பிரபல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வில்லன் நடிகர் ராமி ரெட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 52. சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு காரணமாக அவர் மரணத்தைத் தழுவினார். பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றவர் ராமி ரெட்டி. இந்தி மற்றும் உருதுபர் பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் அங்குசம் பட வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் பிரதான வில்லனாக வந்த அவர் பேசும் 'ஸ்பாட் வச்சிடவா' வசனம் மிகப் பிரபலம். படத்தில் அவர் கேரக்டர் பெயரே ஸ்பாட் நானாதான். தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராமி ரெட்டி ஹைதராபாதில் இன்று காலமானார். அவருக்கு வயது 52.
கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த ராமி ரெட்டி செகந்திராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
"ராமி ரெட்டியின் திடீர் மறைவு திரைத்துறைக்கு பெரிய இழப்பு. அவர் ஒரு சிறந்த நடிகர்" என நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தெரிவித்தார். இந்தி நடிகர் சுனில் ஷெட்டி கூறுகையில், "மரணத்தை தழுவும் வயதல்ல ராமி ரெட்டிக்கு. இந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை. எனது படங்களில் அவர் தொடர்ந்து நடித்தவர். நல்ல நண்பர்", என்றார்.
Thanks : http://tamilnews.ebest.in
Tweet |
திறமையான நடிகர் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஉண்மையிலேயே அவர் வித்தியாசமான வில்லன்தான். அவரது மரணத்துக்கு வருத்தங்கள்.
ReplyDeleteஅம்மன் திரைப்படத்தில் பெரும் புகழ் பெற்ற நடிகர். ஆத்மா சாந்தி அடையட்டும்.
ReplyDelete