வெற்றி இந்த வார்த்தைக்கு அடிமையாகாத மனிதனே இல்லை . ஒரு சிறு பூச்சி கூட எதிரியிடம் வெற்றி பெற வேண்டும் என போராடும் . வெற்றி என்ற வார்த்தை சொல்ல எளிதாக இருக்கலாம் ஆனால் அதை அடைவது மிக கடினம் .
“வெற்றி என்பது எளிதில் கிட்டிவிட கூடியது அல்ல. தோல்வி , மனத்தளர்ச்சி , நம்பிக்கை துரோகம் , பொருள் இழப்பு , அவமானம் , வாக்கு தவறுதல் போன்ற தோல்வி படிகளை கடந்து ஒருவன் வெற்றி பெரும் போது அது வெறும் வெற்றியாக இல்லாமல் சாதனையாக மாறுகிறது . “
- கவிஞ்ர் கவிதாசன்
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
- முதலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்ம வேண்டும் .
- உங்கள் இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் . முதலில் எளிதான இலக்கை நிருனையுங்கள். அதில் பெரும் வெற்றி உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் .
- இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுங்கள் .
- வெறும் திட்டம் மட்டும் வெற்றியடைய உதவாது , திட்டமிட்டதை செய்ய வேண்டும் .
- கனவு காணுங்கள் , நீங்கள் வெற்றி அடைவதுபோலவும் , அனைவரும் உங்களை பாராட்டுவது போலவும் (இது பகல் கனவாக இருக்க கூடாது )
- நீங்கள் வெற்றி பெருவிர்கள் என நம்பும் , சொல்லும் நண்பர்களுடன் மட்டும் சேருங்கள் . உங்கள் மன உறுதியை கெடுக்கும் நண்பர்களை தவிருங்கள் .
- உங்கள் இலக்கை அடைய நீங்கள் செய்த முயற்சிகளையும் , அதில் நீங்கள் அடைந்த முன்னேட்ரேம் பற்றியும் அடிகடி சிந்தியுங்கள் .
- உங்களை போல ஒரு இலக்கை வைத்து வெற்றி பெற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் .
- இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தவரின் தவறுக்கு என்ன காரணம் என யோசியுங்கள் , அந்த தவறு உங்களுக்கும் வராமல் இருக்க என்ன வழி என சிந்தியுங்கள் .
- வெற்றி பெற்றால் அமைதியாக இருங்கள் , தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் , மனம் தளராதிர்கள் .
“ எந்த வேலையையும் இதய பூர்வமாகவும் , அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும் , அழகாகவும் , எளிதானதாகவும் மாறிவிடும் . அதுவே வெற்றி பெறும் மனநிலையை உருவாக்கும் “
- மாதா அமிர்தானந்தா மயி
“உன்னால் முடியாது என நினைத்த செயலை எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டு இருக்கிறான் “
- யாரோ
“வெற்றி என்பது பிகர் போல எப்ப எப்படி யாருக்கு மடங்கும்னு தெரியாது . திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம் “
- சி .பி ரசிகர் மன்ற தலைவர் ( ஹி .. ஹி .. நான்தான் )