> என் ராஜபாட்டை : இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்து.

.....

.

Sunday, August 28, 2011

இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்து.
விபத்துகள் நடப்பது நமது அன்றாடவாழ்வில் சகஜம்.  சில விபத்துகள் நம் நினைவை விட்டு விலகாதவையாக அமைந்துவிடும். காரணம் அதன் அழிவு மற்றும் உயிர் இழப்பின் அளவு. அப்படி நடந்த சில விபத்துகளின் தொகுப்புதான் இந்த பதிவு.

 1. 2000 பேரை பலி வாங்கிய ரயில் விபத்து :

பீகாரில் நடந்த இந்த ர்யில் விபத்தில் 2000 பேர் இறந்தனர். உலகில் நடந்த விபத்தில் மிக கொடியது இது.கோசி ஆற்றில் விழுந்து , ஆற்று வெள்ளத்தில் 5 பெட்டிகள் அடித்து செல்லபட்டதால் உயிரிழப்பு அதிகமானது.

 1. 250 பேர் பலியான அரியலூர் ரயில் விபத்து.

தமிழ் நாட்டில் நடந்த விபத்தில் மிக பெரிய விபத்து இது. திருச்சிக்கு அருகே உள்ள கல்லம் என்ற இடத்தில் “மருதையாறு” ஒடுகிறது. பலத்தமழையில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. 23-11-56 அன்று காலை “தூத்துகுடி எக்ஸ்பிரஸ்” கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 250 பேர் பலியானர்.
 1. 1500 பேர் பலியான தனுஷ்கோடி புயல்

1964 ம் ஆண்டு டிசம்பர் 23 ல் தென் தமிழ் நாட்டை கடுமையான புயல் தாக்கியது. ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியில் கடல் பொங்கி உள்ளே வ்ந்தது. அங்கு உள்ள ரயில் நிலையத்திலும், சுங்க இலாகா அலுவலகத்திலும் பலர் இருந்தனர். இந்த விபத்தில் சுமார் 1500 பேர் இறந்தனர்.

 1. 115 பேர் பலிகொண்ட தூத்துகுடி சினிமா கொட்டகை விபத்து

   29.7.79 அன்று தூத்துகுடியில் உள்ள “ லட்சுமி டூரிங் டாக்கீஸ்” சினிமா கொட்டகையில் பாவமன்னிப்பு படம் ஒடியது.  அன்று ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.  மாலை 4 மனிக்கு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 115 பேர் இறந்தனர். 86 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 1. 90 குழந்தைகளை பலிகொண்ட பள்ளி தீ விபத்து :

16-7-2004 அன்று கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 48 சிறுவர்கள், 42 சிறுமிகள் என 90 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழ் நாட்டில் நடந்த கொடுமையான விபத்தில் முதலிடம் இதுதான்.


இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்துகளில் மிகவும் பெரியது

“காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்வது..”


23 comments:

 1. Hi friends . . Pls try to connect tamilmanam and others . . Thanks

  ReplyDelete
 2. மன வேதனை தரும் விபத்துக்கள் தோழரே கடைசி விபத்து அட்டகாசம்

  ReplyDelete
 3. கடைசில போட்டு தாக்கினீங்க பாருங்க ....அது ......

  ReplyDelete
 4. மற்ற விபத்துக்களில் எண்ணிக்கை உண்டு..
  கடைசி விபத்தில்...

  ReplyDelete
 5. நாகையில் இருந்துகொண்டு சுனாமியை மறந்துவிடீர்களே.. அது விபத்து அல்ல என நீங்கள் விளக்கம் தருவீர்கலாயின்.. தனுஸ்கோடி புயல சொல்லியிருக்ககூடாது..

  ஆனா, கடைசியாக நச்சினு சொல்லிட்டிங்க பாஸ்..

  ReplyDelete
 6. கடைசி கமெண்டுக்கு ஆட்டோ வர்றமாதிரி ஆகிடப்போவுது!!!!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. //இந்தியாவில் நடந்த மிகபெரிய விபத்துகளில் மிகவும் பெரியது

  “காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்வது…..”//

  சரியா சொன்னீங்க பாஸ்......

  ReplyDelete
 10. வேதனைதரும் விபத்துக்கள் குறித்த அறிக்கை
  என்னத்தச் சொல்ல மனசு வலிக்குது .ஆனாலும்
  ஒரு தவறு விட்டுவிட்டீர்கள் அரசே!...இந்தக்
  காங்கிரஸ் கட்சி வந்தாப் பொறவு இன்னாச்சு எண்ணு
  ஒண்ணுமே சொல்லலியே அது எதுக்குயா ? .... ஒ
  புரிஞ்சுடிச்சு.2012 ஏதோ ஒண்ணு வருமாமே அப்புடீன்னு சொல்லீரு .சனங்களுக்குப் புரியுமில்ல ஹி....ஹி ...ஹி ...
  நன்றி சகோ பகிர்வுக்கு ....தமிழ்மணம் 3

  ReplyDelete
 11. வேதனை தரும் விபத்துகள்.
  கடைசி பன்ச்..நல்லாயிருக்கு.

  ReplyDelete
 12. இது போன்ற விபத்துக்கள் இனியும் தொடரக்கூடாது!!!!

  ReplyDelete
 13. தூத்துக்குடி சினிமாகொட்டகையில்
  நடந்த விபத்தில் சிக்கி தப்பித்த சிலரை நான் நேரில் கண்டிருக்கிறேன் நண்பரே...
  ரொம்ப கொடுமையா இருந்தது அவர்களை பார்க்க......

  ReplyDelete
 14. கடைசியாக சொன்ன விபத்திற்கு தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது. ஆபரேஷன் சக்சஸ். வடக்கில் இருப்பவர்கள் எப்போது சரி செய்வார்களோ..

  ReplyDelete
 15. ஆறாவதா ஒரு விபத்துச் சொன்னீங்களே,பயங்கரம்!

  ReplyDelete
 16. கொடுமையிலும் கொடுமை கடைசி கொடுமை

  ReplyDelete
 17. மாப்ள விபத்துக்கள் மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...ஆனா கடைசி விபத்து கண்டவுடன் இதயம் வெடிசிருசிய்யா!

  ReplyDelete
 18. நீங்க சொன்ன எந்த விபத்தும் இனி நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்!
  குறிப்பா கடைசி விபத்து!
  ஐயோ நினைக்கவே உள்ளம பதறுது!
  tm 10

  ReplyDelete
 19. எதிலோ ஆரம்பித்து எங்கேயோ முடித்து விட்டீர்களே நண்பரே!அட்டகாசம் போங்கள்.கடைசி விபத்து இனி நடக்காமல் இருப்பது நமது கையில்தான் இருக்கிறது.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...