> என் ராஜபாட்டை : திடுக்கிடும் திருப்பம்- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் !

.....

.

Thursday, September 8, 2011

திடுக்கிடும் திருப்பம்- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் !


ராஜீவ் படுகொலைக்குக் காரணமான ஒற்றைக்கண் சிவராசனிற்கு அடைக்கலம் கொடுத்த ஜே.ரங்கநாதன், சிவராசனைப் பற்றியும் ராஜிவ் காந்தி கொலை வழக்குப் பற்றிய திடுக்கிடும் உண்மைகளையும் வெளியிடுகிறார்.ஜெயின் கொமிசனின் முன்னே தனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் தான் உண்மை முழுவதையும் கூறத் தயார் என ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையில் வேறு நபர்களும் உள்ளனர் என்பதைத் நான் நிரூபிப்பேன்.
இதேவேளை சிவராசன் மற்றும் சுபாவுடன் பழகிய, அவர்கள் கதைத்ததைக் கேட்ட ஒரேயொரு நபர் தான்தான் என்றும் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.ராஜீவ் காந்தியின் படுகொலையில் 26 ஆம் நபராகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயராம் ரங்கநாத் (40) பெங்களுரைச் சேர்ந்த கன்னடத் தமிழர்.இவர் மனைவி மிருதுளாவுடன் ஒரு கடையொன்றை வைத்திருந்தார்.சிறிபெரும்புதூரில் ராஜீவ் கொலையுண்ட பின்னர் ஒற்றைக் கண் சிவராசனும் சுபாவும் இன்னும் ஐவரும் ரங்கநாதனின் வீட்டிற்குள் ஓகஸ்ற் 6, 1991இல் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.

ஓகஸ்ற் 20வரை மத்திய புலனாய்வுத் துறையினரால் சுற்றிவளைக்கப்படும் வரை இவர்கள் அங்கேயே இருந்தனர்.காவற்றுறையினர் உள்ளே நுழைந்த போது இவர்கள் சயனைட் கடித்துத் தற்கொலை செய்திருந்தனர்.சிவராசனையும் சுபாவையும் பாதுகாத்து வைத்திருந்ததற்காக ரங்கநாதன் ஓகஸ்ற் 18, 1991 இல் கைதுசெய்யப்பட்டான்.தனது வீட்டிலுள்ள குற்றவாளிகளைக் காவற்றுறைக்குத் தகவல் தெரிவித்து புலனாய்வுத் துறையினர் உடைத்து உள்நுழைந்த தாக்குதலுக்கும் ஒரேயொரு சாட்சியாக இருந்தது இந்த ரங்கநாதன் தான்.இவரும் இவரது மனைவியும் தான் சிவராசனும் சுபாவும் இக்குற்றத்தைப் பற்றிக் கதைத்ததை நேரடியாகக் கேட்டவர்கள்.

ரங்கநாதனின் அண்மைய உறுதிப்படுத்தப்பட்;ட தகவலின் அடிப்படையில் சிறைச்சாலை கமிசன் முக்கியமான காரணங்களையும் பல குற்றவாளிகளையும் மறைத்துவைத்திருந்ததற்காக மத்திய புலனாய்வுப் பிரிவினரைக் குற்றஞ்சாட்டுகின்றது.
சிவராசனும் அவரது குழுவும் மேற்குநோக்கி சந்திரசுவாமிகள் மூலம் பயணிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்ததும் காங்கிரசின் சில தலைவர்களது விபரங்களும் இதற்குள் பதியப்படவில்லை என்பதும் தெரியவருகின்றது.ரங்கநாதனைப் பொறுத்தவரையில் மத்திய புலனாய்வுத் துறையினர் ராஜீவ் கொலைவழக்கில் விடுதலைப்புலிகளின் பங்கைவிட மேலதிகமான வேறு விடயங்களுக்குள் விசாரணைகளை மேற்கொள்ள விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

‘ஒரேயொரு சாட்சியாகவும் எந்தவிதமானதொரு அரசியல் சார்பின்றியும் இருப்பதால் எனது வாக்கு மூலம் சரியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’ என்று அவன் தெரிவித்தான்.ரங்கநாதனின் இந்தத் திடுக்கிடும் தகவலால் நீதிமன்றமே அதிர்ந்தது.
சந்திரசுவாமிகளுடனும் ராஜீவ் காந்தியின் கட்சி உறுப்பினரான கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் தாம் தொடர்புகொண்டுள்ளதை சிவராசன் குழுவினர் தெரிவித்ததாக ரங்கநாதன் கூறியுள்ளான்.

