> என் ராஜபாட்டை : வை.கோ.விற்கு எதிராக ஒரு அணியை ம.தி.மு.க.வில் உருவாக்க சதி?

.....

.

Thursday, March 24, 2011

வை.கோ.விற்கு எதிராக ஒரு அணியை ம.தி.மு.க.வில் உருவாக்க சதி?

சென்னை: தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மிக உறுதியாக இருக்கும் வைகோவுக்கு திமுக - அதிமுக எதிர்ப்பாளர்களின் ஆதரவு பெருகி வரும் வேளையில், அவரது கட்சியையே உடைக்கும் சதி ஒன்றும் ரகசியமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுக்க ஒரு கட்டுக்கோப்புடன் உள்ள அரசியல் அமைப்பு மதிமுக. திமுக, அதிமுகவுக்கு அடுத்து, ஒரு தலைமையின் கீழ், பெரிய கோஷ்டிப் பூசல் இல்லாமல் சீரான நிர்வாக அமைப்பைக் கொண்ட கட்சி என்ற பெயர் மதிமுகவுக்கு உண்டு. கட்சியின் மூத்த தலைவர்கள் சில திமுகவுடன் இணைந்த போது கூட, மதிமுகவின் இந்த கட்டுக்கோப்பு சிதையவில்லை.

ஆனால் வைகோவின் இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு முடிவு, கட்சிக்குள்ளேயே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி என்று ஆன பிறகு தேர்தலில் போட்டியிடுவதுதான் தங்கள் இருப்பை வெளிக்காட்டுவதாக அமையும். புறக்கணித்து ஒதுங்கி நின்றால் காணாமல் போகும் அபாயம் உள்ளது என மாவட்டச் செயலாளர்கள் பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.

சில ம.தி.மு.க உறுப்பினர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முனைந்துள்ள ஒரு எம்.எல்.ஏ உட்பட சிலர் இராஜீனாமாச் செய்துமுள்ளனர். இதனையே காரணமாக வைத்து மதிமுகவின் கட்டுக் கோப்பை உடைக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வைகோ முடிவால் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை தனியாக ஒரு கூட்டம் நடத்த வைக்க சிலர் முயன்று வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், தாங்களே உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் இவர்கள் தொடர்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கட்சி அரசியல் என்றால் தேர்தல் தான் அதன் உயிர்நாடி என்பதே என்பதை வை.கோ.வும் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அல்லது எதிர்வரும் நான்கு ஆண்டுகளிற்குள் ம.தி.மு.க அதளபாதாலளத்திற்குள் விழுந்து விடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நகர்வுகள் வைகோவுக்கும் தெரியும். எனினும் “என்ன நடந்தாலும் கவலையில்லை. பதவி, பலனை மட்டுமே பெரிதாக நினைப்பவர்களை வைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைத்த எதுவும் கைகூடாது. தேர்தலுக்குத் தேர்தல், இவர்களின் பதவிப் பசியை போக்க திமுக அல்லது அதிமுகவிடம் கையேந்தும் நிலைதான் கடைசி வரை தொடரும். இன்றைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாகவும் திகழ்வதுதான் எனது லட்சியம் என்று தன்னிடம் சமரசம் பேச வந்த திராவிட இயக்க தலைவர் ஒருவரிடம் நிதானமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்துள்ளார் வைகோ.

இதேவேளை தேர்தலில் தங்களுடன் கூட்டுச் சேருமாறு பா.ஜ.க கூட ம.தி.மு.மவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. வை.கோ. ஏதோ ஒரு விதத்தில் தொண்டர்களிற்கு பதில்சொல்ல வேண்டிய நிலையை மேற்காட்டிய விடயங்கள் ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவே இருந்து வரும் கலைஞர் கருனாநிதி “விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக” என்று நக்கல் கலந்த தமிழில் வை.கோ.விற்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பிலும் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்துவது போல “வரிப்புலி வரிசையே வருக” என வை.கோ.வின் ஈழத்தமிழர்கள் மீதான பாசத்தை மறைமுகமாக கிண்டல் பண்ணியுள்ளார்.

Thanks :http://www.sankathi.com

1 comment:

  1. பாவம்ங்க அவர்...
    தமிழின தலைவரின் நக்கல்
    ரொம்பவே அதிகம் ...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...