> என் ராஜபாட்டை : டவுட்டு… கண்ணா டவுட்டு….

.....

.

Friday, August 12, 2011

டவுட்டு… கண்ணா டவுட்டு….

 1. சமசீர்கல்வியை இப்பொழுது ஏற்றுகொண்ட ஜெயலலிதா ஆரம்பத்திலேயே ஏற்றுயிருந்தால் மாணவர்கள் நேரம் மிச்சமிகி இருக்கும்.  தி.மு.க போராட்டம் நடத்த வாய்பில்லாமல் போயிருக்கும்.  ஒரு பொடியனை கலைஞ்ர் டிவியில் சமசீர்கல்வி புத்தகம் தந்த கலைஞர் வாழ்கனு சொல்லவைக்காமல் இருந்து இருக்கலாம். எல்லாதயும் தெளிவா பண்ணும் அம்மா ஏன் இதுல சருக்குச்சு?

 1. கடந்த சில வாரங்களாக எங்கள் ஊரில் மின்தடையே இல்லை. 5 வருடங்களாக பலத்த தடையை சந்தித்த எங்களுக்கு இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம். 5 வருடம் ஆட்சில இருந்து ஒன்னும் பன்ன முடியல தி.மு.காவால். ஆனால் 3 மாததில் அம்மாவால் எப்படி முடிந்தது?

 1. ஈழ மக்களுக்காக என் பதவியை இழக்க தயார்னு சொன்னார் நம்ம திருமா. எப்ப ? இன்னும் 3 வருடம் கழித்தா ?

 1. 1973 மே 20 திண்டுகல் இடைதேர்தல் ஆ.தி.மு.க விடம் படுதோல்வி அடந்த பின் கலைஞர் அளித்த பேட்டி:

“இந்த தொகுதியில் 65 % முக்குலத்தோர், அதில் 50 % பிரமலைகள்ளர் . இதனால் தான் ஆ.தி.மு.க ஜெய்தது.”
                                           (நன்றி: தினதந்தி)

ஆ.ராசா கைது செய்யப்பட்டபோது :

“ ராசா ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அவர் முன்னேற்றம் பிடிக்காமல் சதி செய்கின்றனர் “

ஜாபர் சேட் மேல் நடவடிக்கை எடுத்தபோது

 “ அவர் ஒரு இஸ்லாமியர், அதுவும் ரம்ஜான் மாததில் நடவடிக்கை தவறு. “


கலைஞர் அப்போது இருந்து இன்னும் ஏன் மாறவில்லை ?

 1. ஏல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்கதான் சமசீர் கல்வி திட்டம் எனில் கல்லுரிகளில் இனி ஏன் இடஒதுக்கிடு முறை ?
12 comments:

 1. ஈழ மக்களுக்காக என் பதவியை இழக்க தயார்னு சொன்னார் நம்ம திருமா. எப்ப ? இன்னும் 3 வருடம் கழித்தா ?

  தனது கதிரை பறிபோகுமட்டும் இப்படியே சொல்வாங்க..
  இவங்களப்பற்றி நினைத்தால் டவுட்டில்ல எல்லாம் வாரும்..
  நல்ல பதிவு..

  ReplyDelete
 2. நல்ல டவுட்டு ...

  ReplyDelete
 3. \\\ஏல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்கதான் சமசீர் கல்வி திட்டம் எனில் கல்லுரிகளில் இனி ஏன் இடஒதுக்கிடு முறை\\\ புது குண்டா ?

  ReplyDelete
 4. \\\ஏல்லாருக்கும் சமமான கல்வி கிடைக்கதான் சமசீர் கல்வி திட்டம் எனில் கல்லுரிகளில் இனி ஏன் இடஒதுக்கிடு முறை\\\


  கல்லூரியில் தொழிற்கல்வி, கலைப்பாடம் , தொழில்நுட்ப படிப்பு என பல பிரிவுகள் இருப்பதால் பொது பாடத்திட்டம் சாத்தியமில்லை.

  இட ஒதுக்கீட்டுக்கும் , சமச்சீர் கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

  ReplyDelete
 5. கேள்விகள் கேட்பது எளிது.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...