> என் ராஜபாட்டை : கேன்சர் மருத்துவமனைக்கு ரூ 6 லட்சம்: ஹாரிஸ் ஜெயராஜ்

.....

.

Saturday, March 5, 2011

கேன்சர் மருத்துவமனைக்கு ரூ 6 லட்சம்: ஹாரிஸ் ஜெயராஜ்

அடையாறிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு ரவுன்ட் டேபிள் இந்தியா அமைப்பு சார்பில் ரூ 6 லட்சம் நன்கொடை வழங்கினார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

18 வயது முதல் 40 வயதுள்ள இளைஞர்களுக்கான அமைப்பு ரவுண்ட் டேபிள் இந்தியா. இந்த அமைப்பின் சென்னை காஸ்மாபாலிட்டன் ரவுண்ட் டேபிள் 94 கிளை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் சூப்பர் கார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது.

இந்த நிதியிலிருந்து ரூ 6 லட்சத்தை மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது (மறைந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக உருவாக்கப்பட்டது).

அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு தேவையான நவீன சிகிச்சை உபகரணங்களை வாங்கிக் கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதிக்கான காசோலையை பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...