்றனர். இது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்மே.

விவரங்களுக்கு :  www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட் :

இது தனிரர் நிறுவனம் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக உதவுகின்றது இது .

விவரங்களுக்கு : jaigopal garodia scholarships center, jaigopal garodia vivekananda vidyalaya trust , U-6 Seventh street, anna nagar, chennai ph : 26206261

கௌரவ் பவுண்டேஷன் :
சென்னையில் உள்ள நிறுவனம் , ஆய்வு மற்றும் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்குகின்றது. பயனாளிகளின் வருட வருமானம் 4,00,000  லட்ச ரூபாய் குள்ள இருக்க வேண்டும் .

விவரங்களுக்கு :  http://gauravfoundation.org/scholarship.html

எஸ் . கே . டி .பி தொண்டு நிறுவனம் :

சென்னை தி நகரில் இயங்கிவரும் நிறுவனம் இது. தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html

மற்ற சில நிறுவனங்கள் ....

1. vidhyasakar educational trust
  B-1 Narumakar apartment, Brindavan nagar Extension
  Adambakkam, chennai -88









நன்றி : புதிய தலைமுறை வார இதழ்


நேற்று :


டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .



Friday, January 6, 2012

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)






நாம் வீட்டில் பயன்படுத்தும் கணினியில் நாம் இல்லாத சமயங்களில் என்ன செய்கின்றார்கள் என கண்டுபிடிக்கவும் , அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை நேரத்தில் என்ன செய்கின்றார்கள் என கண்காணிக்கவும் , குழந்தைகள் இணையத்தில் எந்த எந்த தளங்களை பார்க்கின்றனர் , facebook, orkut, என சமுகதலங்களில் என்ன மெசேஜ் அனுப்புகின்றனர் என்றும் கண்காணிக்க இது உதவும் .

இந்த மென்பொருளின் உண்மையான விலை $50 முதல் $100 வரை இருக்கிறது. நமது வாசகர்களுக்காக இதை இலவசமாக வழங்குகின்றேன்.

1 . முதலில் max keylogger  இதை click செய்து download செய்துகொள்ளவும்.

2. அதை Double click  செய்து install செய்யவும்.

3. வரும் விண்டோவில் i accept the agreement option select செய்யவும்
4. save செய்ய வேண்டிய இடத்தை தெரிவு செய்யவும்
5.  install button அய் தெரிவு செய்யவும்
6. Finish button அய் தெரிவு செய்யவும்.

7.         வரும் விண்டோவில் உங்கள் விருப்பமான password தரவும்.

8.          ctrl + shift + alt + z இது short cut key.

9.         மீண்டும் ctrl + shift + alt + z அமுக்கி password விண்டோவ்வை வரவையுங்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்த பின் கிழே உள்ள விண்டோ வரும் .

10.     அதில் register என்ற பட்டனை click செய்யவும்.

11.     E-Mail என்ற இடத்தில் : rrajja.mlr@gmail.com
   Serial Number என்ற இடத்தில் :      
               5B4F77ACCD016128F6D77F3485649DA1
copy & paste செய்யவும் .

12.     அல்லது KEYGEN இந்த LINK செய்து DOWNLOAD செய்துகொள்ளவும்.
13.     வரும் விண்டோவில்  LOG என்ற OPTION தெரிவு செய்து CLIPBOARD என்ற OPTION இல் உங்கள் கணினியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் .



டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .

Wednesday, January 4, 2012

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .

இந்த பொங்கல் திருநாள் மற்றவர்களுக்கு எப்படியோ .. விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்தான் . காரணம் "நண்பன் " பட ரீலிஸ் .  சங்கர் , ஹாரிஸ் ஜெயராஜ் என ஜாம்பவங்களுடனும் , அருமையான கதையுடனும் வருகின்றது . இதைவிட விஜய்யின் மாஸ் , அவரது நடிப்பு படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .

அந்த  அருமையான படத்தின் சில படபிடிப்பு காட்சிகள் உங்களுக்காக ..
மேலும் விவரங்களுக்கு : www.directorshankaronline.com
















இதுலாம்  சும்மா , பொங்கலுக்கு இருக்கு கச்சேரி .... 

Tuesday, January 3, 2012

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .




இந்த புத்தாண்டில் வழங்க படும் முதல் விருது இது. பல வலைதளங்கள் தொழில்நுட்ப பதிவு போடுகின்றனர். ஆனால் எல்லரைவிடவும் முதலிலும் , தெளிவாகவும் , புரிந்து கொள்ள எளிமையாகவும் இன்றைய கணினி உலகை பற்றி எழுதுவதில் வல்லவர் இவர் .

வலைத்தளம் பயன்படுத்தும் நாம் அனைவரும் இவரின் பதிவில் இருந்து ஏதாவது ஒன்றையாவது நமது தளத்தில் இணைத்திருப்போம். Facebook, Tiwtter , G + , Blog , Webcasting , Domain , Gmail, Yhoo chat , Facebook Chat என இவர் எழுதாத விஷயங்களே கிடையாது.

எனது தளத்தில் ஓடும் popular post widget இவரின் கைகாரியம்தான். வலைதளத்தை அருமையாக வடிவமைக்க இவரின் பதிவுகள் கண்டிப்பாக உதவும் .

இத்தகைய பெருமை கொண்ட அவர் அண்ணன் ந்தேமாம் சசி அவர்கள் .

அவர்களுக்கு இந்த விருதை வழங்குவதில் ராஜபாட்டை பெருமிதமும் , மகிழ்ச்சியும் கொள்கிறது .

டிஸ்கி : ஏற்கனவே அண்ணன் நாஞ்சில் மனோ அவர்கள் விருது வழங்கிவிட்டார். இருந்தாலும் அது இன்டர்நேஷனல் அவார்ட் , இது நேஷனல் அவார்ட் .