> என் ராஜபாட்டை : கலைஞரிடமிருந்து ‘அந்த’ வார்த்தையா? எல்லாம் ரொம்ப ஓவருங்க!

.....

.

Saturday, August 20, 2011

கலைஞரிடமிருந்து ‘அந்த’ வார்த்தையா? எல்லாம் ரொம்ப ஓவருங்க!

 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தனக்கு எதிராக கேவலமான முறையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு கண்ணியமான முறையில் பதில் கொடுத்து, தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறார். அவர்மீது கேவலமான முறையில் குற்றச்சாட்டைச் சுமத்தியவர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு சிறியதாக ஒரு பிளாஷ்பேக் உண்டு.

“போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் இஸ்லாமியர் என்பதால்தான், அவர்மீது அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கின்றது” என்று ஒரு அறிக்கை விட்டிருந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. (அறிக்கைதான் விடமுடியும். பின்னே, அவரால் சட்டசபையில் எழுந்து பேசத்தான் முடியுமா?) இதற்கு சட்டசபையில் பதில் கொடுத்த விஜயகாந்த், “அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்துப் பழி வாங்கியவர் கருணாநிதி. அப்போது இஸ்லாமியர் என்று பார்க்கவில்லையே” என்றார்.

விஜயகாந்தின் கூற்றுக்கு பதிலடியாக அடுத்த அறிக்கை விட்டார் கருணாநிதி. “பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை” என்றது, பழுத்த அரசியல்வாதி என்று அழைக்கப்படும், அவரது அறிக்கை.
இந்த அறிக்கைக்கு பதில் தெரிவித்துள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், “முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதை மறு பரிசீலனை செய்து, தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும். தி.மு.க. அதைச் செய்யாது. ஆனால், ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடப்பதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். எனது பேச்சுக்கு, “பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை” என்று கூறுகிறார்.

அவரை “கலைஞர்’ என்றுதான், இன்றுவரை கண்ணியத்துடன் நான் பேசுகிறேன். அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்?” என்று கூறியுள்ளார்.கண்ணியமாகப் பேசுவதா? திராவிட பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்களுக்கு அதிலெல்லாம் அவ்வளவாகப் பழக்கமில்லையே!

நன்றி : விறுவிறுப்பு . காம்

21 comments:

  1. Hi friends pls connect to tamil manam and others. . Thanks

    ReplyDelete
  2. கலைஞருக்கு க(ன்)னி மொழி தான் தெரியும். கண்ணியம் பற்றி தெரியாது. உன் பாவாடையை திறந்துப்பார், என்று சொல்லிவிட்டு அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தவர் தானே இவர்.

    www.panangoor.blogspot.com

    ReplyDelete
  3. சொல்லப் போனா கலைஞர்தான் நிறைய தடவை பைத்தியக்காரத்தனமா உளறி வைத்திருக்கிறார்.

    ReplyDelete
  4. இன்னைக்கு இவரு நல்லவர்ன்னா, நாளைக்கு அவர் நல்லவர். இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.

    ReplyDelete
  5. பாத்து! தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கலைஞர் னு சொல்லிடப்போறார் கேப்டன்!

    ReplyDelete
  6. அரசியல் அலசல்

    தமிழ் மணம் நாலு

    ReplyDelete
  7. மகுடமாய் ஏழாவது ஒட்டு நண்பா

    ReplyDelete
  8. இந்த செய்தியை பதிவிடனும் என்ற எண்ணம் எனக்கும் வந்தது நண்பா ...நீங்க ரொம்ப அழகா சொல்லி வென்றுவிட்டீர்கள்

    ReplyDelete
  9. தாத்தா எப்போ சரியா பேசி இருக்கு,
    நாகரிகத்தை தாத்தாவிடம் எதிர்பார்ப்பது
    அடி முட்டாள் தனம்

    ReplyDelete
  10. தாத்தாவுக்கு வயசாயிடுச்சி,ஒய்வு பெற்றுக்கொள்ளாமல் தடுமாறிவருகிறார் பல்வேறு வகையிலும்.

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்!

    ReplyDelete
  12. என்ன நம்ம கடைப்பக்கம் இப்போ வர்றதே இல்ல?

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்,
    விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சிப் பாதையில் அவர், தேறி வருகின்றார் என்பதற்குச் சான்றாக அவரது சமீபத்தைய நடவடிக்கைகள் அமைகின்றன.
    கப்டன் பொறுமையுடன், ஒவ்வோர் கருமங்களையும் கையாள்வது அவரது வளமான எதிர்காலத்திற்குச் சான்றாக அமைகின்றது என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  14. அவரே கேள்வி கேட்டுக்கொண்டு அதற்கு பதிலும் சொல்லிக்கொள்பவர் மு.கருணாநிதி. அவரிடம் கேள்வி கேட்பவன் தான் முட்டாள். விட்டுத்தள்ளுங்கள். ராஜா..நீங்கள்தான் அடுத்த கேபினெட் அமைச்சரா? உங்கள் பெயரை வைத்து இக்கேள்வியை கேட்கிறேன்..

    ReplyDelete
  15. @! சிவகுமார் !

    நமக்கு தீகரும் புடிக்காது , கனியையும் பிடிக்காது

    ReplyDelete
  16. மு.கருணாநிதி பைத்தியக்காரத்தனமா உளருகிறார் That is normal

    ReplyDelete
  17. வயசாகிப்போச்சி, ஆட்சியும் கையை விட்டு போயாச்சு, நடக்கிறது எல்லாமே அவருக்கு எதிராவே இருக்கு. உளறல்.... உதறல் எல்லாம் வரும் தானே !!!!!!!!!!1

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...