நாகார்ஜுனாவின் ரகடா, மகேஷ்பாபுவின் கலேஜா இரண்டு படங்களையும் தமிழில் டப் செய்து வெளியிடப் போகிறது பத்ரகாளி பிலிம்ஸ் மற்றும் குருபிரம்மா ஆர்ட்ஸ். முறையே வம்பு, பத்ரா என்று பெயரிட்டிருக்கிறார்கள் இப்படங்களுக்கு. இதுபோக பல வருடங்களுக்கு முன் வெளிவந்து பட்டையை கிளப்பிய பாட்ஷா படத்தையும் இந்தியில் டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். இந்த அரும்பெரும் பணியை செய்ய முன் வந்திருக்கிறது பத்ரகாளி பிலிம்ஸ்.
இந்த பாட்ஷா என்ற வெற்றி உருண்டையைதான் இன்றும் பல ஹீரோக்கள் துண்டு துண்டு கோலிக் குண்டுகளாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பாட்ஷாவுக்குள் இருக்கிற ஃபயர் எத்தனை முறை பார்த்தாலும் பற்றிக் கொள்கிற அளவுக்கு அனல் குறையாமல் இருக்கிறது. தெலுங்கு, கன்னட மொழிகளில் நேரடியாகவும், டப்பிங் செய்தும் வெளியிடப்பட்ட இந்த பாட்ஷா இப்போது முதல் முறையாக இந்தியில் டப் செய்யப்படுகிறது.
ஆனால் பழைய பாட்ஷாவை இன்னும் மெருகேற்றியிருக்கிறார்களாம். எப்படி? டி ஐ மற்றும் எபெஃக்ட்ஸ் போன்ற இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்களாம். இந்தி பாட்ஷாவுக்காக தனியாக ஒருமுறை பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப் போகிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் சம்மதித்திருக்கிறார் ரஜினி!
-தமிழ் சினிமா
Tweet |
thalaivar padam eppa entha mozhiyila parthalum kalakkalo kalakkal..
ReplyDeleteஹிந்தியிலும் கலக்கட்டும்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
// பாட்ஷா என்ற வெற்றி உருண்டையைதான் இன்றும் பல ஹீரோக்கள் துண்டு துண்டு கோலிக் குண்டுகளாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். //
ReplyDeleteஹா ஹா ஹா..