‘கட்சி அலுவலகம் மீட்பு யுத்தம்’ தொடங்கவுள்ளதாக கடலூரில் பா.ம.க. அறைகூவல் விடுத்துள்ளது. யுத்தம் புரிந்து இவர்கள் மீட்கத் திட்டமிட்டிருப்பது எதிரிக் கட்சி அலுவலகத்தை அல்ல, தமது சொந்த கட்சி அலுவலகத்தைதான் என்பதே இந்த அறைகூவலின் ஹைலைட். யுத்தம் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
அலுவலகத்தைக் கைப்பற்றி வைத்திருப்பது, இவர்களது கட்சியின் கடலூர் மாவட்ட முக்கியஸ்தராக இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன். இந்த முருகனோ, சாவியை கையில் வைத்துக்கொண்டு, அலுவலகம் தமது என்கிறார்.
வேல்முருகன் மற்றும் அவரோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் இருந்து கட்சி அலுவலகத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார், கடலூர் காவல்துறையின் கூடுதல் எஸ்.பி. ராமகிருஷ்ணன், ஆர்.டி.ஓ. இளங்கோவன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. மாநில துணை பொதுச் செயலர் சண்முகம், ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த புகாரைக் கொடுத்துள்ளனர்.
ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் ஆவேசமாக, “காவல்துறை நடவடிக்கை எடுத்து அலுவலகத்தை மீட்டுத்தர வேண்டும். இல்லையென்றால் யுத்தம் புரிந்தாவது அலுவலகத்தை மீட்போம்” என்றார். அது அகிம்சை யுத்தமா, அல்லது அடிதடி யுத்தமா என்பதை அவர் விளக்கவில்லை.இவர்கள் குறிப்பிடும் கட்சி அலுவலகம், கடலூரில் நேதாஜி சாலையில் அமைந்துள்ளது. உண்மையில் இந்த இடம் கட்சியின் சொத்தல்ல, கடலூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டடம். தற்போது 99 வருட லீஸில் எடுக்கப்பட்டு, இவர்களது பாவனையில் உள்ளது.
அலுவலகம் முற்று முழுதாக வேல் முருகனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது ஆதரவாளர்களில் வாட்டசாட்டமான சிலர் உள்ளே உள்ளனர்.நாம் விசாரித்தவரை, கடலூர் நகராட்சியிடம் இருந்து லீஸில் எடுத்த போது, பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் எடுக்கப்படவில்லை. லோங் டேர்ம் லீஸ் ஆவணங்களில் ‘வன்னியர் சங்கம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து வேல்முருகன் தரப்பு ஏதோ ஒரு சட்ட விளையாட்டில் ஈடுபடும் திட்டத்தில் உள்ளதாக தெரிகின்றது.
அலுவலகத்தை மீட்டுக் கொடுக்கும்படி கொடுக்கப்பட்ட புகாரில் பா.ம.க. தரப்பு, “சட்டவிரோதமாக எமது அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ள வேல்முருகன் மற்றும் அவரது அடியாட்களை வெளியேற்றி, கட்சி அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அலுவலகத்துக்குள் உள்ள வாட்டசாட்டமான ஆட்களை, ‘அடியாட்கள்’ என்கிறார்கள் இவர்கள். ‘கட்சித் தொண்டர்கள்’ என்கிறார்கள் அவர்கள்.
இரண்டுக்கும் இடையே வேறுபாடு ஏதாவது உண்டா என்பதுதான் குழப்பமாக உள்ளது!
நன்றி : விறுவிறுப்பு .காம்
Tweet |
யாருக்கு என்ன விருப்பமோ அப்படி வெச்சுக்கலாம், எனக்கு பாதி தொண்டர்கல்ன்னு தோணுது, மீது குண்டர்கல்ன்னு தோணுது..
ReplyDelete:)
ReplyDeleteஅரசியல் அரசியல்
ReplyDeleteஎன்னய்யா இது பா.ம.க.க்கு வந்த சோதனை?
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteஉலக அரசியல் வரலாற்றில் ஹி ஹி இதுதான் முதன் முதலாக நடக்குது, சொந்தகட்சி ஆபீசையே காப்பாத்த முடியாத கட்சி ஹே ஹே ஹே ஹே....!!!
ReplyDeleteஇதெல்லாம் ஒரு கட்சியா அடப்போங்கய்யா இதுக்கு வேற ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டீங்களே...
ReplyDeleteஎன்னங்க இது அவங்க கட்சி அலுவலகத்தில் கூட அவங்களுக்கு இடமில்லைனா என்ன கொடுமை?
ReplyDeleteநல்ல கூத்து போங்க, ஐயா கட்சியில் அவரும் அவர் மகனும்தான் மிஞ்சுவாங்க போல.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி:)
ReplyDeleteநானும் நாகப்பட்டினம் தான் :)
தொண்டன் குண்டனா இருந்தால நல்லது தானே! ஒரு பயம் வரும்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteஎன்னவோ நடக்கட்டும்.
ReplyDeleteசோதனை மேல சோதனை
ReplyDeleteநல்ல கூத்து நடக்குது
ReplyDeleteஇவர்கள் கொடுப்பது
ReplyDeleteமாம்பழ அல்வா :)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்ப,,,,,,,
ReplyDeletehttp://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்ப,,,,,,,
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141
கட்டுரை "விறுவிறுப்பா" இருக்கு...
ReplyDeleteதொண்டர்களா,குண்டர்களா?
ReplyDeleteஎல்லா கட்சியிலயும் இந்த குழப்பம் இருக்கே?
வணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
தமிழன் எங்கேயும் ஒற்றுமை இல்லாதவன் என்பதனை இவ் விடயம் மீண்டும் மெய்ப்பிக்கிறது.
செய்திப் பகிர்விற்கு நன்றி
ReplyDelete