> என் ராஜபாட்டை : யார் தெய்வம் ?

.....

.

Sunday, May 13, 2012

யார் தெய்வம் ?




இந்த உலகை படைத்தவன் இறைவன் என நாம் நம்புகின்றோம். ஒரு உயிரை படைக்கும் எவரும் இறைவன் தான். அதுபோல நம்மை படைத்த தாய் கூட ஒரு தெய்வம்தான். கண்ணில் தெரியா தெய்வத்துக்கு ஏதேதோ செய்யும் நாம் , நம் கண்ணிதேரில் வாழும் தெய்வத்திற்கு என்ன செய்கின்றோம் ?

உலகில் கலப்பிடம் இல்லாத இரண்டு பொருள் :
  1. தாய் அன்பு
  2. தாய் பால்

நேர்முக தேர்வு சென்று வந்தேன்
அப்பா கேட்டார் வேளை கிடைக்குமா ?
தங்கை கேட்டால்  எவ்வளவு சம்பளம் ?
அண்ணன் கேட்டான் பர்மனேநட் வேலையா ?
தம்பி கேட்டான் எப்ப வேளையில் சேரனும் ?

ஆனால்

அம்மா கேட்டால் மதியம் சாப்பிடியா ?

தான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நம்மை சாப்டாயா ? என அன்புடன் கேட்பவள் தாய் ..

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் ...:

  1. திபாவளி , பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் எந்தனை பேர் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றோம் ?
  2. அவர் பிறந்த நாள் தெரியுமா ?
  3. அவருக்கு பிடித்த நிறம் , உணவு எது ?
  4. உங்கள் பிறந்த நாள் அன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி இருகின்றிர்களா ?
  5. கடந்த வாரத்தில் எத்தனை முறை அவரிடம் சாப்ப்ட்டியாமா ? என கேட்டுஉள்ளிர்கள் ?
  6. கடைசியாக அவர்களுக்கு என்ன வாங்கி குடுத்திர்கள் ?
  7. அவரின் மிக பெரிய ஆசை என்ன ?


யோசித்து பாருங்கள் , மேலே உள்ள அனைத்துக்கும் நமக்கு பதில் தெரியுமா என்று .. சந்தேகம் தான் . எதையும் எதிர்பாராமல் பாசம் வைக்கும் அன்னையை இன்று மட்டுமல்ல என்றுமே கொண்டாடுவோம் .


தான் படிக்க முடியவில்லை என்பதால் கஷ்டபட்டு என்னை படிக்க வைத்து , நான் வாங்கிய கோல்ட் மெடலை அனைவரிடமும் காட்டி சந்தோசபட்ட ...

இதுவரை உன் சம்பளம் என்ன என்று கேட்காத ..

ஏன் பையில் பணத்தை பார்த்தாலும் தம்பி பஸ்க்கு காசு வேணுமா ? என பாசத்துடன் கேட்க்கும் ...

டீ கடையில் தான் சம்பாதித்த பணத்தில் நகை வாங்கி கொண்டு இது ஏன் பையன் வாங்கியது .. என பெருமையாக சொல்லும் ..

என் அன்பு அம்மாவுக்கு

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்


21 comments:

  1. அன்னையர் தினத்தில் ஓர் அருமையான பதிவு...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நெகிழ்ச்சியான கட்டுரை தல ..,

    தங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என் சார்பா இனிய அன்னையர் தின வாழ்த்துகளை அம்மாக்கிட்ட சொல்லுங்க சகோ.

    ReplyDelete
  4. டீ கடையில் தான் சம்பாதித்த பணத்தில் நகை வாங்கி கொண்டு “இது ஏன் பையன் வாங்கியது ..” என பெருமையாக சொல்லும்
    >>
    அடுத்த அன்னையர் தினத்திற்குள் அதை உண்மையாக்கிடுங்க சகோ

    ReplyDelete
  5. செம பதிவு..தலை....

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. கண்ணா கலங்க வச்சுடீங்க
    அம்மா தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அன்னையர் தின பதிவு அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. “ இனிய அன்னையர் தின வாழ்த்துகள் “

    ReplyDelete
  9. தெய்வங்கள் பலர் பலவீடுகளில்.நல்ல் பதிவு வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  10. உண்மையான பாசத்துடன் எழுதி இருக்கீங்க...

    வாழ்த்துகள்

    ReplyDelete
  11. நெகிழ்ச்சியான பதிவு நண்பா....... வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. அன்னையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  13. அருமையான பதிவு நண்பா..... அன்னையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  14. நீங்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

    ReplyDelete
  15. “ நேர்முக தேர்வு சென்று வந்தேன்
    அப்பா கேட்டார் “வேளை கிடைக்குமா ?”
    தங்கை கேட்டால் “எவ்வளவு சம்பளம் ?”
    அண்ணன் கேட்டான் “பர்மனேநட் வேலையா ?”
    தம்பி கேட்டான் “ எப்ப வேளையில் சேரனும் ?”

    ஆனால்

    அம்மா கேட்டால் “ மதியம் சாப்பிடியா ?”///////////////////////////

    கண்ணுல நீர் முட்டுதுப்பா....

    ReplyDelete
  16. உண்மையிலே நல்ல பதிவு...தாயை விட மேலான எந்தப் பெண்ணும் உலகினில் இல்லை தாயை மதிப்போம்..

    ReplyDelete
  17. s sir. touching relations are so many. bt mother is the only one touched for everyone.

    ReplyDelete
  18. வார்த்தையில் கூற முடியாது நண்பா! நீங்கள் கொடுத்து வைத்தவர்!

    ReplyDelete
  19. நின்னுடீங்க சார்... சொல்ல ஏதும் வார்த்தையே இல்ல...

    ReplyDelete
  20. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...