> என் ராஜபாட்டை : என்னடா இது !!..இந்த மதுரை (கரை வேட்டிகளு)க்கு வந்த சோதனை!

.....

.

Monday, August 29, 2011

என்னடா இது !!..இந்த மதுரை (கரை வேட்டிகளு)க்கு வந்த சோதனை!


மதுரை, இந்தியா: கடந்த சில ஆண்டுகளாகக் காணக்கிடைக்காத காட்சி ஒன்றைக் கண்டு களிக்கிறார்கள் மதுரை மக்கள். மக்களை விடுங்கள்.. மதுரை காவல்துறையினரே, தங்கள் கைகளைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்! “கனவிதுவா.. நிஜமிதுவா..” அப்படியென்ன காட்சி? கட்சிக்கரை வேட்டி கட்டிய உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும், காவல்துறையினரைக் கண்டவுடன் பவ்வியமாக ‘விஷ்’ செய்துவிட்டுச் செல்கின்றனர்!

கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரையில், கரைவேட்டி கட்டிய உடன்பிறப்புகள்தான் காவல்துறையினரை ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.காவல்துறை பயிற்சியில் போலீஸ்காரர்கள் விரைப்பாக நிற்பதற்கு ஒரு கமான்ட் உண்டு. “அட்டேன்ஷன்” என்று கமான்ட் கொடுத்தால் விரைப்பாக நிற்பார்கள், பயிற்சியின்போது! அதெல்லாம் போலீஸ் மைதானத்தில்தான். கடந்த ஆட்சியின்போது, வெளியே பொலீஸ்காரரைக் கண்டால் வேறு ஒரு கமான்ட் இருந்தது.அது என்ன தெரியுமா?  “எங்கிட்ட வாணாம்..  அண்ணன்கிட்ட சொல்லிருவேன்”

இந்தக் கமான்டை கேட்ட மாத்திரத்தில் மதுரை ஜில்லாவிலே எந்தப் போலீஸ்காரரும் விரைப்பாகத்தான் நிற்க வேண்டியிருந்தது. அதெல்லாம் ஒரு அழகிய கனாக்காலம்! இப்போது மதுரை ‘அண்ணனே’ விரைப்பாக இல்லை.இப்போது ஆட்சி மாறி, கட்சிக் கரைவேட்டி உடன்பிறப்புகள், காவல்துறையினரைக் கண்டால் பவ்வியமாகப் போவது ஒன்றும் ஆச்சரியமில்லை. மதுரையில் முன்பு சால்னா வாங்க அனுப்பியவர்களை, எப்போது ‘சாத்தலாம்’ என்று  சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.ஆனால், கரைவேட்டி ரத்தத்தின் ரத்தங்களின் ஓவர் பவ்வியத்துக்கு என்ன காரணம்? கட்சிக்குள்ளே ஏதாவது மனித உரிமை வகுப்புகள் நடக்கின்றனவா?அதெல்லாம் இல்லை. இது வேறு விவகாரம்!

“அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது சொந்த அலுவல்களுக்காகவோ இந்த நபர் எங்களிடம் சிபாரிசுக்கு வரவில்லை”  போலீசாரிடம் நற்சான்று கடிதம் பெறவேண்டிய தேவை அ.தி.மு.க. பகுதிச் செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதுதான் விஷயம்.ஆட்சிக்கு வந்தவுடனேயே, கடந்த ஆட்சியின்போது நடந்ததுபோல தனது ஆட்சியிலும் நடக்கக்கூடாது. போலீசார் சுதந்திரமாக பணியாற்றினால் தான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

இதையடுத்து, “நீங்கள் யாரும் போலீசாரிடம் சிபாரிசுக்கு செல்லக்கூடாது. இதை உறுதிசெய்யும் வகையில், அவர்களிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும்” என்று ஒரு கடிதம், அ.தி.மு.க. ஒன்றிய குழு செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அட, இதுகூட நல்லா இருக்கே! மாதம் ஒருமுறை சான்றுக் கடிதம் பெறவேண்டும் என்று அம்மா கடிதம் எழுதினால், இன்னும் விசேஷமாக இருக்குமே!

நன்றி : விறுவிறுப்பு.காம்

17 comments:

 1. உலகம் உருண்டய்யா மாப்ள - இப்படிக்கு போலீசு ஹிஹி!

  ReplyDelete
 2. ஸ்டில் கலக்கல்!
  தமில் மனம் இணைசாச்சு!

  ReplyDelete
 3. இண்ட்லியில் இனைத்துவிட்டேன்

  தமிழ்மனம் 2

  ReplyDelete
 4. இந்த புது டெக்னிக் நல்ல விஷயமா இருக்கே... காவல்துறை தன் பலத்தை இனிமேலாவது அறிந்துகொள்ளட்டும்... அந்த பலத்தை சாமானியர்களின் நியாயத்திற்காக பயன்படுத்தட்டும்!!

  ReplyDelete
 5. STILL SUPER.....NALLATHU NADANTHA SARI

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. //இதையடுத்து, “நீங்கள் யாரும் போலீசாரிடம் சிபாரிசுக்கு செல்லக்கூடாது. இதை உறுதிசெய்யும் வகையில், அவர்களிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும்” என்று ஒரு கடிதம், அ.தி.மு.க. ஒன்றிய குழு செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அட, இதுகூட நல்லா இருக்கே! //
  நல்ல அணுகு முறை!

  ReplyDelete
 8. ஆஹா.. இது தான் பரஸ்பரம் மரியாதையாக நடந்து கொள்வது என்பதா?
  அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் நல்லது தானே.

  ReplyDelete
 9. அம்மா ஆட்சியில் காவல் துறை சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ......

  ReplyDelete
 10. கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரையில், கரைவேட்டி கட்டிய உடன்பிறப்புகள்தான் காவல்துறையினரை ட்ரில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.காவல்துறை பயிற்சியில் போலீஸ்காரர்கள் விரைப்பாக நிற்பதற்கு ஒரு கமான்ட் உண்டு. “அட்டேன்ஷன்” என்று கமான்ட் கொடுத்தால் விரைப்பாக நிற்பார்கள், பயிற்சியின்போது! அதெல்லாம் போலீஸ் மைதானத்தில்தான். கடந்த ஆட்சியின்போது, வெளியே பொலீஸ்காரரைக் கண்டால் வேறு ஒரு கமான்ட் இருந்தது.அது என்ன தெரியுமா? “எங்கிட்ட வாணாம்.. அண்ணன்கிட்ட சொல்லிருவேன்”

  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றி சகோ .தமிழ்மணம் 6 போட்டாச்சு நம்ம கடைக்கும் வாங்க தல .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

  ReplyDelete
 11. தமிழ்மணம் 7 யாரோ இடையில போட்டுட்டாக சகோ ஹி...ஹி ....ஹி ....

  ReplyDelete
 12. காவல் துறைக்கு சலாம் போடுறாங்களே பாஸ்..

  அவ்..........

  ReplyDelete
 13. காலம் மாறி போச்சு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...