> என் ராஜபாட்டை : அவன்-இவன் திரைவிமர்சனம்

.....

.

Thursday, June 16, 2011

அவன்-இவன் திரைவிமர்சனம்
பாலாவின் படம் என்றால் பலவருடங்கள் தயாரிப்பில் இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கவும், இனி விளிம்பு நிலை மனிதர்களை வைத்து படம் எடுக்கமாட்டேன் என தனது குரு பாலுமகேந்திராக்கு உறுதியளித்ததை காப்பாற்றவும் பாலா எடுத்த படம் தான் அவன்-இவன்.

கதை :

பொணத்தின் நெத்தியில் உள்ள ஒரு ரூபாய் முதல்(பார்திபன் போல) ஆஸ்பத்திரியில் உள்ள பால், பிரட் வரை அணைத்தையும் ஆட்டைய போடும் களவானிகள் அவன்(ஆர்யா)-இவன்(விஷால்). அக்காபாளையம் கிராமத்தில் உள்ள இவர்கள் அடிக்கும் லூட்டிகள்தான் படம்.


ஆர்யா ஒரு திருட்டு வழக்கில் போலிஸ் ஸ்டேஷன் செல்லும் போது அங்கு ஏட்டாக உள்ள கதா நாயகியிடம் மயங்க, அவர்க்காக இவர் அடிக்கும் அலம்பல் நமது வயிரை பதம் பார்க்கும்.

தனது ஓன்ரறை கண்னால் விஷால் ஒருவரை பார்க்க , அடுத்தவர் இவர் தன்னைதான் பார்கிறார் என எண்னி சண்டைக்கு வருவது இயல்பான காமெடி. அந்த பார்வை பிரச்சனையாலியே அவருக்கு காதலி கிடைப்பது அருமை.

படு காமெடியாக போகும் கதையில் கடைசி 20 நிமிடங்கள் நமது கண்ணை கலங்க செய்துவிடும். ஆர்யா, விஷால் அவர்கள் ஜோடிகள் நால்வரும் பயணம் செய்யும் கார் விபத்தில் சிக்குவதும், விஷால் பார்வை பரிபோவதும், அதனால் அவர் திருமணம் நிர்ப்பதும், அதர்க்காக ஆர்யா எடுக்கும் முடிவும் தான் கிளைமேக்ஸ்.

(தயவு செய்து படம் பார்த்தபின் கிளைமேக்ஸ்ய் யாரிடமும் சொல்லாதிர்கள்)

பாராட்டகூடிய வசனங்கள்.

 1. பொண்த்துல உள்ள ஒரு ரூபாய எடுக்கிரியே பாவம் இல்ல
-          ஒரு ரூபாவ வச்சு ஒரு டீ கூட குடிக்க முடியாது இதை வச்சு அவனை புதைக்கிரியே இதுதான் பாவம்.

 1. டேய் ! உனக்கு பொண்ணு பார்த்து இருக்கேன், பெயர் கனிமொழி
-          பொன்னு எங்கே டில்லில இருக்கா(இதற்க்கு பலத்த கைதட்டல்)
-           
 1. ஏண்டா கோவில்ல உள்ள லட்டை திருடுரியே உன்னை சாமி சும்மா விடாது.
-          அவன் அவன் கோவிலயே ஆட்டைய போடுறான், அவனையே சாமி ஒன்னும் பன்னல

 1. விஷால் : அவளை பார்த்ததும் டாவடிக்க ஆரம்பிசிடேன்
ஆர்யா : நீ இந்த கண்னை வச்சு பார்பதே அதிகம், இதுல டாவு வேறயா?
 1. காதலிக்கும் போது எதைபத்தியும் கவலபடாதவள், கல்யாணம் என்றதும் வேலை, சம்பளம் என எல்லாதயும் கேட்பாள்ளுக.


டைரக்டர் பல்பு வாங்கும் இடங்கள்

 1. திருடங்கள் என தெரிந்தும் அவர்களை போலிஸ் காதலிப்பது.

 1. விஷாலின் கண்னை அடிகடி கிண்டல் செய்வது.


 1. கதா நாயகி வீட்டில் ஆர்யா திருட போகும்போது கைலியில் இருப்பது, உள்ளே திருடும் போது பேண்ட் அனிந்து இருப்பது.


