> என் ராஜபாட்டை : இளைய தளபதி (விஜய்) அரசியலில், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா!

.....

.

Tuesday, September 6, 2011

இளைய தளபதி (விஜய்) அரசியலில், ஸ்டார்ட், ஆக்ஷன், கேமரா!


சென்னை, இம்முறை அரசியலில் குதித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்திருக்கும் சினிமா நட்சத்திரம் ஒருவரைப் பார்த்து, சிரித்துவிட்டுப் போவதா, அல்லது சீரியசாக எடுப்பதா என்ற குழப்பத்தில் உள்ளார்கள் மற்றைய அரசியல் கட்சிகள். அந்த நட்சத்திரம் விஜய்.

பொதுவாகவே முடிவு எடுக்கும் விஷயத்தில் மகா இழுவை நபர் என்று சினிமா உலகில் கூறப்படும் விஜய், இம்முறை அரசியலில் கால் வைத்துப் பார்ப்பது என்று எடுத்துள்ள முடிவும், அதே இழுவை ரகமானதுதான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். ஆனால், அரசியல் வட்டாரங்களில், இவர் இறங்குவதாக முடிவு எடுக்கிறாரோ,  இல்லையோ, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இவருக்காக முடிவு எடுத்துவிட்டார் என்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அனுபவம் உடையவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிரசாரம் செய்வதற்கே அ.தி.மு.க. தலைமையிடம் இரண்டு சீட் கேட்டார் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் சொல்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா அவரை பெரிதாக என்கரேஜ் பண்ணவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறோம் என்று வாக்குக் கொடுத்தார். மகனையும் மேடைக்கு கொண்டு வருகிறேன் என்று போயஸ் கார்டனில் அடித்துச் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், மகன் முடிவு எடுப்பதற்கு இழுவை மேல் இழுவையாக இழுத்துக் கொண்டிருக்க, எலக்ஷனும் முடிந்து போனது.

தலையில் அடித்துக்கொண்டு, அப்பா மாத்திரம் பிரசாரம் செய்து முடித்தார்.
இப்போது அடுத்த ரவுன்ட். உள்ளாட்சித் தேர்தலில் விஜயின் ‘மக்கள் இயக்கத்தை’ களத்தில் இறக்க தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆர்வமாக இருக்கிறார். விஜய்யும் சம்மதித்து விட்டார் என்று அவரே நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகத் தெரிகிறது. ஆனால், ‘மக்கள் இயக்கம்’ தனித்துப் போட்டியிடுவதாக திட்டம் இல்லையாம்.
எஸ்.ஏ.சந்திரசேகர், அ.தி.மு.க.விடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அ.தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, இவர்கள் கண் வைத்திருப்பது சென்னையில் அல்ல, தென் மாவட்டங்களில் என்று தெரியவருகின்றது. அதே காரணத்துக்காகவே விஜய்யின் அடுத்த படமான ‘வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்தினார்களாம். அது ஒரு பல்ஸ் பார்க்கும் முயற்சி என்று சொல்கிறார்கள்.

அடுத்த கட்டமாக, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு தமிழகத்திலும் கணிசமான ஆதரவு பெருகுவது தெரியவே, விஜய், நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்து விட்டு வந்திருக்கிறார். இவரது விஜயத்தால் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புத்துணர்வு பெற்றதாகவோ, டில்லியே கலங்கியதாகவோ தகவல் ஏதுமில்லை. போனார், போட்டோ எடுத்தார், திரும்பிவிட்டார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம், அரசியல் வட்டாரங்களில் கலந்து கட்டிய அபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, இவரது கட்சி தனித்தன்மையுடன் தனித்துப் போட்டியிட முன்வரவில்லை. இரண்டாவது, இவரது அரசியல் என்ட்ரி, சட்டமன்றத் தேர்தல் போன்ற ‘பெரிய’ தேர்தலை விட்டுவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கத் திட்டமிடப்படுவது!

இது அரசியலில் பெரிய பூஸ்ட் ஒன்றை அவருக்கு கொடுக்காது என்பதே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

26 comments:

 1. மாப்ள வரும் ஆனா வராது!

