நியூயோர்க், அமெரிக்கா: 2011 Springல் பிரபலமாக அடிபட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கான டிரெஸ்கள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த ஸ்டைல் டிரெஸ்கள்தான் நியூயோர்க் பாஷன் ஷோக்களில் இப்போது சக்கைபோடு போடத் தொடங்கிவிட்டன.
சரி. 2011 Spring பாஷன் என்ன?
வெள்ளை ஆடைகள். அதுவும் லேஸ் கிளாத்தினால் உருவாக்கப்பட்ட டிரெஸ்கள்தான் இந்தவருட spring பாஷனாக இருக்கின்றன.
இந்த ஸ்டைல் டிரெஸ்கள் வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இப்போது சக்கை போடு போடுகின்றன. ஆசியாவைப் பொறுத்தவரை இவை முக்கிய பாஷன் நகரங்களில்தான் முதலில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஹாங்காங், தாய்பேய், சிங்கப்பூர், பாங்காக், மும்பாய் ஆகிய நகரங்களில் இவை ஷோகேஸ்களில் இருக்கின்றன!
பொதுவாகவே ஒவ்வாரு சீசனுக்கும் பாஷன் டிரெஸ்கள் டிசைன் பண்ணப்படும்போது, அவை எல்லா விதமான உடல்வாகுடைய பெண்களுக்கும் பொருந்த வேண்டும் என்றுதான் டிசைன் பண்ணுவார்கள். அப்போதுதான் அந்த டிரெஸ்கள் அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும். பிரபலமடையும்.
2011 Spring Fashion Showக்களில் இந்த டிரெஸ்களை அணிந்துள்ள மாடல்களின் போட்டோக்களில் பார்க்கும்போதே இவற்றின் ஸ்டைலிங் உங்களுக்குப் புரிந்துபோகும். இந்த வருடம் உள்ள ட்ரென்ட் என்ன என்பதும் புரிந்துவிடும்.

________________________
நியூயோர்க்கில் நடைபெற்ற Dolce & Gabbanaவின் 2011 spring fashion showவில் பெரும்பாலானவர்களைக் கவர்ந்த டிரெஸ் இடப்புறமுள்ள படத்தில் இருக்கிறது. முற்று முழுதாக லேஸ் கிளாத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள நீளமான டிரஸ் இது.
பகலிலும், இரவிலும் அணியக்கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த டிரெஸ்ஸில் உள்ள ஒரேயொரு சிக்கல், இது குறிப்பிட்ட உடல்வாகுடைய பெண்களுக்கு மாத்திரமே அழகாக ஃபிட் பண்ணக்கூடியது.
உங்கள் உடல்வாகு அதிக பருமனாக இல்லாவிட்டால், அல்லது பருமனுக்கேற்ற உயரம் உங்களுக்கு இருந்தால், அட்டகாசமாக பொருந்தக்கூடிய டிரெஸ் இது.
________________________

________________________
பிரபல பாஷன் டிசைனிங், மற்றும் ஆடைத் தயாரிப்பு நிறுவனமான Calvin Klein டிசைன் பண்ணிய டிரெஸ் இது.
மேலிருந்து கீழேவரை பிளாட் ஸ்டைலில் டிசைன் பண்ணப்பட்ட நீளமான டிரெஸ். எல்லா வயதினராலும் அணியப்படக்கூடிய டிரெஸ்.
இது இரவுநேர பார்ட்டிகளுக்கான டிரெஸ் அல்ல. பகலில் அணிவதுதான் பொருத்தமாக இருக்கும்.
________________________

________________________
இந்தடிரெஸ்கூட Calvin Klenன் தயாரிப்புதான். சாதாரணமாகவேலைக்குச் செல்லும்போது அணியலாம். அல்லது ஆபீஸ் நேரத்தில் நடைபெறும் விழாக்களில் அணியலாம்.
சுருக்கமாகச் சொன்னால் பிசினஸ் ஸ்டைல் பாஷன் டிரெஸ் இது.
________________________

________________________
இந்த டிரெஸ்கூட ஒரு Chanelன் தயாரிப்புத்தான். பகல் நேரங்களில் மாத்திரம் அணியும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றது.
அதேநேரத்தில் ஆபீஸ் நிகழ்வுகளுக்கான டிரெஸ் அல்ல இது. பகல்நேரத்தில் மண்டபங்கள் அல்லது ஹோட்டல் போர்ட் ரூம்களில் நடைபெறும் மீட்டிங்களுக்கு அணிய உகந்தது.
பிஸினஸ் விஷயமாகச் சந்திக்க வேண்டியுள்ள முக்கிய புள்ளிகளைக் காணச் செல்லும்போது அணிவதற்கு அருமையான தேர்வு.

