> என் ராஜபாட்டை : விஜயகாந்த் இன்றைய தினமும், முதுகில்தான் போடுவாரா?

.....

.

Tuesday, June 21, 2011

விஜயகாந்த் இன்றைய தினமும், முதுகில்தான் போடுவாரா?

சென்னை, இந்தியா: கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு கணிசமான இடங்களைக் கைப்பற்றிய தே.மு.தி.க., இப்போது தனது அடுத்த காலடியை எப்படி எடுத்து வைப்பது என்ற யோசனையில் இறங்கியுள்ளது. சென்னையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தே.மு.தி.க. நிர்வாகிகளுடன், கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்த காலடியை எடுத்து வைக்க இப்போது என்ன தேவை? வேறொன்றுமில்லை, தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன.

இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில், வார்ட்களில் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மொத்தத்தில், இதோ வருகின்றன உள்ளாட்சி தேர்தல்கள்!
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன்,  உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியை தொடர்வதா, இல்லையா என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அதற்காகவே, கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கவும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது உண்மைதான்.ஆனால், தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. இனிமேலும், அதற்கான வாய்ப்புமில்லை.காரணம், இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலுள்ள ஈகோ.

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் செல்லவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும்கூட,  அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.

நல்ல வேளையாக, அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
விஜயகாந்தைப் பொறுத்தவரை, கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும் என்பது அவருக்குத் தெரியும். அப்படியான நிலையில், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால், ஏதோ ஒரு காலத்தில் அவர், தமிழகத்தில் முதல்வராக வந்தாலும் வரலாம்.

இதனால், உள்ளாட்சி தேர்தல் போன்ற சிறிய தேர்தல்களில் தனது கட்சியைத் தனித்துப் போட்டியிட வைக்க முடிந்தால், அது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது. இந்த ரூட்டிலேயே அவரது சிந்தனை ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னையில் தே.மு.தி..க தலைமை கழகத்தில் இன்று காலையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத்தான் விஜயகாந்த் முடிவெடுக்கவுள்ளார் என்று யாராவது நம்பினால், அந்த நபருக்கு தமிழக அரசியல் பாணி பிடிபடவில்லை என்று அர்த்தம்.

இந்திய அரசியலில் எந்தக் கட்சியிலும், மூன்றாம் மட்டத்திலுள்ள ஆட்களிடம் ஆலோசனை கேட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.  ஆனால், மக்களுடன் நேரடியாக மூவ் பண்ணும் இப்படியான ஆட்களிடம், மக்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன் என்று பல்ஸ் பார்க்க முடியும்.

அதைத்தான் விஜயகாந்த் இன்று செய்யவிருக்கிறார் என ஊகிக்கலாம்.
கட்சிக்காரர்கள் இன்று சொல்லப்போவதை, தன் காதில் போடுவாரா? அல்லது அவர்களுக்கு முதுகில் போடுவாரா? என்பது அவர்களது கட்சி உள்விவகாரம். (பிரச்சாரக் கூட்டத்தில் முதுகிலும் போட்டிருக்கிறார்!)
காதிலோ, முதுகிலோ போட்டுவிட்டு, அவர் எடுக்கும் முடிவு (இன்று எடுக்க வேண்டியதில்லை), தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவாக இருந்தால், கேப்டன் புத்திசாலி.

Thanks :viruvirupu.com

10 comments:

 1. அடுத்த முதல்வர் அண்ணன்'தான்யா ஹி ஹி....

  ReplyDelete
 2. சிந்திக்கட்டும் கேப்டன் ...

  ReplyDelete
 3. கேப்டன் சிந்திக்க வேண்டிய நேரமிது

  ReplyDelete
 4. கப்டனிற்கு இப்போது தானாக ஒரு வாய்ப்பு வந்து சேரும் நேரம்,
  கப்டன் நன்றாக யோசித்து முடிவெடுத்தால் வளமான தமிழகத்தில் பலமான கட்சியாக தேதிமுக வினை மாற்றலாம்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...