> என் ராஜபாட்டை : வெற்றி மேல் வெற்றி

.....

.

Friday, August 31, 2012

வெற்றி மேல் வெற்றி





வெற்றி இந்த வார்த்தைக்கு அடிமையாகாத மனிதனே இல்லை . ஒரு சிறு பூச்சி கூட எதிரியிடம் வெற்றி பெற வேண்டும் என போராடும் . வெற்றி என்ற வார்த்தை சொல்ல எளிதாக இருக்கலாம் ஆனால் அதை அடைவது மிக கடினம் .

வெற்றி என்பது எளிதில் கிட்டிவிட கூடியது அல்ல. தோல்வி , மனத்தளர்ச்சி , நம்பிக்கை துரோகம் , பொருள் இழப்பு , அவமானம் , வாக்கு தவறுதல் போன்ற தோல்வி படிகளை கடந்து ஒருவன் வெற்றி பெரும் போது அது  வெறும் வெற்றியாக இல்லாமல் சாதனையாக மாறுகிறது .

-          கவிஞ்ர் கவிதாசன்

வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

  1. முதலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்ம வேண்டும் .
  2. உங்கள் இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் . முதலில் எளிதான இலக்கை நிருனையுங்கள். அதில் பெரும் வெற்றி உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் .
  3. இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுங்கள் .
  4. வெறும் திட்டம் மட்டும் வெற்றியடைய உதவாது , திட்டமிட்டதை செய்ய வேண்டும் .
  5. கனவு காணுங்கள் , நீங்கள் வெற்றி அடைவதுபோலவும் , அனைவரும் உங்களை பாராட்டுவது போலவும் (இது பகல் கனவாக இருக்க கூடாது )
  6. நீங்கள் வெற்றி பெருவிர்கள் என நம்பும் , சொல்லும்  நண்பர்களுடன் மட்டும் சேருங்கள் . உங்கள் மன உறுதியை கெடுக்கும் நண்பர்களை தவிருங்கள் .
  7. உங்கள் இலக்கை அடைய நீங்கள் செய்த முயற்சிகளையும் , அதில் நீங்கள் அடைந்த முன்னேட்ரேம் பற்றியும் அடிகடி சிந்தியுங்கள் .
  8. உங்களை போல ஒரு இலக்கை வைத்து வெற்றி பெற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் .
  9. இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தவரின் தவறுக்கு என்ன காரணம் என யோசியுங்கள் , அந்த தவறு உங்களுக்கும் வராமல் இருக்க என்ன வழி என சிந்தியுங்கள் .
  10. வெற்றி பெற்றால் அமைதியாக இருங்கள் , தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் , மனம் தளராதிர்கள் .


எந்த வேலையையும் இதய பூர்வமாகவும் , அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும் , அழகாகவும் , எளிதானதாகவும் மாறிவிடும் . அதுவே வெற்றி பெறும் மனநிலையை உருவாக்கும்

-          மாதா அமிர்தானந்தா மயி

உன்னால் முடியாது என நினைத்த செயலை எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டு இருக்கிறான்

-          யாரோ

வெற்றி என்பது பிகர் போல எப்ப எப்படி யாருக்கு மடங்கும்னு தெரியாது . திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம்

           - சி .பி ரசிகர் மன்ற தலைவர் ( ஹி .. ஹி .. நான்தான் )

11 comments:

  1. அதெல்லாம் சரி... முடிவில் அவரை வம்பிற்கு இழுத்து விட்டீர்களா... (அவர் எதற்கும் அசரவே மாட்டார்...)

    ReplyDelete
  2. //“வெற்றி என்பது பிகர் போல எப்ப எப்படி யாருக்கு மடங்கும்னு தெரியாது . திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம் “//

    அட..அட..
    என்ன ஒரு தத்துவம்.

    ReplyDelete
  3. தத்துவ மழை பொழியத்தான் நீங்க லாயக்கு சார் !...:)

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள்! நகைச்சுவையாக முடிவு! சிறப்பு!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  5. ///
    “வெற்றி என்பது பிகர் போல எப்ப எப்படி யாருக்கு மடங்கும்னு தெரியாது . திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம் “
    ///

    ஹா ஹா ஹா செம! :D

    BTW, இந்த விசயத்துல உங்க அறிவுரை கொஞ்சம் தேவைப்படுது உங்க போன் நம்பர் கிடைக்குமா ஹி ஹி ஹி!

    ReplyDelete
  6. உண்மையேப்பா.. உலகம் இயங்குவதும் இதைச்சுற்றி தான்... எந்த ஒரு காலத்திலும் வெற்றிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பதும், எதையும் அடையத்துடிப்பதும் வெற்றிக்கனி ருசிக்க தான்....

    பூச்சியில் இருந்து தொடங்கி மனிதன் வரை வெற்றிக்கு முயலும் மிக அருமையான விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்...

    வெற்றிக்கு காரணமாக சொன்ன அத்தனையும் மிக அற்புதம்.... ஆமாம் வெற்றி என்பது சொல்ல எளிது தான்.. ஆனால் அந்த வெற்றிப்படி அடைய நாம் செய்யவேண்டிய முயற்சிகளும் தோல்விகளை, அவமானங்களை, நம்பிக்கை துரோகத்தை சோம்பேறித்தனத்தை சகிக்கக்கூடிய மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்... தோல்வி கண்டு துவண்டு சோர்ந்து உட்கார்ந்துவிட்டால் நம்மை முன்னேறாமல் செய்துவிடும் நம்மில் இருக்கும் நம்பிக்கையின்மை.. அதை தகர்த்து நிமிர்ந்து முயல்வதில் தான் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்....

    வெற்றிப்பெற சொன்ன பல யோசனைகள் மிக மிக பயனுள்ளது எல்லோருக்குமே....

    வெற்றி கிடைத்துவிட்டது என்று வானம் வரை எட்டி ஆர்பாட்டம் செய்யாமல் நிதானித்து அந்த வெற்றியை ரசித்து இனி அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நிதானமாக திட்டமிடல் வேண்டும்...

    வெற்றிப்படியை தொட்டவர் மீண்டும் தோல்வியை சந்திக்க துணிய மாட்டார்.... ஆனால் வெற்றி தோல்வி வாழ்க்கையில் சரி சமமாக எடுக்கும் பக்குவத்தை மனதில் நிலைநிறுத்திக்கொண்டால் உலகம் நம் கைவசம்...

    அருமையான விஷயங்களை தொகுத்து இறுதியில் நகைச்சுவையாகவும் முடித்திருப்பது சிறப்பு....

    மக்கள் விரும்பும்படி விஷயங்களை பகிரும்போது மக்களின் கவனம் இன்னும் அதில் ஆழ்கிறது....

    கல்வி கற்கும் பிள்ளைகளில் இருந்து முதுமைக்கட்டத்தில் இருக்கும் பெரியோர் வரை எல்லோருமே வெற்றிக்காக உழைப்பதில் தவறில்லை என்றும் ஆனால் அதில் நேர்மையும் நம்பிக்கையும் உழைப்பும் மிக மிக அவசியம் என்பதை மிக அருமையாக உணர்த்தி இருக்கிறது உங்கள் பதிவு...

    அன்பு நன்றிகள் அருமையான பகிர்வுக்கு... தொடர அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம்.
    ஓகே சார்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...