> என் ராஜபாட்டை : பள்ளிமுன் போராட்டம் நடத்துபவர்களுக்கு சில கேள்விகள்?

.....

.

Sunday, June 26, 2011

பள்ளிமுன் போராட்டம் நடத்துபவர்களுக்கு சில கேள்விகள்?

இப்பொழுது பல இடங்களில் அதிகம் கட்டணம் வசூலிக்க படுவதாக கூறி பல பள்ளிகள் முன் போராட்டங்கள் நடத்தபடுகின்றது. அப்படி நடத்துபவர்களிடம் சில கேள்விகள்.

(இது என் மனதில் தோன்றியவை.. சரியா தவறா என சொல்லவும், விவாதிப்போம் ஆனால் சண்டை போடவேண்டாம்)

  1. ஒரு ஹோட்டலில் 2 ரூபாய்க்கு இட்டிலி போடுகிறான், அதே இட்லி கொஞ்சம் பெரிய ஹோட்டலில் 5 ரூபாய், அதுவே 5 நட்சதிர ஹோட்டலில் 15 ரூபாய். இட்லி ஒன்றுதான் அதை சாப்பிடும் இடமும், கூட வைக்கும் side dish, அங்கு உள்ள சுத்தமும் தான் விலையை நிர்ணயம் செய்கிறது. அது போல தான் பள்ளியும், காலை முதல் மாலை வரை நல்ல கல்வி வேண்டும், கணினி, பொது அறிவு என அனைத்திலும் அவனை வளர செய்யவேண்டும், புதுசா வர எல்லா டெக்னாலஜியிலும் அவனுக்கு நடத்த வேண்டும் அப்ப கட்டணமும் அதிகமாகதான் இருக்கும்.

அரசு சொல்லாமலே புது டெக்னாலஜியில் பாடம்(E-Learning, projectors) பாடம் நடத்தும் போது எதிர்காத நீங்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வாங்க சொல்லுவது நியாயமா?

  1. கல்வி ஒரு சேவை அதை சம்பாதிக்க பயன்படுத்தாதிர்கள் என கூறுகின்றனர் ஒரு சாரார். சரி உங்கள் பிள்ளைகளை B.A தமிழ் படிக்கவைத்து தமிழ்க்கு சேவை செய்ய வைப்பிற்களா? அல்லது B.E or M.B.B.S படிக்கவைத்து நல்ல வருமானம் வரும் வேலைக்கு அனுப்புவிற்களா? உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

  1. பிள்ளைகளை அதிக கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பின்பு போராட்டம்  நடத்துவதைவிட அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கு நல்ல கல்விதர வேண்டும் என கோரிக்கை விடுக்கலாமே.

  1. காலை 7 மணி முதல் மாலை 6 அல்லது 7 மணிவரை வகுப்பு எடுத்து உங்கள் பிள்ளை நல்ல மதிப்பென் பெற உங்களைவிட அதிகம் பாடுபடும் ஆசிரியருக்கு 2000 , 3000 சம்பளம் குடுத்தால் அவர்கள் எப்படி ஆர்வமுடன் வேலை பார்பார்கள்.(ஆசிரியர் தொழிலும் சேவைதான் என ஆரம்பிக்காதிர்கள், அதுக்கு 2 வது பாயிண்ட்தான் பதில்)

  1. பள்ளி கட்டணம் 8000 கட்டிவிட்டு , டியூஷனுக்கு 15,000 கட்டிவிட்டு மானவனை இரு இடங்களில் அலையவிடுவதைவிட இது நல்லது என நினைக்குறேன்.

  1. (MAXIMUM)எந்த அரசு அதிகாரிகளும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்கவைபதில்லை ஏன்?( கலெக்டர் ஒருவரை காட்டாதிர்கள் அவர் விதிவிலக்கு) இதை வைத்து ஒருவரும் போராட்டம் நடத்துவதிலையே ஏன்?

  1. புதுபடம் போடுற தியட்டருல டிக்கெட் பலமடங்கு அதிகம் வச்சு விக்கிறான், அதை கண்டுகாம செலவு பன்னி படம் பார்போம், பிள்ளை எதிகாலத்தை நிர்னயிக்கும் கல்விக்கு செலவுபன்ன யோசிப்போம்.

  1. இது L.K.G, UKG க்கு 40000, 50000 பிடுங்கும் பள்ளிகலுக்கும், எந்த வசதியும் இல்லாத பள்ளிகலுக்கும், பெற்றேரை மதிக்காத பள்ளிகலுக்கும் பொறுந்தாது.

டிஸ்கி : இவை அனைத்தும் என் மனஓட்டம், இது தவறாககூட இருக்களாம். சரியா? தவறா? மற்றும் உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

20 comments:

  1. நல்லா கேட்குராங்கய்யா கேள்வி..
    சபாஷ்..

