> என் ராஜபாட்டை : கலைஞர் டி.வி.க்கு, வெகு கச்சிதமாக ஒரு ‘கடக்!’- விறுவிறுப்பு ரிப்போர்ட்

.....

.

Saturday, August 6, 2011

கலைஞர் டி.வி.க்கு, வெகு கச்சிதமாக ஒரு ‘கடக்!’- விறுவிறுப்பு ரிப்போர்ட்

புதுடில்லி, இந்தியா: கலைஞர் குடும்பம் மீதான அடுத்த கட்ட அட்டாக் தொடங்குகிறது. இம்முறை இலக்கு, கலைஞர் டி.வி.! கலைஞர் டி.வி.யின் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.
கலைஞர் டி.வி.க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தமிழகத்தில் உள்ளன. சென்னை கலைஞர் டி.வி. ஸ்டூடியோ, மற்றும் அலுவலகங்களும் இதில் அடக்கம். இவை அனைத்தையும் முடக்குவதே தற்போதைய திட்டம்.
காட்சிக்குள் கலைஞர் டி.வி. எப்படி வருகின்றது? எல்லாம் பண விவகாரம்தான்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கலைஞர் குடும்பத்துக்குள் வந்து சேர்ந்தது கலைஞர் டி.வி. ஊடாகவே என்பதே சி.பி.ஐ.யின் ஸ்டான்ட். அவர்கள் தாக்கல் செய்யவுள்ள 3வது குற்றப் பத்திரிகையில் இது விலாவாரியாகச் சொல்லப்படும் என்று தெரியவருகின்றது.
“ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம், கனிமொழிவரை எப்படி வந்தது?” இந்தக் கேள்விக்கு சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் குறிப்பிடும் பதில் -  ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனி ஊடாக, ரூ.214 கோடி சென்னைக்கு வந்தது. இந்தப் பணம் கலைஞர் டி.வி. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்பதுதான்.
இந்த விவகாரத்தில் முதலில் ராசா அகப்பட்டார். சி.பி.ஐ. அவரைக் குடையத் தொடங்கிய உடனேயே, இவர்கள் பதற்றமடைந்தார்கள். முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்தார்கள்.
எவ்வளவு பணம் வந்து சேர்ந்ததோ, அவ்வளவு பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்தார்கள். “அது கடனாக வாங்கிய பணம். வட்டியுடன் திருப்பிக் கொடுத்தோம்” என்ற இவர்களது ஸ்டேட்மென்ட் ஆஸ்-இட்-ஈஸ் ஆக எடுத்துக் கொள்ளப்பட்டால், அந்த விவகாரம் ஓவர் என்பது இவர்களது கணிப்பு.
தியரிட்டிகலாகப் பார்த்தால், சரியான விளக்கம்தான். அப்படியானால், இதிலுள்ள முட்டாள்தனம்  என்ன?
“பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது சரி. அந்தப் பணம் எப்படி வந்தது?” இந்தக் கேள்வி எழுந்தால் பதில் கூறுவதில் பல சங்கடங்கள் ஏற்படும் என்பதை யோசிக்காமல் விட்டதுதான் முட்டாள்தான்.
கிட்டத்தட்ட 200 கோடி ரூபா  பணத்தை  யாரும் ஒரு பேங்க் கணக்கில் வைத்திருக்கப் போவதில்லை. கலைஞர் டி.வி.யும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவும் கடன் வாங்கிய பணம் என்று வேறு சொல்கிறார்கள். கடன் வாங்கி, பேங்கில் சும்மா போட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
திடீரென ஒருநாள் 200 கோடி ரூபா பணம் வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது என்று முடிவு செய்கிறார்கள். பேங்கில் இவர்களது கணக்கில் 200 கோடி கிடையாது. ஆனால், கடன் அடைக்கப்படுகிறது. இந்த முட்டாள்தனமான காரியத்தால், “திருப்பிக் கொடுக்கப்பட்ட பணம் எப்படி வந்தது?”என்று துருவத் தொடங்கியது சி.பி.ஐ.
