> என் ராஜபாட்டை : ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்

.....

.

Monday, June 20, 2011

ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்


சென்னை, இந்தியா: கலைஞருக்கு நிஜமாகவே காலம் சரியில்லை போலிருக்கிறது. அடுத்த பேரிடி ஒன்று விரைவில் காத்திருப்பதாக தகவல் ஒன்று கசிகின்றது. “வர்த்தக நலன்களுக்கு முன்னால், குடும்ப உறவுகள் இரண்டாம் பட்சமே” என்பதுதான் இந்தத் தகவலின் பஞ்ச் வாக்கியம்.
அதன் விரிவாக்கம், தமது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் காத்துக்கொள்ள கலைஞரின் குடும்ப உறவொன்று, எதிராகத் திரும்ப ரெடியாகின்றது என்பதே.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம். டில்லியின் உதாசீனம். இந்த இரண்டுமே மேற்படி முடிவை எடுக்கத் தூண்டியது என்கிறார்கள்.


இந்த முடிவை எடுக்காவிட்டால், ஏற்படக்கூடிய உடனடி நஷ்டம் லேசானது அல்லவாம்..  நான்கு இலக்கத்தில் கோடிகள் என்கிறார்கள், இவர்களது வர்த்தகத்தை அறிந்தவர்கள். இந்தத் தொகை உடனடி நஷ்டம். அதைவிட வருடாவருடம் ஏற்படக்கூடிய நஷ்டம் தனி.
சகோதரர்கள் இருவருக்கும் கூட்டு வியாபாரமும் இருக்கிறது. தனித்தனி வியாபாரங்களும் இருக்கின்றன.

மாறன் குடும்பத்தின் இரு சகோதரர்களில் ஒருவருக்கே, இந்த இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. மற்றைய சகோதரர், தன்பங்குக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தானே தாங்கிக்கொள்ளத் தயாராகிவிட்டாராம். அவருக்கு தமிழகத்தில் ஏற்படக்கூடிய நஷ்டம் அவ்வளவு பெரியளவில் இருக்காதாம்.

இந்த இரண்டாவது சகோதரரின் முடிவின் காரணங்களை முதலில் பார்க்கலாம். இவரது ‘தனி’ முதலீடுகள், தமிழ்நாட்டை மையப்படுத்தி இல்லை. வெளி மாநிலங்களிலும், தலைநகரிலும் மையப்படுத்தப்பட்ட முதலீடுகள் அவை. அதன் ஒரு பகுதியே தமிழகத்தில் எக்ஸ்டென்ஷனாக இருக்கிறது.

அதைவிட அவரது பணம் தமிழகத்தில் பாய்ந்ததெல்லாம் குறுகியகால பிசினெஸ்களில். குறைந்தபட்சம் சில வாரங்களில் இருந்து, அதிகபட்சம் சில மாதங்களுக்குள் போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடக்கூடிய பிசினெஸ்கள் அவை.

இதனால் அந்த சகோதரர், ஏற்கனவே போட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதிலேயே இப்போது பிசியாக இருக்கிறார்.  புதிய புராஜெக்ட்கள் எதுவும் தற்போதைக்கு இல்லையாம். இன்னமும் சில வாரங்களில் அவரது கம்பனிகள் உறங்கு நிலைக்கு (sleep stage) போய்விடும்.
அதற்குப்பின் அவற்றால் இழக்கக்கூடிய பணம் 100 கோடிக்கு உள்ளேதான்! அவரால் மிகச் சுலபமாகத் தாங்கிக்கொள்ளக்கூடிய தொகை அது.
மற்றைய சகோதரரின் கேஸை எடுத்துக்கொண்டால், அது பெரிய மெஸ்ஸியான ஸ்டேஜில் இருக்கிறது. காரணம், அவருக்கும் வெளி மாநில வியாபாரங்கள் இருந்தாலும், பிரதான பிஸினெஸ் தமிழகத்தை மையப்படுத்தியே உள்ளது. அதில் அடி விழுந்தால், நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, 4 இலக்க கோடிகளில் நஷ்டம் வரும்!
இவர்தான் இப்போது தான் இதுவரை ஓடிக்கொண்டிருந்த பாதையிலிருந்து, யூ-டர்ன் அடிக்க ரெடியாகிறார் என்கிறார்கள்.

