சென்னை, : “தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போய்விட்டதில், நாம் மிகவும் ஏழையாகி விட்டோம்” என்று தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆட்சியில் இருந்தால்தான் கட்சிக்கு ‘பைசா வரவு ஜாஸ்தி’ என்பதை மறைமுகமாக கட்சிக்காரர்களுக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார்.தி.மு.க.வில், “கட்சி வேறு, தலைவர் வேறு, தலைவரின் குடும்பம் வேறு” என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருக்கும்வரை, பைனான்சியர்களின் கூட்டம், சினிமாக்காரர்களின் கூட்டம் என்று வித்தியாசமான கூட்டங்கள் நடைபெற்று வந்த இடத்தில், இப்போதெல்லாம் வழக்கறிஞர்களை அழைத்துத்தான் ஆலோசனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது கட்சி.கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும் குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளுக்காக வழக்கறிஞர்களைச் சந்தித்துவரும் கருணாநிதி, கட்சிக்காரர்களின் ஊழல் வழக்குகளுக்காக வழக்கறிஞர்களை அறிவாலயத்தில் சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது, “சில வாரங்களுக்குமுன் தி.மு.க.,வில் வழக்கறிஞர் அணி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டிருந்தேன். தற்போது, அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அப்படி கேள்வி கேட்டால்தான், ‘என்ன இப்படி கேட்டுவிட்டாய், நாங்கள் எல்லாம் எங்கே போய் விட்டோம்?’ என்று மார்தட்டிக்கொண்டு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவீர்கள் என்று தெரியும். அதனால்தான் அப்படி கேட்டேன்” என்று அவர்களை முதலில் குளிர்வித்தார்.
தொடர்ந்து பேசும்போது, “நமது வழக்கறிஞர்களுக்கு எல்லாம், நாம் வேலை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை, இன்றைய அரசு எமக்கு வழங்கியிருக்கிறது. சிறையில் இருக்கும் தி.மு.க.வினரை மீட்க, நீங்கள் எடுத்துள்ள முயற்சியை தொடர வேண்டும். அவர்களுக்கு ஜாமின் தர மாட்டோம் என்று சொல்லும்போது, அரணாக இருந்து அவர்களை மீட்க வேண்டும்” என்று எம்பிளாய்மென்ட் ஆப்பர்சூனிட்டி பற்றியும் கூறியிருக்கிறார்.இப்படிப் பேசும்போது, கட்சிக்காரர்களை வெளியே எடுக்க கட்சிதான் செலவு செய்யப்போகின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டால், வக்கீல்கள் ஆளாளுக்கு பில்லும் கையுமாக வந்து நின்றுவிட்டால் என்ன செய்வது?எனவே அதையும் விளக்கமாக கூறிவிட்டார் முன்னாள் முதல்வர். “கேஸ் நடத்துவதற்கு யார் செலவு செய்வது என்று நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது. தி.மு.க., பொதுத் தேர்தலைச் சந்தித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கும் கட்சி என்பதை வழக்கறிஞர்கள் மறந்து விடக்கூடாது.
செலவு செய்வதற்கு உங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எனவே இந்த கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மனதில் கொண்டு, வழக்கு செலவுகளுக்கு தலைமையிடம் எதிர்பார்க்கக் கூடாது. உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் பைசா வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ‘பக்கத்து இலையிலிருந்து வடையை எடுத்துக்கொள்ள’ ஐடியாவும் கொடுத்துள்ளார்.
Hopefully, கனிமொழிக்காக வாதாடும் வழக்கறிஞர்களிடமும் கலைஞர், இதே கயிற்றைக் கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
நன்றி : விறுவிருப்பு .காம்
Tweet |
கலைஞர் இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு நட்டாற்றில் நிற்கும் நிலையில் தான் அவருக்கு ஞானம் உதித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteடேக் வடை ப்ரம் பக்கத்துக்கு இலை.சூப்பரு!
ReplyDeleteபாவம் சார் கலைஞ்சரு
ReplyDeleteஉண்மையாக மிக அருமையாக உள்ளது .
ReplyDeleteஅன்புடன்
யானைக்குட்டி
Kolaingar is saying to chrage money from the people who are in jail (or collect money from other people by force or any method)
ReplyDeleteராம் ஜெத் மலானி என்னும் அம்மா விசுவாசி எப்படி கனிமொழிக்கு ஆஜரானார் என்பது என் மிகப் பெரிய சந்தேகம்..
ReplyDeleteஐயோ சாமி உலக அல்வா!!
ReplyDeleteஹா ஹா
ReplyDeleteபாவமையா ரெம்ப கஸ்டப்படுறார்....!!!!!???))))
ReplyDelete//Hopefully, கனிமொழிக்காக வாதாடும் வழக்கறிஞர்களிடமும் கலைஞர், இதே கயிற்றைக் கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறோம்.//
ReplyDeleteஹா..ஹா...
நல்ல பகிர்வு.
பாவம் எதுக்குங்க அவரப்போயி
ReplyDeleteரைட்டு
ReplyDelete@suryajeeva
ReplyDeleteI also have this doubt
அட அப்படியா மாப்ள..
ReplyDelete//‘பக்கத்து இலையிலிருந்து வடையை எடுத்துக்கொள்ள’ ஐடியா//
ReplyDeleteநல்லாத்தான்யா குடுக்கறீங்க ஐடியா.
இந்த மனுசன் தான் ஆட்சியில் இருந்தால்தான் சுருட்டாலாம் என்று மறைமுகமாக சொல்கின்றார்.பாவம் தலைவருக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல்.குழம்பி போய் இருக்கார்...ஹி.ஹி.ஹி
ReplyDelete//
ReplyDeleteசென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருக்கும்வரை, பைனான்சியர்களின் கூட்டம், சினிமாக்காரர்களின் கூட்டம் என்று வித்தியாசமான கூட்டங்கள் நடைபெற்று வந்த இடத்தில், இப்போதெல்லாம் வழக்கறிஞர்களை அழைத்துத்தான் ஆலோசனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது கட்சி.//
காக்கை கூட்டங்கள் பறந்து விட்டதாக்கும்:)
//தொடர்ந்து பேசும்போது, “நமது வழக்கறிஞர்களுக்கு எல்லாம், நாம் வேலை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை, இன்றைய அரசு எமக்கு வழங்கியிருக்கிறது.//
ReplyDeleteயார் யார் சிரிச்சீங்க என்கிற உண்மை தெரிஞ்சாகனும்:)
//“கேஸ் நடத்துவதற்கு யார் செலவு செய்வது என்று நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது. தி.மு.க., பொதுத் தேர்தலைச் சந்தித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கும் கட்சி என்பதை வழக்கறிஞர்கள் மறந்து விடக்கூடாது.//
ReplyDeleteஇன்னுமொரு சரவெடி:)
Vaanga eazhaigala vaanga... Goundamani style
ReplyDeleteஇப்பக்கூட பாவம் கலைஞருன்னு தான் சொல்ல தோனுது.
ReplyDeleteகலைஞர் இப்பவும் கலைஞர் என்பதை நிருபிக்கிறார் .
ReplyDeleteஇன்னும் சம்பாதிக்க முடியாமல் போயிடுச்சே?!
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஇன்று கூடல் பாலாவின் வலையில்
ReplyDeleteவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
அவரு ரொம்ப பாவங்க..
ReplyDelete