> என் ராஜபாட்டை : ராஜபக்சேவை கைது செய்ய முடியும்! வெளிநாடுகள் செல்ல வேண்டாம் என சட்ட வல்லுநர் எச்சரிக்கை!

.....

.

Sunday, May 8, 2011

ராஜபக்சேவை கைது செய்ய முடியும்! வெளிநாடுகள் செல்ல வேண்டாம் என சட்ட வல்லுநர் எச்சரிக்கை!

இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிநாடுகளுக்கு சென்றால் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படுவார் என, அந்நாட்டின் மூத்த சட்ட வல்லுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஐ.நா. வல்லுநர் குழு அம்பலப்படுத்தியதையடுத்து, ராஜபக்சே உட்பட அவருக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
 
இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர தயாராகி வருகின்றனர். இதனால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மூத்த சட்ட வல்லுநர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, போர்க்குற்றம் அடிப்படையில் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளார்.

Thanks: kingtamil

2 comments:

  1. இந்த செய்தி மனசுக்கு இனிப்பாக இருக்கிறது....

    ReplyDelete
  2. இந்த கோரிக்கை வலுப்பெற்று ரத்தவெறி பிடித்த ராஜபக்ஷேக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்பது தான் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களின் விருப்பம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...