ஸ்வான் கம்பெனியில் இருந்து 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதை திருப்பி கொடுப்பதில் 19 கொல்கத்தா நிறுவனங்கள் நிதியுதவி செய்திருப்பதாக கலைஞர் டி.வி. தனது டாக்குமென்ட்களில் காட்டியிருந்தது.
இதோ, அடுத்த கேள்வி வருகின்றது. “இந்த 19 நிறுவனங்களும் உங்களுக்கு (கலைஞர் டி.வி.க்கு) ஏன் பணம் தரவேண்டும்? நீங்கள் கடனை அடைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு என்ன ஆர்வம்?”
இதற்குமேல் பொய் சொல்ல முடியாத கலைஞர் டி.வி.,  திருதிருவென முழிக்கத் தொடங்கியது.
“ஆஹா. அப்படீங்களா வெவகாரம்?” என்று விசிலடித்த சி.பி.ஐ. தம்மிடம் துண்டு துண்டாக இருந்த தகவல்களை ஒன்றுதிரட்டி ஒட்ட வைத்துப் பார்த்தது.
• 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஆதாயம் அடைந்தவர்களில், ஸ்வான் கம்பெனியும் ஒன்று.
• கிடைத்த ஆதாயத்தில் இந்த கம்பெனி ரூ.214 கோடியை கலைஞர் டி.வி.க்கு கொடுத்துள்ளது.
• சினியுக் என்ற நிறுவனம் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது.(ஸ்வான் நிறுவனர் பல்வா,சினியுக் நிறுவனர் கரீம் மொரானி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்)
•  ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியவுடன் ஸ்வான் கம்பெனியிடம் பெற்ற ரூ. 214 கோடியை கடனாக காட்டி அதை திருப்பி அடைத்தது கலைஞர் டி.வி.
• இந்த ரூ.214 கோடியை வெவ்வேறு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி. பெற்று அதை திருப்பி செலுத்தியதாக கணக்கு காட்டியது.  கொல்கத்தாவில் பிரபலமில்லாத 19 கம்பெனிகளிடமிருந்து ரூ.52.20 கோடி கிடைத்ததாக கலைஞர் டி.வி.யின் கணக்கேடு சொல்கிறது.
• இந்த பணம் சபையர் மீடியா மற்றும் இன்பிரா ஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது.
•  இதே நிறுவனங்கள், கலைஞர் குடும்பத்தின் மற்றொரு கம்பனியான அஞ்சுகம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு ரூ.83 கோடி கடனாக கொடுத்துள்ளன. மேலும், ரூ. 69.61 கோடியை கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் கடனை அடைக்க வழங்கியுள்ளது.
இவ்வளவு தகவல்களையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்தால், உங்களுக்கு என்ன புரிகிறது? சரியாகப் புரிந்தால், கட்டுரையின் ஆரம்ப வாக்கியங்கள் துல்லியமாகப் புரியுமே!
-டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜியின் குறிப்புகளுடன், ரிஷி.
நன்றி : விறுவிறுப்பு.com

13 comments:

  1. ஆட்டம் அதிரடி ஆரம்பம் ஏ டண்டனக்கா........

    ReplyDelete
  2. இன்னும் நிறைய மடக்க வேண்டும்...

    ReplyDelete
  3. கடக்,கடக்குன்னு கேக்குதுங்கோ!

    ReplyDelete
  4. அவங்கள விட்டுறாதீங்க ...

    ReplyDelete
  5. தண்ணி குடிக்கிற சத்தம் கேக்குதண்ணே. ( உப்பு ஏற்கனவே தின்னாய்ங்க இல்ல.அதான்)

    ReplyDelete
  6. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

    ReplyDelete
  7. அய்யா கதி அவளவுதானோ

    ReplyDelete
  8. இதை இதை
    இதைத்தான் எதிர் பார்த்தோம் இல்லியா

    ReplyDelete
  9. மாப்பிள நான் பயந்திட்டன் எப்ப நீ நமீதாவோட சேர்ந்து எழுத தொடங்கினீங்கன்னு..!!!!

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...