> என் ராஜபாட்டை : இதை உங்கள் இல்லங்களில் கூட காய்ச்சலாம் .

.....

.

Sunday, November 13, 2011

இதை உங்கள் இல்லங்களில் கூட காய்ச்சலாம் .

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

செம்பருத்திப்பூ

மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.

ஆவாரம்பூ

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.

மாம்பூ

மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.
நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.

துளசி இலை

சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.

கொத்தமல்லி தழை

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்

புதினா இலை

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கொய்யா இலை

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.


நன்றி : வணக்கம்.நெட் 

19 comments:

  1. நீங்கள் ஆவாரம் பூ என்று போடப் பட்டுள்ளது, கரிசலாங்கண்ணி என்று நினைக்கிறேன்... மீண்டும் ஒரு முறை செக் செய்யவும்

    ReplyDelete
  2. நல்ல செய்தி தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மருத்துவ குறிப்புகள்..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. @F.NIHAZA
    செம்பருத்தி பாணம் குடித்திருக்கேன்.....
    மற்றவை இன்னும் இல்லை

    பகிர்வு சூப்பர்...

    ReplyDelete
  7. ஹி ஹி அண்ணே நீங்க எப்போ டாக்டர் ஆனீங்க சொல்லவே இல்லை ஹி ஹி....அனைத்தும் சூப்பர் மக்கா நன்றி...!!!

    ReplyDelete
  8. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  9. தமிழ் பத்து'ல இணைச்சுட்டேன்...

    ReplyDelete
  10. நல்ல மருத்துவ தகவல்கள் !

    ReplyDelete
  11. அருமையான தகவல்கள் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  12. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. பகிர்வு அருமை நன்றி

    ReplyDelete
  14. அறிந்துக் கொள்ள தந்தமைக்கு நன்றிங்க

    ReplyDelete
  15. பயனுள்ள மருத்துவ பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மருத்துவர் ராஜபாட்டை.

    ஒவ்வொரு குறிப்பும் உபயோப்படும்..!! பகிர்வுக்கு நன்றி..!!

    ReplyDelete
  17. ஒரு மருத்துவ குறிப்பா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்.

    ReplyDelete
  18. பகிர்வுமிக அருமை

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...