இந்தக் காங்கிரஸ் தலைவரிடமிருந்து தான் ராஜீவின் கட்சிக் கூட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர்கள் பெற்றிருந்தனர் என்றும் சந்திரசுவாமிகள் தான் தங்களது கடவுள் என்றும் சிவராசன் கூறியதாகவும் தெரிவித்தான்.சந்திரசுவாமி தான் சிவராசன் குழுவினரை பெங்களுரிலிருந்து நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கும் ஒழுங்குகளைச் செய்வதாக இருந்தது என்றும் கூறினான்.இந்த உண்மையை மத்திய புலனாய்வுத் துறை ரங்கநாதனைக் கூறவிடாது பயமுறுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளோடு மட்டுமே இக்கொலையைத் தொடர்புபடுத்தும் வகையில் கதைக்கவைத்ததாகவும் அதற்குமேல் வேறு யாரினதும் பெயர்களையும் இதில் ஈடுபடுத்த அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறினான்.வேறெந்தக் காங்கிரஸ் கட்சிக்காரர் பற்றியோ சந்திரசுவாமி பற்றியோ கதைக்கக்கூடாது என மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி கார்த்திகேயனால் தனக்கு எச்சரிக்கப்பட்டதெனவும் ரங்கநாதன் தெரிவித்தான்.ரங்கநாதன் வெளியிடும் தகவலால் பாரிய பின்விளைவுகள் ஏற்படலாமென்று கூறப்பட்டுத் தடுக்கப்பட்டான்.

யூலை 30, 1991 காலையில் விக்கி என்பவர் கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டார். இவர் பெங்களுரில் சிவராசனின் மறைவிடம் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்திருந்தார்.இது ஓகஸ்ற் 6 இல் ரங்கநாதனின் வீட்டிற்குள் சிவராசன் நுழைய முன்னர் இடம்பெற்றிருந்தது.ஆனால் 24 மணித்தியாலங்களாகியும் காவற்றுறையினர் சிவராசனைப் பிடிக்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.காயமடைந்த விடுதலைப் புலிகளுக்காக 4 வீடுகளைக் ஒழுங்கு செய்த ஜகன்நாதன் என்பவரை மத்திய புலனாய்வு மையம் விசாரித்தது.ஆனால் சிவராசனை உயிரோடு பிடித்தால் அவனிடமிருந்து காங்கிரஸ்காரருடனான தொடர்புகள் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் அவர்கள் அப்போது சிவராசனைப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"ஒண்ணுமே புரியல போங்க "
நன்றி : வணக்கம்நெட்.காம்
 

14 comments:

  1. புரிஞ்சி மட்டும் என்ன செஞ்சிடஒ போறோம் விடுங்க, ராஜா.

    ReplyDelete
  2. மறுபடியும் முதல்ல இருந்து வருமா !

    ReplyDelete
  3. பேரரசியல்!
    விடுங்க.... இறுதியா, புலிகள்தான் குற்றவாளிகள்னு முடிவே பண்ணியாச்சு....

    அதற்காகவே ஒரு இனப் படுகொலையும் நடத்தியாச்சு.....

    சீர்கேட்ட தேசமிது....

    ReplyDelete
  4. ENNA SOLLI ENNA AVAPOGUTHU???
    ELLAME MUDICHIPOCHI

    ReplyDelete
  5. தாமதமானாலும் உண்மைகள் வெளியே வரவேண்டியது அவசியம்.ரங்கநாத் பேட்டியொன்று சில வருடங்களுக்கு முன்பே பத்திரிகையொன்றில் வெளியானதாக நினைவு.ஆனால் இதுபற்றி யாரும் கண்டுகொள்ளாத கால கட்டமென்பதாலோ அல்லது பத்திரிகையின் திரிபு என்றோ பின் தள்ளப்பட்டுவிட்டது.

    ReplyDelete
  6. Vidunga boss yaar eppadi pona enakkenna naalakki figure kooda outing poganumVidunga boss yaar eppadi pona enakkenna naalakki figure kooda outing poganum

    ReplyDelete
  7. அரசியல் நாடகங்கள் .....

    ReplyDelete
  8. அரிசியில முதல்ல கல்லு ,அப்புறம் நெல்லு .
    இது என்ன புதுசா முள்ளு சகோ?...ஒண்ணுமே
    புரியல....!!!!.புதிய தகவலுக்கு நன்றி சகோ...
    நம்ம கடப்பக்கம் வந்திற்றுப் போங்க சார் .

    ReplyDelete
  9. சிவராசனை உயிரோடு பிடித்தால் அவனி....)ம்ம்ம்..நடக்கட்டும்

    ReplyDelete
  10. நியாயமான ஆதங்கம் பாஸ், புரிந்தும் புரியாமல் செய்வதறியாது இருக்கிறோம் இதுதான் உண்மை....!(

    ReplyDelete
  11. புதிய தகவல்களுக்கும் உண்மைத்தகவல்களுக்கும் நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...