இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள மனைவி வீட்டிற்க்கு சென்றேன். அவர்கள் வீட்டு அருகே உள்ள திருவானைகாவல் கோவிலுக்கு செல்வோம் என மனைவி ஆசைப்பட்டதால்( மிரட்டியதாக யாரும் நினைக்க வேண்டாம்) சென்றேன். அங்கு நடந்த சில விஷயங்கள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கட்டண தரிசனம் :
சாமியை அருகில் காண 10 ரூபாய் கட்டனம், இன்னும் அருகே சென்று பார்க்க 50 ரூபாய். விஷேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுபடுத்த வேண்டுமானல் கட்டனம் விதிக்கலாம். கூட்டமே வராத, சாதாரன நாட்களில்கூட ஏன் எந்த நடைமுறை?
அப்படியே கட்டணம் விதித்தே தீரவேண்டுமெனில் ஒரு முறை எடுக்கும் டிக்கெட் அந்த கோவிலில் உள்ள அனைத்து சாமியையும் தரிசிக்க போதுமானது என வைக்கலாமே. ஒவ்வொறு சாமிக்கும் ஒவ்வொறு டிக்கெட் எடுக்கவேண்டும் என்பது எந்தவிததில் சரி ?
சில்லரைக்கு பதில் விபூதியா?
கடைகளில் ஒரு ரூபாய் சில்லரை இல்லையெனில் அதற்க்கு பதில் சாக்லெட் தருவார்கள். அதுபோல 10 ரூபாய் குடுத்து அர்ச்சனை டிக்கெட் வாங்கினால், 3 ரூபாய்க்கு குங்கும பொட்டலம் தருகிறார்கள். அர்ச்சனை முடிந்து பூசாரியே குங்குமம் தரும் போது இது வேறு எதுக்கு?
திருமணஞ்சேரி கொடுமை :
இதைவிட பெரிய கொடுமை திருமணஞ்சேரியில் சாமி கும்பிடுவது.
பார்க்கிங் வசதியே இருக்காது ஆனால் பார்கிங் கட்டணம் என கொள்ளை.
அர்ச்சனை டிக்கெட் 20
விளக்கு ஏற்ற 20
பூஜை முடிந்ததும் மோளம் அடித்தவர்களுக்கு 20(கோவிலில் சம்பளம் தனி)
ஊள்ளே விளக்குக்கு தனி amount
ஒருமுறை சாமிதரிசனம் செய்ய குறைந்தது 100 வேண்டும்.
ஏங்க !! கடவுள் எல்லாருக்கும் சமம்னா காசு குடுத்தாமட்டும் நல்ல பாக்கலாம் என்பது என்ன நீயாயம் ? என சமதர்மம் ?
Tweet |
//ஏங்க !! கடவுள் எல்லாருக்கும் சமம்னா காசு குடுத்தாமட்டும் நல்ல பாக்கலாம் என்பது என்ன நீயாயம் ? என சமதர்மம் ?//
ReplyDeleteசாட்டையடி கேள்விகள் நண்பரே..
இந்த கொடுமை அனேகமாக பிரபல கோவில்கள் அனைத்திலும் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அதுவும் பார்புகழும் பழனியில் படுமோசம்
நன்றி நண்பரே அருமையான பகிர்விற்க்கு..
நட்புடன்
சம்பத்குமார்
@சம்பத்குமார் thanks and welcome friend . . .
ReplyDeleteஎன் வருகையை பதிவு செய்கிறேன்.
ReplyDeleteகேள்விகனைகள்.......
ReplyDeleteபதில்கிடைத்தால் நன்று....
உண்மையான வாதம்...
ReplyDeleteகோவிலின் நிலைபாட்டிற்கு தகுந்தது போல பணம் வசூலிக்கிறாங்க.அர்ச்சனை செய்தால் கூட 5 ரூபாய் வச்சாலே நம்மள பிச்சகாரன் மாதிரி பாக்கும் காலம் இது.சமீபத்தில் சிதம்பரம் கோவிலில் பத்து ரூபாய் தட்டில் வைத்ததற்கு 30 ரூபாய் வைக்கனும்னு கேட்டு வாங்கிட்டார் பூசாரி.இதெல்லாம் பாக்கும்போதுதான் கடவுள் நம்பிக்கையே போய்டுது.சாமி சிலையே கடத்திட்டு போனாலும் சாமி ஒன்னும் செய்யமாட்டிது.