இந்தச் சகோதரார் ஏற்கனவே கட்சியிலிருந்து (தி.மு.க.) விலகி நடக்கத் தொடங்கிவிட்டார். அதைக் கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கும்படி வெளிப்படையாகவும் செய்யத் தொடங்கிவிட்டார். அடுத்த கட்டம் கலைஞர் குடும்பத் தொடர்புகளில் இருந்து விலகிக் கொள்வதுதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன், இவரது நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்குப் புதிதாக இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருக்கின்றார். அமெரிக்காவில் MBA படித்ததாகக் கூறப்படும் இந்த இளைஞர், நிறுவனத்தின் COO பதவியில் அமரவைக்கப்படவுள்ளார் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு வர்த்தக மேம்படுத்தல் நடவடிக்கை போலவே தோன்றும். ஆனால், இதற்குள் வேறு ஒரு விஷயம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த MBA இளைஞர், முன்பிருந்த அ.தி.மு.க. அரசின் ‘பவர்’ அரசியல்வாதி ஒருவரின் மகன்.
குறிப்பிட்ட அரசியல்வாதி, தற்போதைய அ.தி.மு.க. அரசில் செல்வாக்கு அற்றவராகத்தான் தற்போது இருக்கிறார். ஆனால், விரைவில் அவரது செல்வாக்கு ஓகோ என்று எழுந்துவிடும் எனக் கணித்துள்ளாராம் மாறன் சகோதரர்களில் ஒருவர்.

இந்த அரசியல்வாதி மூலமாகவே, அ.தி.மு.க.வுடன் ஒரு பிசினெஸ் ரூட் போடப்படுமாம்.திகாருக்கும், சி.ஐ.டி. காலனிக்குமிடையே கலைஞர் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கமாக இந்த டீல் ஓடத்தொடங்கியிருக்கிறது. டீல் கலைஞரின் காதுகளுக்கும் அநேகமாகப் போயிருக்கும். ஆனால், என்னதான் செய்ய முடியும்?.

‘ஆத்தா’வோடு பகை வராமலிருக்க வேண்டுமானால், ‘தாத்தா’வைக் கழட்டித்தான் விடவேண்டும்.


 தகவல் உதவி : விறுவிருப்பு . com

12 comments:

 1. பணம் பத்தும் செய்யும் .
  தாத்தாவே ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி இருப்பாரு.

  ReplyDelete
 2. கோடிகளில் விளையாடும் கேடிகள்

  ReplyDelete
 3. நல்லத்தான் துப்பறியிறீங்க

  ReplyDelete
 4. கலக்கல் கலக்கல்

  ReplyDelete
 5. கலாநிதி மாறன் கலைஞரை விட சாணக்ய தந்திரங்களை கற்றவர். "நம்ம வேலை நடந்தா சரி" அதுதான் அண்ணன் பாலிசி.

  ReplyDelete
 6. தனது நலனுக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர்வார்கள் இந்த கே டி சகோதரர்கள்.

  ReplyDelete
 7. படித்தேன்...இருப்பினும்...இவர்களை மறக்க நினைக்கின்றேன் :)

  ReplyDelete
 8. இத்தாலி அம்மாவும், உள்ளூர் அம்மாவும் சேர்ந்தா...தாத்தா கதி?

  ReplyDelete
 9. கேடி சகோதர்களின் முடிவு வரவேற்க தக்கதே, எவ்ளோ காலத்துக்குத்தான் மனசின் பகையை வைத்துகொண்டு தாத்தாவும் இவரும் கொஞ்சி குலாவுவது

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...