> என் ராஜபாட்டை : 2G ல் ஜெயலலிதாவுக்கு தொடர்பு

.....

.

Thursday, August 25, 2011

2G ல் ஜெயலலிதாவுக்கு தொடர்பு

தமிழ் நாட்டில் உள்ள எல்லாரயும் இளிச்சவாயர்கள் எனறும் காதில் பூ வைத்தவர்கள் என்றும் எண்ணி கவிஞர்(!)கனிமொழியும் அவர் சார்பாக அவர் வக்கீல் சுஷில்( வண்டு முருகன்) சொன்ன பொண்மொழிகள்.

 1. கலைஞர் டி.வியில் நான் 15 நாள் மட்டுமே இயக்குனர். (அப்ப நீங்க கவிஞர் இல்லயா?)

 1. அவர் M.P என்பதை C.B.I மறைத்து விட்டது.( ஒட்டு வாங்கி ஜெய்திருந்தால் தெரிந்திருக்கும்)

 1. 230 கோடியை அவர் எப்படி செலவு செய்தார் என சி.பி.ஐ நிருபிக்கவில்லை. (அதான் கலைஞர் டி.வி இருக்கே)

 1. இந்த ஏலமுறை மன்மோகன் ஒப்புதலுடந்தான் நடந்தது. (அப்பாடா ! ராசா சொன்னதை இவரும் உறுதி செய்துவிட்டார். 1000 இருந்தாலும் ராசா வாக்கே ரோசாக்கு தெய்வ வாக்கு)

 1. மக்களவை தலைவரிடம் அனுமதி வாங்காமல் கைது செய்துவிட்டார்கள்.( நல்ல வேலை கருணாநிதியிடம் அனுமதி வாங்கவில்லைனு சொல்லல)

 1. சி.பி.ஐ அரசியல் காழ்புனர்சி காரனமாக வழக்கு தொடர்ந்துள்ளது.(உங்க அரசியல் அவர்களுக்கும் பிடிக்கவிலை போல)

 1. கனிமொழி ஒரு பெண், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்.   ( அப்ப ஜெயலலிதா, நளினி இவர்களாம் யாரு?)

 1. சி.பி.ஐ அவர் M.P என்பதை மறைத்து நீதி மன்றதை ஏமாற்றுகிறது. ( நீங்க 230 கோடிய மறைச்சீங்க)

 1. 2 G யில் எந்த ஊழலும் நடக்கவில்லை என பிரதமர், சிதம்பரம், கபில்சிபல் கூறிவிட்டனர். ( ஏன் வடிவேலு, குஷ்பு வை விட்டுடிங்க… சின்ன திருடனுக்கு பெரிய திருடன் சாட்சி!!)


போக.. போக இப்படியும் சொல்லலாம்……..!

 1. கனிமொழி வருங்கால தமிழக முதல்வர் எனவே விடுதலை செய்யவேண்டும்.

 1. பெயரில் மொழி என உள்ளது எனவே தேசிய மொழிக்கு மதிப்பலித்து விடுதலை செய்யவேண்டும்.


 1. கனிமொழி டி.வி யே பார்பதில்லை, அப்புறம் எப்படி கலைகர் டி.வியுடன் தொடர்பு இருக்கும்(ராசாவுடன் மட்டும்ஹீ..ஹீ).

4. இரட்டை(2 ) இலையை சின்னமாக வைத்து இருப்பதால் 2G ல
அ.தி.மு.க தான் மோசடி செய்துள்ளது. எனவே 2G ல்
ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளது.

வாங்க உங்களுக்கு எவ்வளவு பூ வேனும்.?(காதுல வச்சுக)

23 comments:

 1. அவங்க கமெண்ட்டுக்கு உங்க பதில் கமெண்ட் சுவாரசியாமா இருக்கு.

  ReplyDelete
 2. 1. கனிமொழி வருங்கால தமிழக முதல்வர் எனவே விடுதலை செய்யவேண்டும்.  ..... வல்லிய காரணம்..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

  ReplyDelete
 3. பின் குறிப்பு: உங்கள் பதிவில், சின்ன சின்ன எழுத்து பிழைகள் நிறைய இருப்பதும் காமெடிக்காகவா? ஒரு டவுட்டு!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. பாத்து நண்பரே இது அம்மா ஆட்சி ..


  ஆனால் அவர்களுக்கு(raasa,rosa ku) இந்த தண்டனை பத்தாது.

  ReplyDelete
 6. யோவ் என்ன அவசரம், எழுத்து பிழை பார்த்து எழுதக்கூடாதா, சில இடங்களில் கெட்ட வார்த்தை மீனிங்க்ல்லாம் வருது ஹி ஹி....

  ReplyDelete
 7. இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

  ReplyDelete
 8. பழைய மொந்தையில புதிய கள்ளா:)

  ReplyDelete
 9. வக்கீல் சுஷில்( வண்டு முருகன்)!! ஹா ஹா ஹா

  சும்மா வக்கணையாத் தான் சொல்றாங்கய்யா .....

  தமிழ்மணம் 3

  ReplyDelete
 10. ’இப்படியும் சொல்லலாம்’ சூப்பர்.

  ReplyDelete
 11. // 7. கனிமொழி ஒரு பெண், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும். ( அப்ப ஜெயலலிதா, நளினி இவர்களாம் யாரு?)//
  வாட் எ காமெடி...... ஹி..ஹி...ஹி....


  // 8. சி.பி.ஐ அவர் M.P என்பதை மறைத்து நீதி மன்றதை ஏமாற்றுகிறது. //
  நீதிபதிகள்லாம் முட்டாள்னு சொல்றாரோ......

  ReplyDelete
 12. வணங்கங்களும், வாக்குகளும்..

  ReplyDelete
 13. வணக்கங்களும், வாக்குகளும்..

  ReplyDelete
 14. நீங்க கெளப்புங்க ..

  ReplyDelete
 15. இரட்டை(2 ) இலையை சின்னமாக வைத்து இருப்பதால் 2G ல
  அ.தி.மு.க தான் மோசடி செய்துள்ளது. எனவே 2G ல்
  ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளது.

  இதை நான் எதிர்பார்க்கல..

  ReplyDelete
 16. கடைசியா சொன்னிங்க பாருங்க!அடேங்கப்பா!

  ReplyDelete
 17. சூப்பர்...

  ReplyDelete
 18. நீங்க இவங்கள வச்சு காமெடி கிமடி பணலையே ?

  ReplyDelete
 19. /ராசா வாக்கே ரோசாக்கு தெய்வ வாக்கு//

  ஹா ஹா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...