> என் ராஜபாட்டை : வடிவேலு ஒரு சாக்கடை – டைரக்டர் அமீர் விளாசல்!

.....

.

Saturday, April 23, 2011

வடிவேலு ஒரு சாக்கடை – டைரக்டர் அமீர் விளாசல்!



வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தை பற்றியும் கேப்டன் குறித்த அவரது விளாசல் பற்றியும் முதன் முறையாக ஒரு நடுநிலையான சினிமாக்காரர் வாய் திறந்திருக்கிறார். அவர் அமீர்! இந்த வார ஆனந்த விகடன் இதழில் அமீர் தந்திருக்கும் பேட்டி செம சூடு…
 
இதோ பேட்டியிலிருந்து ஒரு பகுதி மட்டும்- வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படி பார்க்கிறீர்கள்? சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது.
 
விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு.
 
விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?
 
Thanks : kingtamil

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...