ReplyDeleteகொடும கொடுமைன்னு கோயிலுக்கு போனா.......
ReplyDeleteஅதற்க்கு காரணம் பக்தனின் அவசரம் என்று நினைக்கிறேன்,வரிசையில் நிற்க்காமல் உடனே சாமி பார்த்துட்டு வீடு திரும்பனும் என்ற அவதி ,அது போன்ற ஆட்கள் பழக்கி விட்டது இப்பொழுது இப்பிடி வந்து நிக்குது .
ReplyDeleteஇதுதாங்க உலகம்....
ReplyDeleteநீங்க குடுத்த காசு சாமிக்கு இல்ல ஆசாமிக்கு..
ReplyDeleteபுரிஞ்சுக்கிட்டா குழப்பம் வராது..
கேள்வி சரிதான், பதில் யார் தரப்போறாங்க?
ReplyDeleteCorrect than nanbare.....
ReplyDelete//பூஜை முடிந்ததும் மோளம் அடித்தவர்களுக்கு 20(கோவிலில் சம்பளம் தனி)//
ReplyDeleteஇது ரொம்ப ஓவர்
என்னத்தை சொல்ல உலகம் ஒரு உருண்டை.....
ReplyDeleteகடவுள் என்பதே பணம் செய்யும் இயந்திரம் தான் என்று புரிந்து கொள்ளாத வரை இது போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும்..
ReplyDeleteஇந்து மதக்கோவில்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அரசாங்கம் முடிவு கட்டி ஆக வேண்டும். இதனால்தான் விசேஷ நாட்களில் கூட கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை.
ReplyDeleteசாட்டையடிக் கேள்விகள்
ReplyDeleteநல்ல ஒரு பதிவு...எனக்குள்ளும் இப்படியான கேள்விகள் எழுவது உண்டு..மிகவும் அருமை பாஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதுதானே நண்பா..
ReplyDeleteநம்ம அசுர பலம்!!!
நம்மால் முடியாத ஒரே செயல் சிந்தித்தல்!!!!!!!!
பாவம் கடவுள் .இவர் பெயரால் நிகழும் ஊளலையே
ReplyDeleteகுறைக்க முடியவில்லை .பிறகு மனுசன் செய்யிற
இந்தத் தப்பத் திருத்துறது யாரு ?...........விடுங்க சகோ தூர நிண்டு நல் மனதோடு தரிசித்தாலும் இறையருள் கிட்டும் பாக்கியம் இருந்தால்க் கிட்டும். இதைத் தடுக்க முடியாதே .....அதுக்காக ஆதங்கப் படாதீர்கள் ஆப்பிள் சாப்பிட்டுத் தூங்குங்க பழக்கப் பட்டிரும். ஹி....ஹி ...ஹி ...
சாட்டையடி கேள்வி..
ReplyDeleteஉண்மைதான்...
எல்லா ஓட்டும் போட்டாச்சு வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு ......
நெற்றியில அடிச்சது மாதிரி இருக்குங்க ..
ReplyDeleteஉணரனும் ..
நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும்னா நினைக்கிறீங்கப்பா? ஹூஹூம்....
ReplyDeleteஜனங்க முதல்ல அந்த டிக்கெட் வாங்காம ஒதுக்கணும்.. முடியுமா?? ஜனங்க வைராக்கியமா இருந்தாங்கன்னா..
இவங்களால ஒன்னும் பண்ணமுடியாதுல்ல?
கொடும கொடுமைன்னு கோயிலுக்கு போனா.......
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteமுதலில் ஊதுர சங்கை ஊதிவைப்போம்
நிச்சயம் மாறுதல் வரும் த.ம 11
தல உங்களுக்கு மராஜ் ஆயுருச்ச
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteசம்பந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு பணம் தான் முக்கியம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.