    ReplyDelete
  2. //சரியா? தவறா?//

    சரி

    ReplyDelete
  3. ராஜா, நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் ரொம்ப சரி. பெற்றேர்களின் சம்பளம்,standard of living இவற்றை பொருத்து பள்ளி கட்டணம் வசுல் செய்தால் என்ன? என்க்கு தோன்றுவது சரியா என்று தெரியவில்லை??

    ReplyDelete
  4. என் மனதிலும் இதே தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. அதனால நீங்க சொல்லுறது ரைட்டு

    ReplyDelete
  6. ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்வது சரிதான்
    இதற்க்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்
    சொல்லும்

    ReplyDelete
  7. //பிள்ளைகளை அதிக கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பின்பு போராட்டம் நடத்துவதைவிட அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கு நல்ல கல்விதர வேண்டும் என கோரிக்கை விடுக்கலாமே.//
    am wit u in this point

    ReplyDelete
  8. i am differing some of your views.

    1. first of all, comparing education system with hotel itself is a wrong. Food in a restaurant is only few times in a month or not even one time in a month for a family man. but in case of education, every day through out the year.It affects the common man living. if you don,t like hotel food, you can cook and eat but education is not like that. so rates should not differ, govt should regulate this.

    once, there was no computer education in our schools when schools upgraded to computer education, people paid the price, they didn't oppose. that is the case for e-learning also.

    2. "Nothing in the world is free" , "everything is business" every one knows these two statements. the issue here is how much we are paying for it.. For 4 years of Engineering education govt fix the price why not for 12 years of school education?

    3. why not people are not taking protest in front of govt schools? reason is simple, they r not paying for that. bcos people know, "we didn't pay , we have no right to ask questions?". Even though this attitude is wrong, people thing that way.I agree, people have to go for protest what ever the school it is.

    4, 5. I agree with you in these points.

    6. this is a tricky question. if we say govt employee child should only goto govt school, that means we are denying rights for govt employees what others getting ( have a choice between govt school and private school ) . govt should have gone for samacheer kalvi instead of matric schools in earlier stage, govt made a mistake, In this case first mistake is done by govt.

    7.i think, my view for 1st point will suit here as well.

    ReplyDelete
  9. i am differing some of your views.

    1. first of all, comparing education system with hotel itself is a wrong. Food in a restaurant is only few times in a month or not even one time in a month for a family man. but in case of education, every day through out the year.It affects the common man living. if you don,t like hotel food, you can cook and eat but education is not like that. so rates should not differ, govt should regulate this.

    once, there is no computer education in our schools when schools upgraded to computer education, people paid the price, they didn't oppose. that is the case for e-learning also.

    2. "Nothing in the world is free" , "everything is business" every one knows these two statements. the issue here is how much we are paying for it.. For 4 years of Engineering education govt fix the price why not for 12 years of school education?

    3. why not people are not taking protest in front of govt schools? reason is simple, they r not paying for that. bcos people know, "we didn't pay , we have no right to ask questions?". Even though this attitude is wrong, people thing that way.I agree, people have to go for protest what ever the school it is.

    4, 5. I agree with you in these points.

    6. this is a tricky question. if we say govt employee child should only goto govt school, that means we are denying rights for govt employees what others getting ( have a choice between govt school and private school ) . govt should have gone for samacheer kalvi instead of matric schools in earlier stage, govt made a mistake, In this case first mistake is done by govt.

    7.i think, my view for 1st point will suit here as well.

    ReplyDelete
  10. பிள்ளைகளை அதிக கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு பின்பு போராட்டம் நடத்துவதைவிட அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கு நல்ல கல்விதர வேண்டும் என கோரிக்கை விடுக்கலாமே

    சரியான கேள்வி.
    எல்லாக் கேள்விகளுமே தான்

    ReplyDelete
  11. கரெக்டாத்தான் சொல்லிருக்கீங்க.. ஆனா //
    புதுபடம் போடுற தியட்டருல டிக்கெட் பலமடங்கு அதிகம் வச்சு விக்கிறான், அதை கண்டுகாம செலவு பன்னி படம் பார்போம், //
    இது பேச்சலர்கள் மட்டும் செய்வது.. எல்லோரும் அல்ல.

    ReplyDelete
  12. neenga solurathu thavarillai nu solluven..

    thavarillatha vishayangal sari nu aaidathu.. perumbaalaana palligal tharum kalvikku etra kaasu vaanguratillai.. ithu palligalukku illa kallorigalukkum porunthum.

    ReplyDelete
  13. இனிய நண்பருக்கு ,
    உங்கள் பார்வை முற்றிலும் தவறு . விரிவாக விவாதிப்போம்.
    உங்கள் ஊர்க்காரன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...