நாளை மே 1 உழைப்பாளர் தினம் ஆனால் பல லட்ச ரசிகர்களுக்கு அது தல தினம் . ஆம் கோடானகோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள தல என்கின்ற அஜித்குமாரின் பிறந்தநாள் அன்றுதான் . ஏன் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் ? இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் கொடுத்ததில்லை ஆனாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை ஏன் ?
- ரசிகர் மன்றங்களை கலைத்தபின்பும் ரசிகர்கள் இவர்பின்னே தான் இருக்கிறார்கள் .
- இவர் முன்னேற இவர் குடும்பத்தில் உள்ள யாரும் முக்கியபங்கு (அதாவது திரையுலகில் ) ஆற்றவில்லை .
- சாதாரண மெக்கானிக்காக இருந்தவர் இந்த அளவு முன்னேற காரணம் உழைப்பு என்பதை தன ரசிகர்களுக்கு புரியவைத்தவர் .
- சினிமா உலகில் விமானம் ஓட்ட உரிமம் வைத்துள்ள ஒரே நடிகர் .
- சினிமா மட்டும் இன்றி கார் பந்தயத்தில் கலக்குபவர் . நாலு அடி உயரத்தில் இருந்துவிழுத்தால் ஏதாவது ஆகிவிடும் என டுப் போடும் நடிகர்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து கார் ஓட்டியவர் .
- செய்த உதவிகளை ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்காதவர் . பலருக்கு இவர்தான் உதவி செய்தார் என்பதே தெரியாது .
- தன்னை அளட்சியபடுத்திய நபர்களுக்கு , அவர்கள் கஷ்டகாலத்தில் உதவி செய்து அவர்களை அரவணைத்தவர் . உதாரணம் : கொவ்தம் மெனேன் .
- ஆங்கில நடிகர்கள் உண்மையான கெட்டப்பில் நடிக்கும் போது நாம் மட்டும் ஏன் மேக்கப் போடவேண்டும் என சொல்லி வெள்ளை தலையுடன் நடிக்கிறார் .
- தான் ஒரு பிரபலம் என்பதை பயன்படுத்தி எந்த சலுகையும் பெற விரும்பாதவர் .
- தமிழகத்தில் சரியாக வருமானவரிகட்டும் நடிகர்களில் கமலுக்கு அடுத்து அஜித்தான் .
- தன் படத்தின் எந்த புரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்ளமாட்டார் . படத்தை பற்றி மக்கள்தான் பேசவேண்டும் , நாமே பேசகூடாது என்பதில் உறுதியாக உள்ளார் .
அஜித்தின் சன் டிவி பேட்டி :
அஜித் பற்றிய எமது முந்தய பதிவுகள் :