> என் ராஜபாட்டை : திரிஷாவின் உதடு வேண்டுமா?

.....

.

Monday, September 19, 2011

திரிஷாவின் உதடு வேண்டுமா?


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும் வறண்டும் காணப்படுகின்றன.

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:

1. தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள்   
    மென்மையாக மாறும்.
2. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும்  
   குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக 
   மாறும்.
3. உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும் நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும் வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
4. லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
5. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம். லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
6. முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி உதடுகள் வழவழப்பாகும்.
7. முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து  அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும்.
8. இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும் பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்  மென்மையாகவும் மாறும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

1 முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
2. லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.
3. லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.
4. லிப்ஸ்டிக் போடும் போது லிப்ஸ்டிக்குகளின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும்.அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப்லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.சிவப்ப நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும் பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் லிப்லைனரும் உபயோகிக்கலாம்.
தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காக பயன்படுத்தலாம்.
5. மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தினால் மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

டிஸ்கி :  திரிஷா உதடு போல வேண்டுமா ? என தலைப்பு இருக்க வேண்டும் . சும்மா ஒரு கிக்குக்கு தான் இப்படி வச்சேன் .

நன்றி :www.vanakkamnet.com

23 comments:

 1. மாப்ள கண்டிக்க படவேண்டிய தலைப்பு! ...நீங்க போட்ட தகவல்களை நாஸ்தி பண்ணிய தலைப்பு!

  ReplyDelete
 2. அசத்தலான பதிவு

  ReplyDelete
 3. :)


  #ஹீம்.... நானும் திரிஷாவோட...... ஹீம்....

  ReplyDelete
 4. தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டுடோமில்ல...

  ReplyDelete
 5. த்ரிஷா உதடு அழகாவ இருக்கு?

  ReplyDelete
 6. நல்ல விஷயம் அழகிய டிப்ஸ் நன்றி பகிர்வுக்கு

  t.m 4

  ReplyDelete
 7. இது த்ரிஷா உதடு மாதிரி இல்லைய

  எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு

  ReplyDelete
 8. இது தேவையா????
  நான் என்னை சொன்னேன் !!!

  ReplyDelete
 9. திரிஷாவை நினச்சா கிக்கு ஏறுதா இன்னும்!!?? அப்பிடினா நீங்க ஒரு பூட்ட கேஸ் !! ஹா ஹா ஹா

  நியூஸ் எல்லாம் சூப்பர், நல்ல உதடு வேணும்ன்னு நினைக்குறவங்க பின் பற்ற வேண்டியது..

  ReplyDelete
 10. என்னங்க இவ்வோலோவு பண்ணனுமா ? நாக்க வச்சி அப்ப அப்ப ஈரம் பண்ணாலே போதாதுங்களா ?

  காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு

  ReplyDelete
 11. suryajeeva said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  த்ரிஷா உதடு அழகாவ இருக்கு?


  சபாஷ்!! அண்ணன் கேட்ட கேள்வி!!

  ReplyDelete
 12. த்ரிஷா எல்லாம் கிழவி ஆயாச்சு வேற யாரும் கிடைக்கலியாக்கும்...?

  ReplyDelete
 13. தலைப்பே வில்லங்கமாய் இருக்கு ))

  ReplyDelete
 14. உதட்டு சாயம் புற்று நோயை உண்டாக்கும் என ஒரு ஆய்வு குறிப்பு கூறுகிறது பீட்ரூட் சயம் பூசலாம் கொத்தமல்லி தழையை நன்கு விழுதாக்கி இரவில் பூசி குளிர்ந்த நீரில் பூசி பாருங்கள் ... அனால் ஒரு எச்சரிக்கை பார்ப்பவர்கள் கடித்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு....

  ReplyDelete
 15. டிப்ஸ்சுக்கு நன்றி.

  ReplyDelete
 16. தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு
  பவளம் பதித்த இதழ்!

  ReplyDelete
 17. பதறி அடிச்சு ஓடி வந்தான்
  சீ

  ReplyDelete
 18. உதடு மேட்டர் சூப்பர், நீங்க மயிலாடுதுறை தானா, இன்று தான் தங்களது பிளாக்கில் பார்த்தேன், நன்றி

  ReplyDelete
 19. அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

  ReplyDelete
 20. do you have copyrights for this article? www.vanakkamnet.com?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...