> என் ராஜபாட்டை : மில்டன் கவிதைகள்

.....

.

Thursday, April 21, 2011

மில்டன் கவிதைகள்

இவ்வளவு வெறுமையாகவும்
இவ்வளவு முழுமையாகவும்
ஒரே சமயத்தில் உணர்வது
காதலில் மட்டுமே சாத்தியம்

===============================================
எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது
எவ்வளவு கூட்டமாய்
பெண்கள் போனாலும்
எப்படி இவ்வளவு எளிதாக
உன்னை அடையாளம் கண்டுகொள்ள
முடிகிறதென்று.
====================================================

நெருங்கி வந்தால்
விலகி ஊடுகிறாய்
முத்தம் கேட்டால்
முகத்தை திருப்பிக் கொள்கிறாய்
அணைக்க முற்பட்டால்
பிடித்துத் தள்ளுகிறாய்
முரட்டுத்தனமாக சாதித்துக் கொண்டாலோ
சிரித்துக் கொண்டே
கண்மூடி நெஞ்சில் சாய்கிறாய்.
ம்..
காத்லின் வழிமுறைகள்
ஒன்றும் புரியவில்லை.

===================================================

உதடுகள்  பேசிக்கொள்வதும்
கண்கள் சந்தித்துக்கொள்வதும்
உலகறியும்

கண்கள்  பேசிக்கொள்வதும்
உதடுகள் சந்தித்துக்கொள்வதும்
காதல் மட்டுமே அறியும்

=====================================
Thanks :எஸ்.டி. விஜய் மில்டன்

2 comments:

  1. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
    கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

    http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...