  ReplyDelete
 2. முயலட்டும், ஒரு 10 கவுன்சிலர் கெடைச்சா கூட நல்லது தானே!!??

  ReplyDelete
 3. தமிழ் 10 தவிர மற்ற எல்லாம் இணைத்து விட்டேன்

  ReplyDelete
 4. வரும் ஆனா வராது! மிகச் சரி.

  ReplyDelete
 5. இந்த விசய் அண்ணன் காமடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு என்னாமா காமடி பன்னுறார் மனுசன்.


  இன்று என் கடையில்-
  (கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

  ReplyDelete
 6. ம்ம் பார்ப்பம் காய்க்கிற மரத்துக்கு தான் கால்லெறி விழும்

  ReplyDelete
 7. வர வர இந்த திரைப்படத்துறையினர் அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லாமல் போச்சு. இவங்க ரியல் லைஃப்பில் இப்படி அடிக்கிற காமெடிய பார்த்து வேலை டென்சன் மறந்து கொஞ்சநேரம் சிரிக்க முடிகிறது .

  ReplyDelete
 8. வரட்டும் வரட்டும்

  ReplyDelete
 9. சும்மா ஆட்டம் போடுறாங்க பா....

  ReplyDelete
 10. விஜய்- அரசியல்! ஹிஹிஹி சிரிப்பு பாஸ்.

  ReplyDelete
 11.  K.s.s.Rajh said...
  இந்த விசய் அண்ணன் காமடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு என்னாமா காமடி பன்னுறார் மனுசன்.


  இன்று என் கடையில்-
  (கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

  ஹா ஹா ஹா பாருங்கையா வியாபாரம் எப்பிடி செய்யுறதுன்னு சொல்லிக் கொடுத்தவரிடமே வியாபாரம் பண்னுறாருங்கையா சின்னபொடி..ஹி ஹி

  ReplyDelete
 12. அப்பனும் பிள்ளையும் நல்லாதான்யா கிச்சு கிச்சு மூட்டுறாங்க...ஹி ஹி

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 13. ஏதோ காமெடி பதிவெல்லாம் போட்ருக்கீங்க போல...

  ReplyDelete
 14. யோவ் என்ன இன்னிக்கு வேறே மேட்டரே கிடைக்கலியா...??

  ReplyDelete
 15. தமிழ்மணம் ஏழாவது குத்தியாச்சு....

  ReplyDelete
 16. // பிரசாரம் செய்வதற்கே அ.தி.மு.க. தலைமையிடம் இரண்டு சீட் கேட்டார் என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் சொல்கிறார்கள் //

  அடங்கப்பா சாமி!

  ReplyDelete
 17. // அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு தமிழகத்திலும் கணிசமான ஆதரவு பெருகுவது தெரியவே, விஜய், நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்து விட்டு வந்திருக்கிறார் //

  இதை அரசியல் உள்நோக்கத்தோடு இல்லாமல் செய்திருந்தால் நிச்சயம் பாராட்டியிருக்கலாம்.

  ReplyDelete
 18. பதிவில் கமெண்ட் போட முடியலை.. அரை மணி நேரமாகுது ராஜா பாருங்க..

  அப்புறம் அவர் தேர்தல் வரைக்கும் வருவாரா..

  ReplyDelete
 19. பாவம் அவரு.... அடிக்காதீங்கப்பா அவரு அப்பாட்ட சொல்லிற போறாரு...

  ReplyDelete
 20. இன்னுமா இந்த உலகத்தை நம்புராறு இவரு

  ReplyDelete
 21. இதுக்குமா மைனஸ் வாக்கு ..
  இப்பவே செல்லாத வாக்கு போட்டு விஜய கவிழ்க்க சதி நடக்குதோ .

  ReplyDelete
 22. தயவு செய்து இவரை சீக்கிரமா அரசியலில் குதிக்க சொல்லுங்க. சினிமாவாவது தப்பிக்கும்.

  ReplyDelete
 23. ஏதோ நல்லது நடந்தாச் சரி பாஸ்..

  அவ்..........

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...