> என் ராஜபாட்டை : பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்

.....

.

Saturday, May 14, 2011

பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்

உணவு கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி கெட்டுப்போவதாக மீண்டும் செய்தி வெளியாகி உள்ள நிலையில், நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உணவுக்கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகி வீணாகும் நிலையில், அவற்றை ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ கொடுத்தால் என்ன? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு நல்ல பயிர் விளைச்சல் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோரடங்கிய அமர்வு, நாட்டில் பட்டியினால் யாரும் சாகவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் இந்த கோடையில் பொது விநியோக திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏழைகள் அதிகம் நிறைந்த 150 மாவட்டங்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவதற்காக 5 மில்லியன் டன் உணவு தானியங்களை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட கூடுதல் உணவு தானியங்களை பெற்றுக்கொண்டதை உறுதிபடுத்துமாறும் சம்பந்தப்பட்ட மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thanks : tamil.webdunia.com

1 comment:

  1. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வருகை இனிதாகுக

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...