> என் ராஜபாட்டை : 49 "O" என்றால் என்ன ?

.....

.

Tuesday, April 12, 2011

49 "O" என்றால் என்ன ?

எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு. 
இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும்.

ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.
ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். "எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை," என்று சொல்லுகிறார்கள்.
அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
அதுதான் 49 ஓ.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.
ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.
ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
ஓ' போடு கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.
3. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

5 comments:

  1. நல்ல விளக்கம்.. நீங்க கட்சி சார்பற்றவர் போல.. குட்

    ReplyDelete
  2. இதன் மூலம் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கவும் முடியும். முடிவில் ஜெயிக்கும் வேட்பாளரின் ஒட்டு வித்தியாசத்தை விட 49 O அதிகமாக பதிவாகி இருந்தால் அந்த தொகுதியில் மறு தேர்தல் அறிவிக்கப்படும், தற்போது போட்டியிட்ட யாரும் மறு தேர்தலில் போட்டியிட முடியாது & இனி எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது

    ReplyDelete
  3. //இதன் மூலம் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கவும் முடியும். முடிவில் ஜெயிக்கும் வேட்பாளரின் ஒட்டு வித்தியாசத்தை விட 49 O அதிகமாக பதிவாகி இருந்தால் அந்த தொகுதியில் மறு தேர்தல் அறிவிக்கப்படும், தற்போது போட்டியிட்ட யாரும் மறு தேர்தலில் போட்டியிட முடியாது & இனி எந்த தேர்தலிலும் போட்டியிட //


    no, this is just a rumor.. there isnt any such clause in 49O.
    even if 49O gets 51 votes in a constituency where there are 100 votes, the one who gets more in that 49 will be declared winner.

    ReplyDelete
  4. அட்டகாசமா விளக்கி இருக்கீங்க மக்கா....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...