> என் ராஜபாட்டை : வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

.....

.

Saturday, June 18, 2011

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

• அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் திட்டம் கைவிடப்பட்டது என செய்திகள் சமீபத்தில்தான் வெளியாகியிருந்தன!

 

 

லண்டன், பிரிட்டன்: ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய செய்தி. வருமா, வராதா என்ற இழுபறியில் இருந்துகொண்டிருந்த அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் தேதி 2012ல் பிரிட்டனுக்கு வருகிறார் ஜேம்ஸ் பாண்ட்-23.
சோனி பிக்சர்ஸ் இத்தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது. பிரிட்டிஷ் ரிலீஸ் தேதிக்குச் சில நாட்களின் பின்னரே அமெரிக்க ரிஸீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் அறிவிப்பின்படி, அமெரிக்காவில் நவம்பர் 9ம் தேதி ரிலீசாகின்றது.

சில நாட்களுக்கு முன்னர்தான், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் திட்டம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்தன. இனி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களே வெளியாவது சாத்தியமில்லை என்றுகூட கூறப்பட்டது.

அந்தச் செய்திகளால், உலகெங்கிலுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நேரத்தில், ஜேம்ஸ் பாண்ட்-23ன் ரிலீஸ் தேதியை அறிவித்து, பாண்ட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது சோனி பிக்சர்ஸ்.
ஜேம்ஸ் பாண்ட்-23 என்பது, வரப்போகும் திரைப்படத்தின் நிஜமான பெயர் கிடையாது. படத்துக்கான பெயர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை (அல்லது, பகிரங்கப்படுத்தப்படவில்லை) அதுவரை படத்தின் தயாரிப்பு வேலைகளுக்காக வைக்கப்பட்டுள்ள working titleதான், ஜேம்ஸ் பாண்ட்-23.
Daniel Craigதான் புதிய படத்திலும் ஜேம்ஸ் பாண்ட்.  Craig நடித்து, கடைசியா வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெற்றிகரமாக Quantum Of Solace ஓடியதில் இவருக்குக் கிடைத்துள்ள சான்ஸ் இது. மூன்றாவது முறையாக ‘லைசென்ஸ் டு கில்’ துப்பாக்கியைக் கையிலெடுக்கிறார் இவர்.
எம்.ஜி.எம். ஸ்டூடியோஸ் நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தால் ஜேம்ஸ் பாண்ட்-23 தயாரிப்பு இடைநிறுத்தப் பட்டிருந்தது. கடந்த நவம்பரில்தான் எம்.ஜி.எம், திவால் நிலையிலிருந்து மீண்டிருந்தது.

டைரக்டர் நாற்காலியில் அமரப்போவது, Sam Mendes. வில்லன் பாத்திரத்தில் Anthony Hopkins நடிப்பார் என்று ஒரே பேச்சாக இருக்கின்றது. ஆனால், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதியான தகவல் இல்லை.

நன்றி :viruvirupu.com

14 comments:

 1. naana first....

  asaththungka....
  aduththa thakavalukkaay kaaththirukkiRen.......

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் முதல் வடை

  ReplyDelete
 3. Nice post. To increase your Website Traffic submit your cinema news Here http://news.incake.com/

  ReplyDelete
 4. ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்

  ReplyDelete
 5. எங்க விஜய் நடிச்ச வில்லு தான் நான் பார்த்த james bond கடைசி படம்

  ReplyDelete
 6. தமிழ்மணத்தில் வாக்களித்த முதல்வனே என்னை புகழ்வது காதில் கேக்குது ...ஹிஹி

  ReplyDelete
 7. ரெம்ப ஹப்பியான செய்தி

  ReplyDelete
 8. அவன் இவன் விமர்சனம் மாதிரி இதுவும் கனவு தானே. நாங்க ஏமாற மாட்டோமே

  ReplyDelete
 9. ரைட்டு.. வந்தா சந்தோஷம்

  ReplyDelete
 10. புதிய செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.

  நன்றி சகோ.

  ReplyDelete
 11. 007 டுமீல்..டுமீல் ..டுமீல் ..வரட்டும் ...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...