2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கேப்படன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது.
சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கேப்படன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்று நடிந்திருந்தவர் கலைஞர் செல்வகுமார்.
இதுவரை காலமும் தமிழகத்து தொலைக்காட்சி நிகழ்சிகளையே ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாக்கி வந்த நிலையில் முதன்முறையாக ஈழத்தமிழர் நிகழ்சியொன்றை தமிழகத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றமை இதுவே முதன்முறையென்பது இங்கு குறிப்பிடதக்கது.
Tweet |
நல்லது நடக்கட்டும் ,.,..
ReplyDelete