> என் ராஜபாட்டை : என்னமோ நடக்குது ...?

.....

.

Tuesday, June 14, 2011

என்னமோ நடக்குது ...?

நம்ம எல்லாருக்கும் கிசு கிசு படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டு .(உதாரணம் :சி.பி க்கு முன்று மனைவி , இப்ப நாலாவதா ஒன்னுக்கு ட்ரை பண்றார் , கருண் இன்னும் 10  th  பாஸ் பன்னால )இதுபோல சினிமாவில் உள்ள சில கிசு கிசுகள் உங்களுக்காக (செய்தி உதவி : வெப்துனியா )
 
சூட்டை கிளப்பும் ‌ஜித்தன் 

படங்களே இல்லாமல் இருந்த ‌ித்தன் நடிகர் இப்போது தெரு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் விளம்பரங்களில் நமது அடுக்குமொழி தாடி நடிக‌ரின் படமும் பிரதானமாக இடம் பிடித்துள்ளது.

ச‌ரி, அஷ்டவதானியான தாடிக்காரர் இந்தப் படத்தில் நடிக்கிறாரா? இல்லை. pத்தன் இந்தப் படத்தில் தாடிக்காரன் ரசிகராக நடித்துள்ளாராம். ரசிகன் என்றாலும் தாடிக்காரரை ஏகத்துக்கும் கிண்டலடித்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. இது அவரது ரசிகர்களின் காதுகளையும் எட்டியிருக்கிறது.

தலைவரை கிண்டல் செய்தால் நடக்கிறதே வேற என்று கண்ணில்படும் போஸ்டரையெல்லாம் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தாடி நடிக‌ரின் விசுவாசிகள்.
 கடுப்பில் நடனப்புயல்
எந்தப் படத்தையும் எழுபது நாட்களில் முடிப்பவர் நடனப்புயல். இவர் தோரணையான நடிகரை வைத்து டிசம்ப‌ரில் படம் தொடங்குவதாக இருந்தது.

தோரணை மில்க் இயக்குன‌ரின் படத்தில் பிஸி என்பதால் நடனத்தின் கால்குலேஷனில் பெரும் பிகாகிவிட்டது.

இன்னும் சில நாள்தான் அதற்குள் வராவிட்டால் வேறு வேலை பார்க்கப் போயிடுவேன் என கறுவிக் கொண்டிருக்கிறார். 
காற்று வாங்கப் போன காதல் ஜோடி
பிரசன்ன நடிகரும், புன்னகை இளவரசியும் காதலிக்கிறார்கள் என்று ஒரு வருடம் முன்பே கிசுகிசு கிளம்பியது. அமெ‌ரிக்காவில் தயாரான அச்சம் படத்தில் நடித்த போது இவர்களின் காதல் மேலும் இறுக்கமானதாகவும் செய்தியுண்டு.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னை கடற்கரையில் ஜோடியாக தென்பட்டிருக்கிறார்கள். பேன்சி நம்பர் கா‌ரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர். கண்ணாடியை திறந்தால் ரசிகர்கள் தொந்தரவு இருக்குமே என்றுதான் இந்த பாதுகாப்பு.

இதுபற்றி கேட்டாலும் காதெலல்லாம் இல்ல... சும்மா காத்து வாங்கதான் வந்தோம் என்றுதான் பதில் கிடைக்கும் இருவ‌ரிடமிருந்தும்.
 வாய் துடுக்கு நடிகர்
வானவில் காலனியில் அறிமுகமான நடிகர் நேற்று வெளியான இராமாயண காண்டம் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் நடித்த பல காட்சிகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டுள்ளன.

படப்பிடிப்பில் வழக்கம் போல தனது தெனாவெட்டு குணத்தை நடிகர் காட்டியிருக்கிறார். இதனால் கடுப்பான இயக்குனர் நடிக‌ரின் காட்சிகளில் கத்தி‌ரிபோட, நடிகர் செம அப்செட். இது பஞ்சாயத்துக்கும் போனது.

தயா‌ரிப்பாளர், இயக்குனர் உள்பட அனைவரும் காத்திருக்க சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர். பலமுறை அழைத்தும் வரவில்லையாம். ஒருவழியாக அவர் உள்ளே வர, கொதித்துப் போயிருந்த இயக்குனர் கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்திருக்கிறார்.

அப்போது ஓடிப் போனவர் பிறகு இயக்குனர் பக்கமே திரும்புவதில்லை. படம் வெளியான சாலிகிராம திரையரங்கில் இதைதான் சுவாரஸியமாக பேசிக் கொண்டிருந்தனர் நடிகரால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் 
 

10 comments:

 1. கிசு கிசு ரொம்ப கிச்சு கிச்சு மச்சான்!!!

  ReplyDelete
 2. டென்த் பாஸ் பண்ணாம எப்படியா வாத்தி ஆகா முடியும்..

  ReplyDelete
 3. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  ReplyDelete
 4. நம்ம எல்லாருக்கும் கிசு கிசு படிப்பதில் ஒரு ஆர்வம் உண்டு .(உதாரணம் :சி.பி க்கு முன்று மனைவி , இப்ப நாலாவதா ஒன்னுக்கு ட்ரை பண்றார் , கருண் இன்னும் 10 th பாஸ் பன்னால )இதுபோல சினிமாவில் உள்ள சில கிசு கிசுகள் உங்களுக்காக (செய்தி உதவி : வெப்துனியா )//

  "என்னமோ நடக்குது ...?"

  ReplyDelete
 5. மேலும் வாசிக்க.... பார்க்க.........

  Do Visit

  மனசு ரெண்டும் புதுசு
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

  ஜில் ஜில் ஜிலேபி
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

  மாங்கனி
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


  நாட்டு சரக்கு
  http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


  http://www.verysadhu.blogspot.com/

  ReplyDelete
 6. நல்ல சுவையான பதிவு ராஜா

  ReplyDelete
 7. கிசு கிசு படிப்பதில் எப்போதும் ஒரு தனி சுகம் தான் , தமிழர் ஆகிய நமது பொழுது போக்கில் முதன்மையானது இது அல்லவாlol , கிசு கிசு சூப்பர் பாஸ்

  ReplyDelete
 8. பாஸ், உங்களுக்கு காது நீளம் பாஸ்...ஒட்டுக் கேட்டு கிசு கிசு எழுதிப் பற்ற வைக்கிறீங்களே..
  லேட்டஸ் கிசு கிசுக்கள் அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...