இப்படி சிறு, சிறு குறைகள் இருந்தாலும், அது தெரியாத வண்னம் திரைகதையில் கலக்கி உள்ளார் பாலா. அதுவும் இறுதி காட்சியில் வசனமும், இசையும், ஆர்யா நடிப்பும் அமர்களம்.


எதிர்பார்க்கபடும் ஆனந்தவிகடன் மார்க் : 45
எதிர்பார்க்கபடும் குமுதம் ரேட்டிங் : நன்று

எல்லா தியட்டரிலும் குறைந்தது 25 நாள் ஓடும்


நான் நேற்று இரவு தூங்கும் போது கனவில் இந்த படத்தை பார்தேன்
(ஆஹா பல்பா எல்லாருக்கும்)
 நம்பி வந்தேன் இப்படி கவுத்துடானே

24 comments:

 1. காலங்காத்தால இப்பிடி கடியெ கெளப்புறீங்களே தல!!!!!!!!!

  இன்னிக்கு எத்தன கடி வாங்கப் போறேனோ!!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. முடியல ...நம்பி வந்தேன் ....அறவே முடியல

  ReplyDelete
 3. கனிமொழி வசனம் லைட்டா டவுட்டு வந்துச்சு .....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 4. கனிமொழி வசனம் லைட்டா டவுட்டு வந்துச்சு .....
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 5. மகனே நீ நல்லாவே இருக்கமாட்ட...

  ReplyDelete
 6. எப்புடியெல்லாம் கிளம்புராங்கய்யா...

  ReplyDelete
 7. கொய்யால கைல கிடைச்சே அவ்வளவுதான்..

  ReplyDelete
 8. எனக்கு முன்னாடி 1000 வாட்ஸ் பல்பு எரிஞ்சி அணைஞ்சு போச்சு நண்பரே

  ReplyDelete
 9. மாப்ளே, என்ன ஒரு வெறித்தனம் உங்களுக்கு,

  படம் வர முன்னாடியே மொக்கை விமர்ச்சனம் எழுதியிருக்கிறீங்க.

  சூப்பர் பாஸ்...

  ReplyDelete
 10. இதுக்குத்தான் சொல்றது வடையண்ணாவோட சேராதேங்கோவெண்டு !

  ReplyDelete
 11. என்னைய்யா இப்படி கடைசியில கவுத்துப்புட்டீங்களே! இருங்க ஆட்டோ அனுப்புறன்!

  ReplyDelete
 12. என்னைய்யா இப்படி கடைசியில கவுத்துப்புட்டீங்களே! இருங்க ஆட்டோ அனுப்புறன்!

  ReplyDelete
 13. உங்களுக்கு நாங்க என்ன பண்ணினோம் ... இப்படி போட்டு வாங்குரிங்களே///

  ReplyDelete
 14. இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேனோ!

  ReplyDelete
 15. இருந்தாலும் விமர்சனம் சூப்பராத்தான் இருக்குதுங்க...

  ReplyDelete
 16. டேய் ! உனக்கு பொண்ணு பார்த்து இருக்கேன், பெயர் கனிமொழி
  - பொன்னு எங்கே டில்லில இருக்கா(இதற்க்கு பலத்த கைதட்ட//
  இதெல்லாம் படம் பார்த்துட்டிங்களோன்னு நினைக்க வெச்சதுய்..ஆனாலும் இது செம ஜோக்...படத்துல இருக்கா(இன்னும் நம்பும் அப்பாவி)

  ReplyDelete
 17. ஏம்பா இப்டி கவுக்குறீங்க

  ReplyDelete
 18. ippadi fool akitiye, Aanalum vimarsanam super.

  ReplyDelete
 19. வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
  சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........

  ReplyDelete
 20. எங்க இப்படி மனுஷனை கடுப்பாக்குறிங்க?

  ReplyDelete
 21. நல்லாயிருங்க அப்பு. இத்தனப் பேரோட வயித்தெரிச்சல் சும்மா விடாது. சொல்லிட்டேன் ஆமா...!

  ReplyDelete
 22. சே. கவுத்துப்புட்டீகளே ...

  ReplyDelete
 23. koyyala reelunna reelu mokka reelu
  enna kodumai sir ithu

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...