> என் ராஜபாட்டை : மங்காத்தாவைப் பார்த்து பிரம்மித்த தயாநிதி.....!!

.....

.

Sunday, March 13, 2011

மங்காத்தாவைப் பார்த்து பிரம்மித்த தயாநிதி.....!!

அஜீத் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் படம் மங்காத்தா. படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் எடிட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடித்த ஏகன், அசல் என இரண்டு படங்களுமே அவருக்கு படு தோல்வியை கொடுத்ததோடு அவர் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் மங்காத்தா இருக்கும் என வெங்கட் பிரபு சொல்லிவருகிறார்.
அதனால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதுவும் அஜீத் பிறந்தநாளன்று படம் வெளிவர இருப்பதால் அஜீத் ரசிகர்கள் இந்த வருட தீபாவளியை மங்காத்தா ரிலீஸில் இருக்கும் என்றே சொல்லாலாம்.
படத்தில் இன்னொரு முக்கிய நட்சத்திரமும் இருக்கிறார், அவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் லக்‌ஷ்மி ராய், அஞ்சலி, வைபவ் என பல முன்னனி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
படத்தின் எடிட்டிங் முடித்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. எடிட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையிலும் படத்தைப் பார்த்த தயாநிதி அழகிரி பிரம்மித்துப் போனாராம்.
படம் பிராமாதமாக இருப்பதைப் பார்த்து உற்சாகத்தில் `தல தல தான்` என்றும் சொல்லி இருக்கிறார். படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்கிறது மங்காத்தா டீம். யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசை வேளைகளை படு வேகமாக செய்துவருகிறார்.
 
Thanks : tamilcnn.com

2 comments:

  1. சினிமா தவிர்த்து மற்ற பதிவுகள் அதிகம் நீங்கள் எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...