.

.

Thursday, August 4, 2011

தி .மு .க விடம் இருந்து தப்பிப்பது எப்படி ?


எம்மில் பலர் சூரிய ஒளிக்கு வரும் போது அதிலிருந்து பாதுகாப்பை தரும் பல வழிமுறைகளை கையாளுபவர்களாக இருக்கின்றோம். வெளியில் வரும் போது நமது மேனியை சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பது என்பது மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இதனை நீங்கள் ஒரு கட்டாய கடமையாக கொண்டு செயற்பட்டால்  நிச்சயம் நீங்களும் அழகிகள் தான்.
கடற்கரைக்கோ அல்லது நீச்சல் தடாகத்திற்கோ சென்றால் மீண்டும் மீண்டும் ஒப்பனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்நிலையில் ஒழுங்கற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்கள் ஏற்படுகிறது.  எனவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடுபவை 21 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக வெளிவந்தவை.
01. UVA/UVB  பாதுகாப்பை தரும் cream  மட்டும் உபயோகப்படுத்தாது ‘என்டிஒக்ஸிடன்ட் cream  ஒன்றையும் உபயோகப்படுத்தல் சிறந்தது
02. நேரடியான சூரிய ஒளியிலிருக்கும் போது T-shirt  அல்லது வேறு ஆடைகளை களைவதை விடுத்து சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பை தரும் ஆடையை அணிவது அவசியம். அதுவும் கடும் நிறத்திலான இறுக்கமாக நெய்யப்பட்ட ஆடை அணிவது அவசியம்.
03. முழு உடலுக்கும் ஒரு படையாக sunscreen lotionஐ இட வேண்டும்.
04. 20 நிமிட சூரிய ஒளி உடலுக்கு உகந்தது என்பது தவறான கருத்து. பாதுகாப்பின்றி வெளியில் வருவது உடல் நலத்தை பாதிக்கும்.
05. ஓசோனின் துவாரம் காரணமாக நேரடியான சூரியக்கதிர்கள் பூமியை வந்தடைவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே கதிர் பாதுகாப்பு முக்கியமானது.

என்னடா தலைப்புல தி .மு க இருக்குன்னு யோசிகிரிங்களா ... தி மு க சின்னம் சூரியன் தானே ...
Thanks. . Vanakamnet.com

18 comments:

  1. அடப் பாவி...சூரிய ஒளியிலிருந்து நம்மைப் பாதுகாப்பது என்றால்...
    திமுகவிடமுருந்தா...
    அவ்..அவ்...

    ReplyDelete
  2. தலைப்ப பார்த்து ஏதோ புகையும்னு நம்ம்ம்ம்பி வந்தேனே...

    ReplyDelete
  3. தலைப்பில் சாகசம்,
    படைப்பில் ஆவர்த்தனம்.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  4. நல்லா வைக்கிறாய்ங்க தலைப்பு! :-)

    ReplyDelete
  5. நான் நூறு மார்க் தருவேன்..

    ReplyDelete
  6. தலைப்பை பார்த்து வந்தேன் எமாத்திட்டேன்களே,
    ஆனாலும் பதிவு சூப்பர்

    ReplyDelete
  7. என்னடா தலைப்புல தி .மு க இருக்குன்னு யோசிகிரிங்களா ... தி மு க சின்னம் சூரியன் தானே ... //
    உண்மையிலேயே நான் குழம்பிட்டன் தான்...
    அடுத்ததாக வரும்..அடுத்ததாக வரும் விடயம் என்று வாசித்துக்கொண்டு வந்தேன்....
    hahahaa...

    ReplyDelete
  8. நல்லாதான்யா விடுறாங்க ரீலு....

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  9. இதுக்கு பேர்தான் குசும்புன்னு சொல்லுவாங்களோ?!


    ரசித்தேன்... :)

    ReplyDelete
  10. தலைப்பைப்பார்த்து அட தி மு க பற்றித்தான் பட்டையைக்கிளப்பவர்ரார் ராஜபாட்டை என்று பதிவை படிக்க ஆரம்பித்தால்...

    ReplyDelete
  11. ஹா ஹா நல்லா வைக்கிறீங்க தலைப்பு

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

AD-3

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...