> என் ராஜபாட்டை : எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள

.....

.

Friday, June 10, 2011

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் பதில்:


ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் தனி சிறப்பம்சம் உண்டு என்று கூறியிருந்தீர்கள். மனிதர்களின் பழக்க வழக்கம் கூட ராசியின் அடிப்படையில் வேறுபடும் என்றும், ஒருவர் உணவு சாப்பிடும் முறை, பிடித்த உணவு வகைகளைக் கூட ராசியைக் கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார் என்று விரிவாக் கூறுங்கள்?பதில்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையும் எனக் கூற வேண்டும். ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.

நன்றி: webduniya.com


11 comments:

 1. பகிர்வு அருமை பாஸ்,
  ஆனால் இந் நாளில் எவருக்கு அதிக ஓய்வு நேரம் இருக்கோ, அவர் தான் காதலில் அதிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்.

  ஹி....ஹி...

  ReplyDelete
 2. எந்த ராசிக்காரர்
  காதலில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார் என்ற
  சமூக அக்கறையுள்ள பதிவு
  நானும் தனுசு ராசிதான்
  ஆனால் இதுவரை நான் யாரையும் காதலிச்சதே இல்லையே
  நல்ல நேரம் சதிஷ்குமர்கிட்ட தான் செக் பண்ணனும்
  நம்ம ஜாதகம் எதுல வீக்குன்னு

  ReplyDelete
 3. எல்லோரையும் அவங்கவங்க ராசியை யோசித்து கவலைப்படவச்சுட்டீங்களே. அங்க பாருங்க A.R.ராஜகோபாலன் சார் சோகப்பாட்டு பாடுவதை.

  ReplyDelete
 4. நிருபன் சொன்னது
  //ஆனால் இந் நாளில் எவருக்கு அதிக ஓய்வு நேரம் இருக்கோ, அவர் தான் காதலில் அதிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்//

  எவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சுருக்கார் பாருங்க.

  உங்க இந்த ஒரு பதிவால எத்தனை பேரை எப்படியெல்லாம் புலம்பவச்சுட்டீங்க.

  ReplyDelete
 5. நிருபன் சொன்னது
  //ஆனால் இந் நாளில் எவருக்கு அதிக ஓய்வு நேரம் இருக்கோ, அவர் தான் காதலில் அதிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்//

  எவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சுருக்கார் பாருங்க.

  உங்க இந்த ஒரு பதிவால எத்தனை பேரை எப்படியெல்லாம் புலம்பவச்சுட்டீங்க.

  ReplyDelete
 6. மனிதனா பொறந்துட்டாலே காதல் வரும்...மத்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் காதலில் அதிக ஆர்வம் வராதா ? வித்யாதரன் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சொன்னது வேறு ஒன்னுத்துக்குதான் ஒத்து வரும்.
  .

  ReplyDelete
 7. என்னோட ராசி உண்மையிலேயே நீங்க சொன்னது மாதிரிதான் பாடா படுத்துதுண்ணே.....

  ReplyDelete
 8. தம்பீ இராஜா

  நான் இராசி பலனெல்லாம்
  பாக்க மாட்டேன் ஆன இப்ப இந்த
  பதிவைப் பார்த பின்பே என் இராசி
  ரிஷபம் ஞாபகம் வந்தது நானும்
  காதலித்து,காத்திருந்து,கலப்புமணம்
  செய்தவன்தான் ஒரு வேளை--
  காக்கா உக்கார பனம் பழம்
  விழுந்த கதையா இருக்கமோ-?
  வேண்டாம எதற்கு வம்பு
  வாழ்த்துக்கள்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. இந்த பட்டியல்ல நம்ம யாதகமும் அடங்குதே பார்ப்போம்/

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...