முஸ்லிமே ஆனாலும் ஒசாமா பிலேடனிக்கு பாகிஸ்தான்ல பாதுகாப்பு இல்ல, ஆனா 100 பேர்க்கு மேல கொன்ன கசாப்க்கு கோடிகணக்குல செலவு பன்னி பாதுகாப்பு.
கிடங்குல உணவு தானியங்கள் வீணாபோனாலும் போகும் ஆனா பொதுமக்களுக்கு தரமாட்டானுங்க..
கஷ்டப்பட்டு சம்பாரிக்கின்ற நாம சொத்து விவரதை தரனும், ஆனா M.P என்ற போர்வையில் கொள்ளை அடிக்கும் கூட்டம் சொத்து விவரத்தை அளிக்க தேவைல்லயாம்.
500, 1000 லஞ்சம் வங்குரவனை பிடிபானுங்க.. கோடி கணக்குல லஞ்சம் வாங்குனவனை ஜாமின்ல விடுவாங்க.
நாம பேங்குல பணம் போட்டா 1008 கேள்வி கேட்பானுங்க.. சுவிஸ் பேங்க் உள்ள பணத்தை பத்தி வாய தொரக்கமாட்டானுங்க.
என்ன தப்பு நடந்தாலும் எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்ல ஒரு P.M
நம்ம நாட்டு அறிக்கையா? அடுத்த நாட்டு அறிக்கையானு தெரியாமலே படிக்குர வெளியுறவு துறை அமைச்சர்.
போபால்ல செத்தவனுக்கு சரியான இழப்பிடுகூட வாங்கிதர வக்கு இல்லாத நீதி துறை.
அணுஉலை வைப்போம், மனித உயிருக்கும் உலை வைப்போம், அப்படி செத்தா நாங்க தர இழப்பிடதான்(பிச்சை) வாங்கிகனும்னு அமெரிக்கா சொன்னா தலையாட்டும் ஒரு அமைச்சரவை.
ஸ்பெக்ட்ரம்ல 120000 கோடி, S Band ல 3,00,000 கோடி காமன்வெல்த்ல 3000 கோடினு ஊழல் பண்னியவர்களின் பதவியைகூட பறிக்க முடியவில்லை
அப்ப என்னா______க்கு ஆட்சி பன்னுறாங்க?(_____ல என்ன கேவலமான வார்தை வேண்டுமானாலும் போட்டுகொள்ளுங்கள். அப்பவாது சொரனை வருதானு பார்போம்)
Tweet |
சொரனையா அப்பிடீன்னா....???
ReplyDeleteமாப்ள சொரனை அப்படின்னா இன்னாதுபா!
ReplyDeleteஹலோ சகோ.ராஜா..!
ReplyDeleteஅமைதி அமைதி தங்கள் மீதி அமைதி நிலவட்டுமாக..!
வெட்கம்...
மானம்...
சூடு...
சொரணை...
நேர்மை...
உண்மை...
சத்தியம்...
மனிதநேயம்...
பிறர்நலம் பேணுதல்...
நன்மை செய்தல்...
தீமைக்கு துணைபோகாமை...
அடக்குமுறை-ஒடுக்குமுறை இல்லாமை...
...இன்னும் இது போன்ற நல்ல விஷயங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாதவர்களாக நாம், நம் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து விட்டு... பின் வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..சகோ.
யார் கிட்ட போய் சொல்றிங்க.. இந்த பதிவ பிரின்ட் எடுத்து , அந்த பேப்பர்லேயே தொடச்சி போட்டுட்டு போய்டுவாங்க .. ! பாரம்பரியமிக்க கட்சி இதுதுதூ
ReplyDeleteஎல்லாம் கூட்டு களவாணிக தானேப்பு!!?? எப்பிடி ஒருத்தன ஒருத்தன் காட்டி குடுப்பான். அப்பிடி செஞ்சா அடுத்த தடவ இவன் செய்ய முடியாதே.
ReplyDeleteஒரே வழி தான் இருக்கு, ஹிட்லர் மாதிரி ஒரு ஆளு, அரசியல்வாதிய பூராம் கொன்னாத்தான் ஆச்சு, அது வரைக்கும் இப்பிடி நியூஸ் டெய்லி வரத்தான் செய்யும் நாமளும் அதை படிச்சுட்டு, அடுத்த நாளு வேற நியூஸ் வந்தவுடனே மறந்தும் போயிடுவோம்
நாம செய்ய வேண்டியத சரியா செஞ்சு இருந்தா, எல்லாம் சரியாய் இருந்து இருக்கும். நாம செய்யலையே நண்பா, நாம மட்டுமா நம்ம தத்தா காலத்துல இருந்தே நடந்து வந்து கிட்டு இருக்கு,
இது ஒரு அரை நூற்றாண்டு பிழை, இதை திருத்த இன்னும் இரண்டு நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்லை.
கடைசியா உங்களுக்கு ஒரு கேள்வி நீங்க கோவிச்சுகாதீங்க
அப்ப என்ன_________________க்கு ஓட்டு போடுறீங்க??