நடிகர் விஜய் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஐந்து படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அவர் நடித்த பல படங்கள் நன்றாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சில படங்களில் இந்த ஐந்தும் முக்கிய இடம் பிடிக்கும் .
1. கில்லி
இதுவரை நான் பார்த்த விஜய் படங்களில் மிக வேகமாக , பரபரப்பாக இருந்த ஒரே படம் கில்லி தான் . அதுவும் திரிஷாவுடன் அவர் ஓடிவரும் போது பல லாரிகளில் வில்லன்களின் அடியாட்கள் வருவார்கள் அவர் அனைவரிடமும் இருந்து விஜய் தப்பிக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும் . கடைசி வரை இந்த விறுவிறுப்பு குறையாமல் தரணி காட்சிகளை அமைத்து இருப்பார் .
2. காதலுக்கு மரியாதை
நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் பார்த்தது . அப்போது கல்லுரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பிடித்த படம் இது . விஜய்யின் இமேஜை மாற்றிய படம் இது என்றால் அது மிகை ஆகாது . படத்தில் இறுதி காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை அருமையாக இருக்கும் . படத்தில் பாடல்களும் , காமெடியும் அதன் வெற்றிக்கு மிக உதவியது .
3. பூவே உனக்காக ..
குடும்ப பெண்களுக்கு விஜய் மிகவும் பிடிக்க காரணமாக இருந்த படம் இது . அதுவரை குத்து பாட்டு , சண்டை , சங்கவி என இருந்த விஜய் இந்த படத்தில் முற்றிலும் வேறு மாதிரியாக நடித்து இருப்பார் . விக்கிரமனின் வசனங்களும் , ராஜ்குமாரின் பாடல்களும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது . கடைசி காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும் .
4. துள்ளாத மனமும் துள்ளும்
இயக்குனர் எழில் அறிமுகமான படம் இது . " இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு ..." என்ற பாடல் மிக பிரபலம் . விஜயின் அமைதியான நடிப்பும் , பாடல்களும் பெரிதும் பேச பட்டது . அதுவும் தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜய் பாத்ரூமில் அழும் காட்சி அவரது நடிப்பு திறமைக்கு சான்று . தான் நல்லவன் என சிம்ரனிடம் நிருபிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் அருமையாக திரைக்கதையில் பின்ன பட்டு இருக்கும் .
5. நண்பன்
விஜய் முற்றிலும் மாறுபட்டு , குத்து பாட்டு , ஹீரோ இன்ட்ரோ பாட்டு , பஞ்ச டயலாக்ஸ் என எதுவும் இல்லாமல் வந்த படம் . இதுவரை மற்றவர்களை அடித்து பழக்கபட்ட விஜய் இந்த படத்தில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களிடமும் அடி வாங்கி விடுவார் . ஆனாலும் அலுக்காத , அலட்டாத அவரது நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம் . ரீமேக் படமாக இருந்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பால் புது வடிவம் கொடுத்து இருப்பார் விஜய் .
டிஸ்கி : இது எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி உள்ளேன் . இது தவிர வேறு படங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் பின்னுடத்தில் சொல்லுங்கள்
Tweet |
ஹ ஹ ஹ ஹ நல்ல காமெடி
ReplyDeleteலவ் டுடே...விட்டுடீங்க..
ReplyDeleteஅப்போ பேரரசுவால்தான் எல்லாம் மாறிப்போச்சா?
ReplyDeleteNalla padatherivu valthukal
ReplyDeleteநீங்க சொன்னா சரி தான்...
ReplyDeleteசின்ன டாகுடர் நடித்த படங்களில் எனக்கு பிடித்த ஐந்து [[நொந்து]] படங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஉதயா
நிலாவே வா
நெஞ்சினிலே
குருவி
வேட்டைக்காரன்
[[கல்லை எடுக்கனும்னு தொனிச்சுன்னா அவனை போயி எறியுங்க நான் எஸ்கேப்]]
இதில் நண்பன் மட்டும் நான் இன்னும் பார்க்கலை!
ReplyDeleteஐந்தும்சிறந்த படங்கள்தான்! இந்த லிஸ்டில் வசீகரா, பிரண்ட்ஸ், போன்றவைகளையும் சேர்க்கலாம்!
ReplyDeleteபூவே உனக்காக பார்த்துகிட்டே இருக்கலாம்
ReplyDeleteபூவே உனக்காக பார்த்துகிட்டே இருக்கலாம்
ReplyDeleteout of 5 , three remake film
ReplyDeleteஅஜித் ரசிகரான நீர் பில்லா பார்த்ததிலிருந்து இப்படி கட்சி மாறிட்டீரே ராசா!
ReplyDeleteம்
ReplyDeleteஅப்றம்...?
ReplyDeleteஅப்ப, இந்த ஐந்து படங்கள் தவிர வேறு எதுவும் பார்க்க லாயக்கில்லை என்று சொல்றீங்க? அப்படித்தானே?
ReplyDelete(எஸ்கேப்)