> என் ராஜபாட்டை : இது என்ன தெரியுமா?

.....

.

Wednesday, August 10, 2011

இது என்ன தெரியுமா?




முன்பு ஒருமுறை ஏங்கோ படித்தது .. அர்த்தம் தெரிந்தால் பின்னுடம் இடுங்கள். தெரியாதவர்கள் நாளை வரை பொருக்கவும்..


முதியவர் 1 : ஏன் நொண்டிகொண்டு வருகிறாய் ?

முதியவர் 2 : முக்காலு ஊன்றி முவிரண்டு போகயிலே
                 அக்காலை ஐந்துதலை நாகம் தீண்டியது.
                                யான் என்ன செய்வேன் ?

முதியவர் 1 : அடமடையா..

              “ பத்துரதன் புத்திரனின்
                மித்துருவின் சத்துருவின்
                        பத்தினியின்
                                கால் வாங்கி தேய்

முதியவர் 2: ஆகா.. அருமையான யோசனை.. நன்றி.


க்ளூ :  பத்து தசம்
                 புத்திரன் மகன்
                 மித்துரு நண்பன்
         சத்ரு  - எதிரி
                 பத்தினி மனைவி


(எழுத்துபிழைகளை மன்னிக்கவும்   -- இப்படிக்கு கண்டதுக்கும் மன்னிப்புகேட்கும் சங்கம். தலைவர் : சி.பி   துனைதலைவர் : நான்( யாரும் போட்டிக்கு வராதவரை)





30 comments:

  1. சும்மாவே ஒண்ணும் புரியாது, இதுல இது வேறயா?

    நாளை வரை பொருக்குறேன் மன்னிச்சுடுங்க பொறுக்குறேன்..

    ReplyDelete
  2. கலாய்ப்பு - தமிழ்ல எனக்குப்பிடிச்ச ஒரே வார்த்தை

    மன்னிப்பு - எனக்குப்பிடிக்காத வார்த்தை .. ஹி ஹி ஆனாலும் அதைகேட்டுட்டே இருப்பேன்..

    ReplyDelete
  3. இன்னாத்துக்கு நொண்டுறே?

    காலில் முள்ளு குத்திருச்சுப்பா!

    அட ச்சே, பிடுங்கி விட்டு கடாசிட்டு, தரையிலே தேச்சுட்டு வருவியா.... அத்த விட்டுப்புட்டு....

    (எழுத்துபிழைகளை மன்னிக்கவும் )

    ReplyDelete
  4. நான் நாளைவரை வெயிட் பண்ணனுமா?

    ReplyDelete
  5. தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete
  6. ////( யாரும் போட்டிக்கு வராதவரை…)////

    ஹ...ஹ... என்னை மறந்து விட்டீரே...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

    ReplyDelete
  7. தாரை

    தாரை (பத்தினி) கால் (தா என்னும் எழுத்தில் வரக்கூடிய ா காலை வாங்கினால் தரை)

    விடை - தரையில் தேய்!

    நல்ல பகிர்வு.
    தமிழ்ச்சுவையை அசைபோடத் துணைநிற்கும் பகிர்வு!

    ReplyDelete
  8. ஒரு பயலுவலுக்கும் தமிழ்மணம் வேலை செய்யலை போல.....ஹி ஹி!!!

    ReplyDelete
  9. சின்ன பிள்ளைங்க'கிட்டே கேக்கவேண்டிய கேள்வி [[ங்கே]] இது ம்ஹும்....

    ReplyDelete
  10. ஓட்டு போட்டுட்டு கிளம்பு மனோ, ஆயிரம் வேலை தலைமேல இருக்கு புச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்......

    ReplyDelete
  11. ////////
    Chitra said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

    இன்னாத்துக்கு நொண்டுறே?

    காலில் முள்ளு குத்திருச்சுப்பா!
    //////////

    எந்த முள் சரியா சொல்லுங்க..

    நெரிஞ்சி முள்..

    இந்த முள் தைத்தால் மட்டுமே காலை உதறி தரையில் தேய்க்க வேண்டும்....

    ReplyDelete
  12. AM FROM
    விடுகதைக்கு விடை தெரியாதோர் சங்கம் ஹி ஹி

    ReplyDelete
  13. நாங்கல்லாம் பொறுமையா நாளை வரை காத்திருப்
    ப்பொம்ல.

    ReplyDelete
  14. நாளைக்கே தெரிஞ்சுக்கிறேன்.!!!!!

    ReplyDelete
  15. முக்காலை கையில் எடுத்து= ஊன்றுகோலை கையிலெடுத்து
    மூவிரண்டு போகையிலே= ஆற்றை கடக்கையிலே
    இக்காலில் ஐந்துதலை நாகம்= நெருஞ்சிமுள்
    அழுந்த கடித்தது....= குத்தி விட்டது
    பத்து ரதன் புத்திரனின்=தசரத்தன் மகன் ராமனின்
    மித்துருவின் சத்துருவின்=நண்பனான சுக்ரீவனின் எதிரியாகிய வாலியின்
    பத்தினியின் கால் வாங்கி=மனைவி பெயர் தாரை, அதில் காலை எடுத்துவிட்டால் தரையில்
    தேய்!...

    ReplyDelete
  16. நாளைக்காய் காத்திருப்போர் சங்கம் ....
    ஹி ஹி

    ReplyDelete
  17. நான் தான் இதுக்கு பதில் சொல்ல நெனசேன்... சித்ரா முந்திக்கிட்டாங்க :)
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  18. விடுகதை விளங்கலீங்க...

    ReplyDelete
  19. நாங்கெல்லாம் ரொம்பப் பொறுமைசாலிங்க! ஹி ஹி! :-)

    ReplyDelete
  20. எஸ்ஸாயிடுவோம்... தெரியலங்கோ

    ReplyDelete
  21. சுவாரசியமான பதிவு.. விடையும் பின்னூட்டத்தில் அறிந்தேன்..

    ReplyDelete
  22. நல்ல வேளை பதில் சொல்லிட்டாங்க.
    நான் எஸ்க்கேப்பூ

    ReplyDelete
  23. காலில் முள் குத்திவிட்டது எனக் கூறியதும்
    தரையில் தேய்த்துக்கொள் எனக்கூறும்
    தமிழின் புலமை....
    அப்பப்பா
    என்ன ஒரு விளையாட்டு தமிழில்....
    அருமை அருமை..

    ReplyDelete
  24. // “ பத்துரதன் புத்திரனின்
    மித்துருவின் சத்துருவின்
    பத்தினியின்
    கால் வாங்கி தேய்…”//
    தரையில் காலைத் தேய்க்கணுமா?

    ReplyDelete
  25. av................அவ்....................என்ன ஒரு கொலைவெறித் தனமான இலக்கியப் பாட்டு..

    ஹா....ஹா....

    ReplyDelete
  26. எங்க பாட்டிகிட்ட கேட்டு சொல்றேன்.

    ReplyDelete
  27. அடேங்கப்பா! எனக்கு சும்மாவே தமிழ் தடுமாறும். இது வேறையா? நம்ம சித்ரா அக்காவின் கமன்ட் பார்த்து தெளிவு வந்துடுச்சு.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...