> என் ராஜபாட்டை : வாக்கு

.....

.

Tuesday, March 29, 2011

வாக்கு

அன்பிற்கினிய தமிழ் மக்களே! தேர்தல் நெருங்க நெருங்க சுயலாப அரசியல்வாதிகளின் அனல் தெறிக்கும் பேச்சுகளும், ஆடையில்லா வாக்குறுதிகளும் செவிப்பறை புகுந்து பொதுமக்களின் மனத்தை திசைத்திருப்பும் உரைகளும் கூடிக் கொண்டிருக்கும் வேளையில் எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்!
நாம் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்! காரணம் புரிந்து கொண்டவர்கள் வாக்களிக்கும் வேட்பாளர்கள் வாங்கியிருக்கும் வாக்கை பார்த்தால் அது மிகவும் குறைவாகத்தானிருக்கும்!
இப்படியேப் போனால் நாம் வாழும் பாரதம் நம்முடையதா என்ற கேள்விக்கு வித்திட்டுவிடும், எத்தனை சீர்த்திருத்தங்கள் செய்து உண்மையை விளக்கினாலும் விளங்கக் கூடிய நிலைமையிலிருந்து மக்கள் விலகியே நிற்கின்றார்கள்!
பொதுமக்களாகிய நமக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு நாம் இடும் வாக்கு தான், இதன் பிறகு நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் ச.உ.ஆனதும் நம்மை திரும்பிப்பார்ப்பது என்பது ஒரு கேள்விக்குறிதான்!
அதேபோல் நமது காலைப்பிடித்து கெஞ்சும் கட்சி தலைமகளும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின் நம்மை ஒரு ஐந்து வருடக்காலத்திற்கு அடிமையாகத் தான் பார்க்கும், பின்பு நமக்கு வேண்டியதைப் பெற ஒன்று மனுக்கொடுக்கவோ இலஞ்சம் கொடுக்கவோ வேண்டும்.
வாக்கு கேட்டு வரும்போது நம்மை யாரென்றும் தெரியாதவர் ஏதோ பலவருடங்கள் பழக்கப்பட்டவர் போல் நம்மை அனுகும் கட்சிக்காரர்கள், எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் நம்மை பார்க்கும்போதோ ஒரு புழுவைப் பார்ப்பது மாதிரி பார்ப்பார்கள்!
இந்த பழக்கம் காலம் காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு முறை,இதை பொது மக்களாகிய நாம் உணர வேண்டும்.
கட்சி உறுப்பினர் என்ற பெயரில் அக்கட்சிகளின் விசுவாசிகள் தான் உழைத்தால் தான் தன் குடும்பம் வாழும் என்பதை மறந்து யாரோ ஒருவர் மீது எதற்காக என்று அறியாமல், அவர் நம்பும் தலைமை செய்யும் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்காமல் அவர்களுக்காக அல்லும்பகலும் அயராது உழைத்து தன் குடும்பம் நோக்காமல் கட்சிக்காரர் கொடுக்கும் சில தேவைகளை நம்பி தனது மக்களுக்கு தீங்கு செய்கின்றோமே என்று எண்ணாமல், சில நேரங்களில் இரத்தக் களரியும் ஏற்படுத்தி ஒரு தவறான ஆளை பதவியில் அமர்த்த துடிக்கும் தொண்டர்களாலும் வாக்கு சிதைக்கப்பட்டு இந்த நாடு அவமதிப்புக்கு உள்ளாகின்றது!
ஒவ்வொரு வேட்பாளரின் தகுதியை பொதுமக்களாகிய நாம் தான் சரியா தவறா என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், சாதிக்காரன் என்றும், நம் மதத்தை சேர்ந்தவன் என்றும் நம்பி ஒரு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து நமது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்துவதில் பொதுமக்களின் பங்கும் அமைந்துள்ளது, எனவே இதை நாம் தான் தவிற்க வேண்டும், ஒரு சரியான மக்கள் சேவகனுக்கு பொதுமக்களின் வாக்கயளிக்க வேண்டும்!
எனவே பொதுமக்களே தாங்கள் அம்மா,அப்பா என்பதை நினையாமல் ஒரு நல்ல
ஆட்சியமைந்திட் ,தங்களது விலைமதிக்க முடியாத வாக்கு மூலம் நிருபிப்பீராக!

Thanks : http://tamilnanbargal.com

1 comment:

  1. பயனுள்ள பதிவு...

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...