________________________
பிரபல டிசைனர் Valentinoவின் 2011க்கான டிசைன் இது. மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று Elle பாஷன் சஞ்சிகை சிலாகித்திருக்கின்றது.
இரவிலும் அணியலாம், பகலிலும் அணியலாம் என்ற ரகத்திலான பார்ட்டி டிரெஸ் இது.
நீங்கள் உடல்வாகு பருமனாக இருப்பவராக இருந்தால், பெரிய வரப்பிரசாதம் இந்த டிரெஸ். காரணம், உங்களின் இடையின் அளவு பெரிதாக இருந்தால், அதை குறைத்தே காட்டும் வகையிலான டிசைன் இது.
________________________

________________________
சாதாரணமாக எப்பவும் எங்கும் அணியக் கூடியது. ஏற்கனவே அமெரிக்கக் கடைகளில் விற்பனை ஓகோ என்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.
கல்லூரி மாணவிகளால் மிகவும் விரும்பப் படுகிறது. பல தரப்பட்ட விலைகளிலும், அதன் தரத்திற்கேற்ப கிடைக்கின்றது.
________________________

________________________
இதுவும் மற்றொரு Casual wear. சாதாரணமாக எந்த இடத்துக்கும் அணிந்து செல்லக்கூடியது. வயது குறைந்தவர்களுக்கான டிரெஸ். காலேஜ் அல்லது யூனிவர்சிட்டிகளில் மிகப் பிரபலமாக இருக்கின்றது.
நீங்கள் அழகிய கால்கள் உடையவரா? உங்களிற்கு இது சரியான தெரிவு.
________________________

2011 springற்கு வெள்ளை நிற லேஸ் கிளாத்தினால் தயாரிக்கப்பட்ட டிரெஸ்களே கூடுதலாக பாஷனாக உள்ளன. இளவரசி Kateன் திருமண ஆடையும் இதற்கு விதிவிலக்கல்ல.
________________________
டிஸ்கி : இது நம்ம நாட்டு பெண்களுக்கு அல்ல .. ( சி.பி வருத்தத்துடன் பார்ப்பது தெரியுது )
நன்றி : விறுவிறுப்பு .காம்
Tweet |
Hi friends try to connect tamilmanam and others pls . . . Thanks
ReplyDeleteபயபுள்ள எஃப் டிவி ஸ்டில் போட என்ன மாதிரி பம்புதுன்னு
ReplyDeleteபூனை நடை அழகிகள்
ReplyDeleteஅணிவகுப்பு நன்று.
tamil manam 2
ReplyDeletenice post thanks for sharing
ReplyDeleteF.T.V THANEE???
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteபார்த்து பார்த்து ரசித்திருந்தேன்... டிரைஸ்ஸைதாங்க...
ReplyDeleteஏலே நமக்கொண்டும் இல்லியோ??
ReplyDeleteஅழகிகள் எல்லாம் அபரிதம் ... சூப்பர்.
ReplyDeleteஉங்கள் பதிவு விளங்களை காரணம் அந்த படத்தில் போட்டு இருக்கும் பிகருகள் தான் கண்ணுக்குள்ளே நிக்குதுகள்.அதுவும் அந்த கடைசிப்படத்தில் இருக்கு இங்கிலாந்தின் புதிய இளவரசியின் கேட் படம் சூப்பர்.ஹி.ஹி.ஹி.ஹி
ReplyDeleteஅடடா..கண்ணைக் குத்தும் பாஷன் சோ படங்களையல்லவா போட்டிருக்கிறீங்க.
ReplyDeleteதமிழ் மணம் 10...
ReplyDeleteஹா ஹா...என்னய்யா ஃபேசன் டீவிய பதிவுல ஓட்ற ம்ம்ம்ம் ஹா ஹா
ReplyDelete