அணுமின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் |
ஜப்பானில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த மிகக் கடுமையான நிலநடுக்கத்தினால் சேதமடைந்திருந்த அந்நாட்டின் அணு மின் நிலையம் ஒன்றில் மிகப் பெரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் கட்டிடம் ஒன்றின் சுவர்களும் மேற்கூரையும் வெடித்துச் சிதறுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
அந்தக் கட்டிடத்தின் உலோகக் கூடு மட்டும்தான் தற்போது நின்று கொண்டிருக்கிறது.
வெடிப்புக்குள்ளான அந்தக் கட்டிடத்தில்தான் அணு உலை இருந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் அவ்விடத்தில் வேலைசெய்தவர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தால் அணு உலைக்கு பெரிய சேதம் ஏதும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று ஜப்பானின் அணுப் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து, செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த இந்த அணுமின் நிலையத்தில், அணு உலையின் வெப்பத்தை தணிப்பதற்கான இயந்திரக் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதால், அணு உலை ஓர் அளவுக்கு உருகிவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.
நன்றி : BBC
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்