> என் ராஜபாட்டை : காணாமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது.

.....

.

Saturday, April 9, 2011

காணாமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது.

கடந்த வாரம், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் காணாமல் போனதால், அந்தப் பகுதி பதற்றமாக இருந்தது.  இந்நிலையில் இன்று இலங்கை கடற்கரையில் காணாமல் போனவர்களில் ஒருவரான விக்டஸ், த/பெ சேவியர். வயது 41 என்பவரின் உடல், கரை ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  மேலும் மூன்று உடல்களும் ஒதுங்கியிருந்தாலும், அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இந்தியா இலங்கை இடையே, கிரிக்கேட் போட்டி நடந்து, அந்த போட்டியில் இலங்கை எப்போது தோற்றாலும், அப்போது கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் மோதி சேதப்படுத்துவது வழக்கம் என்று கூறுகிறார்கள்.  இதைப் போலவே, உலகக் கோப்பை போட்டியில் இலங்கை தோற்றதை ஒட்டியே இந்தத் தாக்குதலும் நடந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
ஏப்ரல் 5 அன்று, சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சோனியா, இந்திய மீனவர்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று பேசிய இரண்டே நாட்களில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது குறிபிடத் தக்கது.

Thanks : http://www.savukku.net

1 comment:

  1. இந்த நிலை என்றுதான் மாறுமோ?
    ஒவ்வொரு முறையும் வருத்தப்படுவதே நம் வாடிக்கை ஆகிவிட்டது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...