> என் ராஜபாட்டை : இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

.....

.

Friday, June 17, 2011

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

புதுடில்லி, இந்தியா: சோமாலியக் கடற்கொள்ளையரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஆறு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, இன்று இந்தியா வந்தடைந்தனர். இவர்களது விடுதலைக்கு உதவியது இந்திய அரசல்ல, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்!
10 மாதங்களுக்குமுன், எகிப்திய கப்பல் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் சோமாலியக் கடல் கொள்ளையரால் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த 22 மாலுமிகளும் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 2.1 மில்லியன் டொலர் பணம் கொடுக்க வேண்டும் என அறிவித்தனர் கொள்ளையர்கள்.
பணயக் கைதிகளாக்கப்பட்ட 22 பேரில் 6 இந்தியர்கள், 4 பாகிஸ்தானியர், 11 எகிப்தியர்கள், 1 ஸ்ரீலங்கன் ஆகியோர் இருந்தனர். இவர்களை விடுவிக்க, கப்பல் நிறுவனமோ, அவற்றின் மாலுமிகளின் நாடுகளோ, ஓரளவுக்குமேல் முயற்சிக்கவில்லை.
இந்த நிலையில் 22 மாலுமிகளையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்கினார், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அன்சார் பேர்னி. இவர் கொள்ளையருடன் பேச்சுக்களை நடாத்தினார். அவர்கள் பணம் கொடுத்தால்தான் பணயக் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.
இதையடுத்து அன்சார் பேர்னி, பாகிஸ்தானில் நன்கொடைகள் மூலம் பணம் திரட்டத் தொடங்கினார். அப்படிச் சேர்ந்த 2.1 மில்லியன் டொலர் பணத்தைக் கொடுத்து, 22 மாலுமிகளையும் மீட்டிருக்கிறார்.
இந்த பாகிஸ்தானியரால், பாகிஸ்தானில் திரட்டப்பட்ட நன்கொடைகள்மூலம் மீட்கப்பட்ட 6 இந்தியர்களும்தான், இன்று இந்தியா வந்தடைந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமி என்.கே. சர்மாவின் மனைவி மது சர்மா, “நாம் இந்திய அரசிலுள்ள கிட்டத்தட்ட சகல அமைச்சர்களையும் ஒவ்வொருவராகச் சந்தித்து உதவி கோரினோம். யாரும் உதவவில்லை. ஆனால், எங்கோ பாகிஸ்தானில் இருந்த அன்சார் பேர்னி, நாங்கள் கேட்காமலேயே உதவினார். அவரின் உதவியால்தான் எனது கணவரை உயிருடன் பார்க்க முடிந்துள்ளது” என்றார் கண்ணீருடன்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர்கள் இதுபற்றி வாய்திறக்கவே விரும்பவில்லை. சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பதால், இந்திய கடற்படையிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இந்திய கடற்படையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது!
இந்திய கடற்படை அதிகாரி கொமடோர் மாதவன், “கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அந்தக் கப்பல் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதோ, அந்த நிறுவனம்தான் பொறுப்பு. இதில் நாம் (இந்திய கடற்படை) செய்வதற்கு ஏதுமில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


(ஆர்வகோளாறு)


தகவல் உதவி :viruvirupu.com

13 comments:

  1. கொஞ்ச நாளா எல்லாமே இப்படித்தான் நடக்குது

    ReplyDelete
  2. இந்திய அதிகாரிகளின் பொறுப்பற்றதனத்திர்க்கு இது ஒரு முன் மாதிரியான எடுத்துக்காட்டு
    பாகிஸ்தான் நண்பருக்கும் நன்கொடை அளித்த மக்களுக்கும் மனதார வந்தனம்
    இதை சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. எது எப்படியோ இந்தியா இவர்களை காக்க தவறியபோதும் .
    பாகிஸ்தானிய மனிதரின் செயற்பாடு பாராட்டுக்குரியது .

    ReplyDelete
  4. ராகுல் காந்தியை பிடித்துக்கொண்டு போகார்களாமே...(

    ReplyDelete
  5. A.R.ராஜகோபாலன் said... [Reply to comment]
    இந்திய அதிகாரிகளின் பொறுப்பற்றதனத்திர்க்கு இது ஒரு முன் மாதிரியான எடுத்துக்காட்டு
    பாகிஸ்தான் நண்பருக்கும் நன்கொடை அளித்த மக்களுக்கும் மனதார வந்தனம்
    இதை சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள்
    same feeling

    ReplyDelete
  6. பாஸ், சில வேளை வெளி நாட்டில் தானே இந்தியரகள் பாதிக்கபடுகிறார்கள் எனும் நினைப்பில் பாராமுகமாக இருக்கிறார்களோ தெரியவில்லை.

    ReplyDelete
  7. இதெற்கெல்லாம் இந்திய அரசுக்கு நேரமேது ,,

    அவர்களுக்கு இதை விட முக்கிய பிரச்சினை இருக்கே ..

    அதாங்க ஊழல் ..

    ReplyDelete
  8. அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் பத்தாது இதில் உது வேறையா.. நீங்க வேற பாஸ்

    ReplyDelete
  9. நிச்சயம் பாராட்டப் படவேண்டிய செயல்.....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...