> என் ராஜபாட்டை : வடிவேலு கதி என்ன ?

.....

.

Tuesday, August 9, 2011

வடிவேலு கதி என்ன ?


 சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். அப்புகார் மனுவில், தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.
 
இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார். அவர், ’’நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல. இரும்புலியூர் இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர்.
 
இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது. 2002-ல் அந்த நிலத்தை விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். அப்ப இன்னொருத்தவர் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். போலி பத்திரம் வச்சி விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் என்பவர் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.
 
சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை, அப்பா எல்லோரும் போலி பத்திரம், தயாரிச்சிட்டா இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் அத பார்த்து ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.
 
என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்’’என்று கூறியுள்ளார்.
 
வடிவேலு கதி என்ன ?
 
நன்றி :   Kingraja.com

20 comments:

 1. Hi friends . . . Pls connect this post to tamilmanam and tamil 10 and ulavu. . . Thanks . .lmanam and tamil 10 and ulavu. . . Thanks . .

  ReplyDelete
 2. என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்’’என்று கூறியுள்ளார்.//

  வேற வழி.......???!!!

  ReplyDelete
 3. நம்ம கைப்புள்ள கண்டிப்பா வரணும்..

  ReplyDelete
 4. பாவம்யா மனுஷன்

  ReplyDelete
 5. சினிமாவில் மட்டும் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் செம அடி வாங்குறாரே! :-(

  ReplyDelete
 6. அடி பலம் போலயே...

  ReplyDelete
 7. பாவம்யா நம்ம வடிவேலு...எல்லோரும் சேர்த்து ரவுண்டு கட்டுறாங்களே...

  ReplyDelete
 8. அவரு சிபி போல.

  ReplyDelete
 9. இன்றைக்கு முதல் போணீ நீங்கதான்!

  ReplyDelete
 10. //போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள்.//

  வடிவேலு சொல்றதுல ஒரு முக்கியமான விசயம் இருக்குது.பத்திர உரிமைக்காரர்களுடன்,பத்திரம் சரியா இல்லையா என தெரிந்தே தில்லுமுல்லு செய்பவர்களும்,அரசுப் பணியாளர்களும் இதில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

  ReplyDelete
 11. பாவம் கைப்புள்ள. இது தெரியாம இருக்காரு.

  ReplyDelete
 12. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 13. இந்த கைப்புள்ளைக்கு இது தேவைதான்
  தேர்தல் சமயம் கொஞ்சமா பேசிச்சு இந்த காமெடி பீஸ்

  ReplyDelete
 14. என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்’’என்று கூறியுள்ளார்.//

  வேற வழி.......???!!!


  Nanji Mano... neeghala iruntha enna seyuvinga...

  ReplyDelete
 15. ஹாஹா ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி(எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

  ReplyDelete
 16. எதாவது சொல்லுங்க.////போலிப் பத்திரம் தயாரிக்கிறது,நிலம் விக்கிறது பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க!முன் அனுபவம் கிடையாது!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...