> என் ராஜபாட்டை : ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார் : வடிவேலு

.....

.

Tuesday, May 17, 2011

ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார் : வடிவேலு



தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் 
அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார். இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இ திமுகவைப்போல் அதிமுகவும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.
 
 
Thanks: kingtamil

13 comments:

  1. அது யாருங்க kigntamil? இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதேயில்லையே!

    ReplyDelete
  2. இப்பத்தான் உங்க புரபைல் பார்த்தேன்.கணினி ஆசிரியரா நீங்கள்?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எதைப் பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும்

    ReplyDelete
  4. //பதுங்கியிருக்கும் வடிவேலு//

    ஹா ஹா ஹா ஹா...........!!!

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு..நன்றி ராஜா

    ReplyDelete
  6. @ராஜ நடராஜன்

    Thanks sir . . Nama "vaydanthankal" karun kuda teacher than . .

    ReplyDelete
  7. இனிதான் அவர் நிலைமை பற்றி தெரிய வரும். அது வரைக்கும் அறிக்கை விட வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. வடிவேலு பேட்டி கொடுக்கும் அளவிற்கு யார் வளர்த்து விட்டது?
    http://zenguna.blogspot.com

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...