> என் ராஜபாட்டை : வாசித்ததில் பிடித்த ஹைகூகள்

.....

.

Wednesday, April 20, 2011

வாசித்ததில் பிடித்த ஹைகூகள்    மூட்டை தூக்கிகொள்ள
முன்பயிற்சி தருகின்றன
நர்சரி பள்ளிகள் !

================================================


ரொம்ப பசிக்கிறது
எப்போது சாப்பிடுவான்
எஜமானன் ?

வாசலில் நாய்..!

======================================================

“உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் “
எழுதத் தொடங்கினால்
முடிய மறுக்கிறது வரிகள்
உன்னை நான் நேசிக்கிறேனா?
இல்லை, எழுதி எழுதி
இந்தப் பேனாவே உன்னை நேசிக்கிறதா?

=======================================================
சில நிமிடம் கழித்துதான் போயேன்
அதுவரையாவது
காதலித்துக் கொள்ளட்டும்,
கோவில் வாசலில் அருகருகே கிடக்கும்
நம் செருப்புகள்.


குழந்தையைக்
காப்பகத்தில்
விட்டனர் பெற்றோர்..
பெற்றொரை
முதியோர் இல்லத்தில்
சேர்த்தான் மகன்.


சோதித்த மருத்துவர்
அதிர்ந்தே போனார்..
அவர் ஸ்டெதாஸ்கோப்பில்
கேட்டது
உன் பெயர்.
===============================================

எத்தனை புதிய வார்த்தைகள்!!
இலக்கியத்தில் இதெல்லாம் உண்டோ ?

குழாயடி சண்டை !

============================================4 comments:

 1. இது படிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்....

  அருமையான தொகுப்பு..

  ReplyDelete
 2. எல்லாமே அருமையான ரசனைதான்

  ReplyDelete
 3. இதெல்லம் ஹைகூகள் இல்லீங்க. கவுஜன்னு வச்சுக்கலாம்.

  -------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...